என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gramasabha Meeting"
- அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- கிராமசபை கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.
'எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்' என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாக கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற மைய கருத்தின்படி நடத்தப்பட உள்ளது.
'எல்லார்க்கும் எல்லாம்' எனும் மைய கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக திட்டசெயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்கிறார். அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
கிராமசபை கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில், பொதுவான விவாத பொருட்களாக ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
- 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.
கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்துவிவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் ,2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
- மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும்.
உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஓன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் சிவலூரில் நடைபெற்றது. செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்று பேசுகையில், மரங்களை வளர்ப்பது மனிதனின் பொறுப்பு, ஒவ்வொரு மனிதனும் ஒரு மரம் வளர்க்க வேண்டும், மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும் என்றார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளை அவர் வழங்கினார்.
கூட்டத்தில் செட்டியாபத்து ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், சிவலூர் ஊர்தலைவர் முருகன், வேளாண்மைத்துறை அலுவலர் அஜித்குமார், பற்றாளர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வரவு செலவினங்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.
- கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
- தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோவிந்தபேரி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை கலெக்டர் கவிதா பங்கேற்றார்.
மேலும் ஊராட்சி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஊராட்சி செயலர் மூக்காண்டி, துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரிதுரை, சிங்கக்குட்டி, வெள்ளத்துரை, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதேபோல் கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். இதில் துணைத் தலைவர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரவணசமுத்திரம் ஊராட்சியில் முகமது உசேன், தெற்கு கடையம் ஊராட்சியில் முத்துலெட்சுமி, சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரவிச்சந்திரன், ஏ.பி. நாடானூர் ஊராட்சியில் அழகுதுரை, பொட்டல்புதூர் ஊராட்சியில் கணேசன், துப்பாக்குடி ஊராட்சியில் செண்பகவல்லி ஜெகநாதன், பாப்பான்குளம் ஊராட்சியில் முருகன், கீழாம்பூர் ஊராட்சியில் மாரிசுப்பு, மேலாம்பூர் ஊராட்சியில் குயிலி லெட்சுமணன், திருமலையப்பபுரம் ஊராட்சியில் மாரியப்பன், மடத்தூர் ஊராட்சியில் முத்தமிழ் செல்வி ரஞ்சித் , அஞ்சாங்கட்டளை ஊராட்சியில் முப்புடாதி பெரியசாமி, மந்தியூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் தலைமையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல் அதனை புறக்கணித்தார்.
- ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் கோவில்பாண்டி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.
கிராமத்தில் பசுமை வளங்களை அதிகரிக்க ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் குமுதா, முருகேஷ்வரி, வேலம்மாள், மேகனா செல்வி மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.
- கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
- பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.
குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெச்சிலா புரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முன்னிலை வகித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழை ப்பாளராக கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது;-
இக்கிரமம் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலவச கழிப்பிடம், பேவர் பிளாக் சாலை, குளம் தூர் வார்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.64 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-வது நிதி குழு திட்டம் படி ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் அடிப்படையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் உள்ள 15 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட உள்ளது முதல்-அமைச்சருடைய நோக்கம் எல்லோருக்கும் வீடு கட்டி தர வேண்டியது என்பது தான்.இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு குறித்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரி விக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்க வேல், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், மாரிமுத்து, சமூகவலைதள பொருப்பாளர் ஸ்ரீதர் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்