என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gutkha smuggling"
- கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
- சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.
இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
- தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர வதனம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22) ஜெகன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள கடையில் குட்கா, புகையிலை விற்ற மகேந்திர குமாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன்தினம் மதுரை செல்லூர் மற்றும் மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரமேஷ், ஏட்டுகள் சின்னையா, கணேசன் மற்றும் போலீசார் மேல நாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களின் மொபட்டில் வெள்ளை நிற சாக்கு பைகள் வைத்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜோகராம் (வயது35), ஹரீஷ் (26) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் மதுரை லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்று வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 400 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
திருத்தணி:
திருத்தணி அருகே அம்மனேரி பகுதியில் ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஜெயவேலு, திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், பிரகாசம், பாணாவரம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு உதவி கமிஷனர் ஜெயராமனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சொகுசு காரை இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
காரில் 4 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காரில் இருந்த மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ராமசாமி, பூந்தமல்லியைச் சேர்ந்த சதிஷ், திருவேற்காட்டைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத் ஆகிய 3பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 35ஆயிரம் ரொக்கம் மற்றும் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான ராமசாமி பெங்களூரில் இருந்து காரில் குட்கா பொருட்கள் வாங்கி வந்து அதை சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்து வருவது தெரியவந்தது. மேலும் மதுரவாயல் காவல் நிலையத்தில் ராமசாமி மீது கடந்த 2017-ம் ஆண்டு குட்கா கடத்திய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சட்ட விரோதமாக விற்கப்படுவதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் கோவையில் இயங்கிய குட்கா தொழிற்சாலையை போலீசார் கண்டு பிடித்து ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் மாங்காடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மாங்காடு அருகே பரணிபுத்தூரை அடுத்த பெரிய பணிச்சேரியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த ஏஜெண்டு முருகன், ஊழியர்கள் தணிகாசலம், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் குட்கா போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கனகலிங்கம் என்பது தெரியவந்தது.
குடோன் உரிமையாளரான பரணிபுத்தூரை சேர்ந்த புஷ்பகுமாரிடம் கனகலிங்கம் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் குட்காவை மொத்தமாக வாங்கி பதுக்கி பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.
கனகலிங்கம் குட்காவை பதுக்கியது குறித்து குடோன் உரிமையளர் புஷ்பகுமாருக்கு 3 மாதத்துக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அவர் அதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.
கனகலிங்கத்திடம் அதிக வாடகை வாங்கிக் கொண்டு குட்காவை பதுக்க அனுமதித்துள்ளார். இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளர் புஷ்பகுமாரையும் கைது செய்தனர்.
தலைமறைவான மொத்த வியாபாரியான கனகலிங்கம், உடந்தையாக இருந்த அவரது தம்பி தர்மன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாங்காட்டில் உள்ள இந்த குடோனுக்கு கோவையில் இருந்து குட்கா போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews #Gutkha
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்