என் மலர்
நீங்கள் தேடியது "govt school"
- குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
- பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.
கே.பி.அக்ரஹாரா:
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை:
தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.
இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாா்ச் மாதமே சோ்க்கை தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது.
தொடா்ந்து, வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கையும் கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சோ்க்கை தொடங்கி இதுவரை அரசுப் பள்ளிகளில் 41,931 மாணவா்கள் சோ்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் கடந்த ஆண்டு சோ்க்கை தொடங்கிய முதல் 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவா்கள் வரை சோ்க்கப்பட்டனா். ஆனால், நடப்பாண்டு சோ்க்கை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவா் சோ்க்கையை முன்வைத்து அரசுப் பள்ளி நலத் திட்டங்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான பணிகளை மேற் கொள்ளவும், 5 லட்சம் சோ்க்கையை இலக்காகக் கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
- சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.
சுரண்டை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கால்வாய்களில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.இதனால் பள்ளி தொடர்ந்து ஒரு வாரம் வரை விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் பள்ளியில் தரைதளத்தை உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மண் நிரப்பி தரை தளத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.தொடர்ந்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார்.ஆய்வின் போது சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து,ஞானதீபம் மனோகர,தேவேந்திரன்,பிரபாகர், மகேந்திரன்,பிரபு, அரவிந்த் கந்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.
- அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கொடி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சிவாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் கட்டப்பட உள்ள இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி,மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காகித பூ, கப்பல், பல்வேறு வகையான பொம்மைகள் களி மண்ணால் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
- 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
அவிநாசி :
அரசுப் பள்ளியில் களிமண் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவா்களுக்கு காகித வடிவமைப்பு, களிமண்ணால் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி ஆகியவை திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, சென்னை எழிலன் நண்பா்கள் மற்றும் களிமண் விரல்கள் கூட்டமைப்பு, நிலாப்பள்ளி அமைப்பு ஆகியவை சாா்பில் கலை பழகுதல் முகாம் அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காகித பூ, கப்பல், பல்வேறு வகையான தொப்பிகள், மயில், கொக்கு டம்ளா் உள்ளிட்ட காகித வடிவமைப்பு, ஓவியங்கள் வரைதல், களி மண்ணால் பொம்மைகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நினைவாற்றல் உருவாக்கும் திறன், மனதை ஒரு நிலைப்படுத்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
- அரசு பள்ளியில் கராத்தே, சிலம்பம் தொடக்க விழா நடந்தது
- மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாண வ, மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பக்கலை கற்றுகொடுப்ப தற்கான தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு, பேரூராட்சித்தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ஹாஜி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சரோஜாதேவி, தி.மு.க. ஒன் றிய பிரதிநிதி இப்ராகிம், பேரூராட்சி கவுன்சிலர் லெட்சுமணன், துப் புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உட்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.
- இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
மதுக்கூர்:
மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் என அனைத்து வகை பாடங்களுக்கான பல்வகை கண்காட்சி அரங்குகள் அந்தந்த பாட ஆசிரியர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்த பல்வகை கண்காட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, தானியங்கி சாதனம் பற்றியும், தமிழில் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றி பல்வேறு பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கோவிந்தராஜ், காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மைதிலி ஆகிய பட்டதாரி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏனாதி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இதில் அத்திவெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகவேலன் உட்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாணவ- மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- வாசிப்பு திறன் அதிகரிக்க ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை அரசு நூலகத்திற்கு சென்று வாசிக்கவேண்டும்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் நூலக வாசிப்பு விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி ராஜதுரை தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, நூலகர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை அம்மாசி அனைவரையும் வரவேற்றார்.
மாணவ- மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ- மாணவியர்கள் அனைவருக்கும் நாளிதழ்கள் வழங்கப்பட்டு அனைவரையும் வாசிக்க வைத்தனர். வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை அரசு நூலகத்திற்கு சென்று வாசிக்கவேண்டும் எனவும், அப்போதுதான் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. உதவி தலைமையாசிரியை ராணி, இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் பொன்வள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது
- மாணவர்கள் கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம், கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்
ஆலங்குளம்:
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அந்தந்த பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்.இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
- மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.
புதுக்கோட்டை
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை கடந்த 28-ந்தேதி திருச்சியை அடுத்த காட்டூர் பாக்காக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளுர் நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொடங்கப்பட்டது.
விழாவிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு வானவில் மன்றத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள், அறிவியல் சோதனை முறைகளைப் பற்றி அறிவியல் ஆசிரியை ஜெயஜோதி மணி விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.
எட்டாம் வகுப்பு மாணவன் கலைவாணன் மினி மிக்ஸி செயல்படும் விதம் பற்றியும், ஆறாம் வகுப்பு மாணவி பிருந்தா முட்டையிலிருந்து அழுத்தத்திற்கான நோக்கத்தையும் தெளிவாக செய்து காட்டினார். விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன், மனோஜ் குமார், நிலோபர் நிஷா, சங்கீதா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கப்பட்டுள்ளது
- வட்டார கல்வி அலுவலர் பங்கேற்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு தொடங்கப்பட்ட வானவில் மன்றம் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தில் சாதனை புரிய வெகுவாக பயன்படும் என்றார். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை, கணித நுட்பங்கள் பற்றியும், கணித புதிர்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் எளிய உபகரணங்களுடன் அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆசிரியைகள் ஜெயப்பிரியா, வே.கவிதா விழாவை ஒருங்கிணைந்தனர்.முன்னதாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஜா.ஹேமலதா வரவேற்றார். முடிவில் ஆசிரியை வே.பவானி நன்றி தெரிவித்தார்.
- அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.
உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.