என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gunshot"
- ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களுரு:
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மாவள்ளி தாலுகா சிக்முலகுடு பகுதியை சேர்நதவர் ஷீட்டர் முத்துராஜ் என்கிற டக்கா. இவர் மீது 3 கொலைகள், 3 கொலை முயற்சி, 2 கொள்ளை வழக்குகள் உள்பட 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கில் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்ய ஹலகுரு பகுதியை சேர்ந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீசாருடன் சென்றார். அப்போது ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர் போலீசாரை மீண்டும் தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார்.
இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி ஷீட்டர் முத்துராஜை காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் அடைந்த அவரை மாண்டியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஹலகுரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
- நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
- வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் இயக்கப்படுவதால் கோவை மாவட்டத்தை சுற்றி இருக்க கூடிய அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவை விமான நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றன.
நேற்று மதியம் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர்.
இந்த விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். ஒவ்வொருவராக தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் கைப்பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தது.
இதை பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு இருந்த துப்பாக்கி குண்டு மற்றும் பெட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அந்த வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சிங் (வயது42) என்பதும், காண்டிராக்ட் மற்றும் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவரது சகோதரர் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை பார்க்க ராஜஸ்தானில் இருந்து கோவை வந்ததும், அவரை பார்த்து விட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப புறப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி குண்டு பையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது, அது தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை என போலீசாரிடம் பதில் அளித்து கொண்டிருந்தார்.
போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது பையில் துப்பாக்கி குண்டு வந்தது எப்படி? இவரே எடுத்து வந்து விட்டு போலீசில் சிக்கியதால் மாற்றி பதில் அளிக்கிறாரா? அல்லது வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதற்காக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
- பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள கஸ்தூரி நார் எல்லைப்பகுதியில் இன்று இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு பாதுகாப்பு படையினரை நோக்கி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் ஒருவனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்டார் எல்லைக்கோட்டு பகுதி வழியாக நேற்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய படையினர் சுட்டுக்கொன்றது நினைவிருக்கலாம். #Baramulla #Infiltrationbid
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று விசாரணைக்காக பலர் வந்திருந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி சாட்சிகளை பதிவு செய்தனர். இன்று 2-வது நாளாக காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வழக்குகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ரத்தக் கறை படிந்த உடைகள், உடலில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தடயங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார், தாங்கள் சேகரித்த தடயங்களை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சங்கர் முன்னிலையில் தலைமை எழுத்தரிடம் ஒப்படைத்தனர்.
இந்த தடயங்கள் அனைத்தும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. இதேபோல துப்பாக்கி சூடு தொடர்பான கள ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், துப்பாக்கிக்கள் போன்றவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. #Thoothukudi #Sterlite
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் 18 தோட்டாக்கள் சிதறிகிடந்ததாக தெரிவித்த போலீசார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். #secondPhilippinemayor #Philippinemayor #FerdinandBote
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்