search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Peyarchi"

    • குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம்.

    குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 2023 குருப்பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும் என்பதை பார்க்கலாம்.

    சரியான வரன் கிடைக்காமல் , வரன் கிடைத்தாலும் பல காரணங்களால் திருமணம் தடைபட்டு விரக்தியில் இருக்கும் இந்த 7 ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு கட்டாயம் சிறப்பாக திருமணம் நடைபெற போகிறது.

    மேஷ ராசி – ஜென்ம குரு

    மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத்தடை கொடுத்து வந்த நிலையில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பிறகு திருமண தடை நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட திருமண தடையை குரு பகவான் விலக்கி கொடுத்து வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து தருவார்.

    மிதுன ராசி – லாப குரு

    அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும்.

    சிம்ம ராசி – பாக்ய குரு

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.

    துலாம் ராசி – களத்திர குரு

    குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும்.

    தனுசு ராசி – பூர்வ புண்ய குரு

    ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.

    கும்ப ராசி – தைரிய குரு

    கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது.

    மீன ராசி - குடும்ப குரு

    2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/rasipalan

    • ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

    இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு. ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். மணிவிழா, சதாபிஷேகம் மற்றும் ஆயுள்ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமங்களை நடத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட யாக பூஜைகள் மற்றும் திருமணங்களை செய்துகொண்டனர்.

    நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நவக்கிரகங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
    • குரு பகவானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், மதனகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    குருபெயர்ச்சியை முன்னிட்டு மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை, அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

    குரு பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    அலங்காநல்லூர் அய்யப்பன் கோவிலின் உள் பிரகாரத்தில் குருபகவான் சன்னதி உள்ளது. இங்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க குருபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    • தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீயோகா ஞான தட்சண மூர்த்தி கோவிலில் சிற்ப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம் ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி அடையும் நேரத்தில் குருபகவான் சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் கோவிலில் நடைபெற்ற பரிகார மகா யாகத்தில் பங்கேற்றனர். குருபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
    • இதனையொட்டி நேற்று இரவு 8.15மணிக்கு கணபதி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று இரவு 8.15மணிக்கு கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தியான குரு பகவானுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் சுப்பிரமணியன் அய்யர், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர். விழாவில் மகாராஜா, மாரியப்பன், பிரேம், மாரிஸ்வரன், கதிர்காமன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, செல்வராணி, முத்துலட்சுமி, மாரியம்மாள், சந்திரா, மாரித்தாய் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாததரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

    • தெட்சணாமூர்த்திக்கு நட்சத்திர தீபாராதனை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    ஆண்டுதோறும் குருபகவான் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அந்த தினம் குருபெயர்ச்சி என அழைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர், தெட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த 16-ந்தேதி சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இந்தாண்டு நேற்று இரவு 11.29 மணிக்கு குரு பகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார். முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அங்கி அணிந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் தெட்சணாமூர்த்தி அருள்பாலித்தார்.

    மூலவர் எதிரே தல விருட்சமான ஆலமரத்தடியில் முனிவர்கள் தனந்தகுமாரர், தனநந்தர், தனாதனர், சனகர் ஆகியோருக்கு கார்த்திகை பெண்கள் முன்னிலையில் மந்திரம் உபதேசிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெற்றது.

    இரவு 11.29 மணிக்கு குரு பெயர்ச்சியானதும் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு ஏழு முக தீபாராதனை நிகழ்ச்சியும், மூலவர் தெட்சணாமூர்த்திக்கு நட்சத்திர தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வேண்டிய குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரப்ப செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
    • பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

    சோழவந்தான் அருகே வைகைஆறு கரை அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் குருபகவான், பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் உள்ளார். ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

    அதன்படி இதுவரை மீனம் ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று இரவு 11.21 மணி அளவில் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.

    நேற்று இரவு 9 மணி அளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபப்பட்ட, பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். மகாபூர்ணாஹீதி, அர்ச்சகர்கள் புனித நீர்க்குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது.

    இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழு மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலைய துறையினர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

    சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன், போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் நாகராஜ், மணி பிரகாஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

    • குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார்.
    • 1-ந் தேதி லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

    தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது. ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.

    குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவார். அப்போது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.21 மணிக்கு குருபகவான் பிரவேசித்தார். இந்த நிகழ்ச்சியில் வசிஷ்டேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். நேரம், ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. குருப்பெயர்ச்சி விழாவுக்காக திட்டைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.

    • குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார்.
    • குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.

    முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2-வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு சரியாக 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

    இதேபோல தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

    • குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.
    • குருவை கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.

    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல்பவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆசி பெறுவது நல்லது.

    நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். 'குரு' சுபகிரகம் என்தால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாளில் சென்ற வழிபட்டு வரவேண்டும் என்பர். அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும்.

    எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடிவரத் தொடங்கும். இல்லையேல் யார் வழிபடச் செல்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது.
    • 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.

    தேவனாம்ச ரிஷனாம்ச

    குரும் காஞ்சன ஸந்திபம்!

    புத்தி, பூதம் த்ரிலோகேஸம்

    தம் நமாமி ப்ரஹஸ்பதிம்!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வர்) படத்தின் முன்னால் வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. திருமணத் தம்பதியர் ஜோடி விளக்கு ஏற்றுவது நல்லது.

    • ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.
    • குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடலைப் பாருங்கள்....

    ஜென்ம ராமல் வனத்திலே

    சீதையைச் சிறை வைத்ததும்,

    தீதிலா தொரு மூன்றிலே

    துரியோதனன் படை மாண்டதும்

    இன்மை எட்டினில் வாலி

    பட்டமிழந்து போம் படியானதும்

    ஈசனார் ஒரு பத்திலே

    தலையோட்டிலே யிரந்துண்டதும்

    தருமபுத்திரர் நாலிலே

    வனவாசம் அப்படிப் போனதும்

    சத்திய மாமுனி ஆறிலே

    இரு காலிலே தளை பூண்டதும்

    வன்மை யற்றிட ராவணம் முடி

    பனிரெண்டினில் வீழ்ந்ததும்

    மன்னும் மாகுரு சாரி

    மாமனை வாழ்விலா துறமென்பவே!

    இந்தப்பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கின்றது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம்.

    ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். ஆதிபத்யம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்று மனக்குழப்பம் அடைய வேண்டாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்கவும். நேர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    ×