என் மலர்
நீங்கள் தேடியது "government schools"
- கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
- மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.
இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
- அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
- மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
திருச்சி:
அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்கும் இந்த காலகட்டத்தில் மேற்படிப்பை தொடர கல்லூரிகளில் அரசு கல்லூரி கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்து தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.
ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அரசு ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருக்கிறது.
அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான புது முயற்சியாக கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை முதலில் பள்ளிகளில் நடைபெற்றது.
அதன் பிறகு வட்டார அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ச்சியாக மாவட்டம், மாநிலம் என ஒவ்வொரு நிலைக்கும் வெற்றி பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
இந்த கலைத்திருவிழாவை பொறுத்தவரை மாணவர்கள் தங்களிடம் உள்ள எந்த திறமையாக இருந்தாலும் அதை மேடையில் வெளிப்படுத்தலாம். அதன்படி பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி, இசை, நாடகம், ஊமை நாடகம், நாட்டியம் என மாணவர்கள் விரும்பியவாறு அவர்களின் திறமைகளை போட்டிகளில் காட்டலாம்.
இப்படியாக நடைபெற்ற போட்டிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண,வ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களும் இவ்வளவு விஷயங்களை வைத்திருப்பவர்களா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் தங்களின் தனித்திறமையை வெகுவாகவே மெய்ப்படுத்திருக்கிறார்கள். அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படிப்பு மட்டுமின்றி மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிகளில் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
- பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
- முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
மாமல்லபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 1996- 97ல் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
அவர்களுக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
அனைவரும் ஒன்று கூடி குழு போட்டோ எடுத்த பின்னர் பிரியாவிடை பெற்றனர். சரவணன், ஜலால் சலீம், செல்வம், தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின், பாம்பினோ சீனு உள்ளிட்டோர் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
- பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் கே.வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களும் உள்ளது.
இங்கு 10 ஆண்டுகளாக இரவு காவலரை நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.
எனவே இப்பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
பள்ளி துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன்.
புதுச்சேரி:
புதுவை மடுகரை எம்.ஆர்.சுப்புராயக்கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளியின் 70-ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.
துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. இதற்காகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து தரமான கல்வியை கொடுப்பதன் மூலம் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவர்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானிடம் புதுவை அரசின் 121 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன். நிச்சயம் அதற்கு அனுமதி கிடைக்கும்.
2 முறை மத்திய மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். அவரும் ஒப்புதல் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் வளர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.
உடுமலை :
புதிய கல்வியாண்டு 2023 - 24 முதல் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஏற்கனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளில் இத்திட்டம் சோதனை முயற்சியாக நடப்பு கல்வியாண்டில் செயல்படுகிறது.
இதன் அடிப்படையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் அவ்வப்போது சமர்ப்பிக்க கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வருகிறது.தற்போது கூடுதலாக பள்ளிகளில் சமையலறை கட்டமைப்புக்கு புதிதாக வண்ணம் பூசியும், சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:- புதிய கல்வியாண்டில் இந்த திட்டம் எந்த முறையில் செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சமையலறைகள் புதுப்பிக்கப்பட்டும் இடவசதி இல்லாத பள்ளிகள் குறித்தும் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரு சத்துணவு மையத்தில் காலை உணவு செய்யப்படுமா அல்லது அந்தந்த பள்ளிகளில் மையம் செயல்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.மே மாதம் திட்டத்துக்கான முழு ஏற்பாடுகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
- பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தாராபுரம்:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு வரும் ஜூன் மாதம் 6 -ந்தேதி முதல் செயல்பட உள்ளது.இக்குழுவில் தலைமையாசிரியர், உயர்வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், கருத்தாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இடம்பெறவுள்ளனர்.
உடுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் குழு வாயிலாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.உயர்கல்விக்கு தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் இக்குழுவின் முக்கிய பணியாகும். இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டும் வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
- நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும்.
திருப்பூர் :
பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும். இதனால் அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணி பொதுநிதியை கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நுழைவுவாசல், சுற்றுச்சுவர் மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டிடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நூலகம், ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு தொடங்கும்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணி தொடங்கி நடக்கிறது.
- அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழுதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
- ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கட்டாயமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்று வதற்கான நடவடிக்கைகளை புதுவை கல்வித்துறை எடுத்து வருகின்றது.
மத்திய அரசு அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்துள்ளது.
சி.பி.எஸ்.இ கல்விக் கூடங்களுக்கு மத்திய கல்வி வாரியம் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டி டங்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.
ஆனால் புதுவை அரசு பள்ளிகளில் எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் புதுவையில் உள்ள 127 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதிலிருந்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த உத்தரவு இது என்பது தெரிகிறது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதை நான் எதிர்க்கவில்லை. படிப்படியாக செயல்படுத்துங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.
தற்பொழுது புதுவை கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மாணவர்களிடம் மேலும் பதட்டத்தை அதிகரிக்கும். ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.
முதலியார் பேட்டையில் உள்ள அரசு பள்ளி தற்போது தான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் உயர்த்த ப்பட்டதே தவிர உள்கட்ட மைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளியை சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழு தும் நான் அனுமதிக்க மாட்டேன்.
சி.பி.எஸ்.இ. பாடத்தி ட்டத்திலேயே தொடரும் என்றால் பள்ளி திறக்கும் நாளில் 7 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் அனுமதிக்காமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.
- தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு பள்ளியில் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும்போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும். ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பல்லடம் :
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.