search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt College"

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    • வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    • 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அரசு திருமகள் ஆலை கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    இதில் கணிதம், பொருளியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு கல்லூரியிலேயே வருகிற 10 மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படும்.நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி சேர்க்கை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூர் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. முதல்வர் மணிமேகலா தேவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் பங்கேற்று கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் இணை பேராசிரியர்கள் கணேசுவரி, அந்தோணி செல்வராஜ், மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
    • அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவுரவ பேராசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறோம்.

    தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும், அடுத்த கட்டமாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உடையார்பாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தேசிய ஓய்வூதியர்கள் தின விழா

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய ஓய்வூதியர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடேசன், சுந்தரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உதவி சித்த மருத்துவ அலுவலர் சையதுகரீம், இந்தியன் வங்கி கிளை மேலாளர் வெங்கடேஷ், நல்லாசிரியர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரியை உடையார்பாளையத்திற்கு மாற்ற வேண்டும். உடையார்பாளையத்தில் இயங்கி வந்த கல்வி மாவட்டத்தை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும். புதிதாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படுவதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
    • புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலங்குளம்- தென்காசி சாலையில் கழுநீர்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 ஏக்கர் நிலத்தில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்று, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் சிவபத்மநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டிட பணிகளை தரமாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

    கீழப்பாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் காவேரி சீனிதுரை, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லத்துரை, அன்பழகன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலர் சீனிதுரை, கழுநீர்குளம் ஊராட்சித் தலைவர் முருகன், நகர செயலர்கள் ஆலங்குளம் நெல்சன், கீழப்பாவூர் ஜெகதீசன், தொழிலதிபர் மணிகண்டன் பொறி யாளர்கள் சரத்குமார், நல்லசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 16 -வது பட்டமளிப்பு விழா நடந்தது
    • சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 16 -வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் காசிராஜன் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெற உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமை படும்படியாக நடந்து கொள்ள வேண்டும் மத பேதங்களை மறந்து தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    இதில் பல்வேறு துறைகளில் பயின்ற 136 கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் காசிராஜன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அரசு கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்
    • மாநில அளவில் கராத்தே போட்டி

    கரூர்:

    கோவையில் கராத்தே தமிழ்நாடு சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் குணா கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரியின் முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பாராட்டினர்.

    • 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.
    • 3-ம் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22ந் தேதி நடக்கிறது. கல்லூரியில் உள்ள 340 இடங்களில் 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.

    3-ம் கட்டமாக வரும் 22-ந் தேதி நடக்கும் கலந்தாய்வில் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே 'சீட்' நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, 26ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில், விண்ணப்பம் உள்ள மற்றும் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம். காலி இடங்களை பொறுத்தும் மதிப்பெண் அடிப்படையிலும் அனைவருக்கும் சேர்க்கை வழங்கப்படும். திருப்பூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என முதல்வர் நசீம் ஜான் தெரிவித்தார்.

    • 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.
    • திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையோன சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் 120 மாணவிகள், 110 மாணவர்கள் உள்பட 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற18 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜகோபால், அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனியன், ஆசிரியர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மருதை நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் வரும் 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    ×