என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Half Yearly exam"

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • 1 முதல் 5-ம் வகுபு மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    சென்னை:

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது.

    அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று

    பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    • தமிழகத்தில் அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இறைவணக்கத்துடன் தொடக்கம்

    தேர்வு முடிந்து டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் இன்று அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பானது சிறப்பு இறைவணக்கத்துடன் தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகளையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இன்று அவசரம் அவசரமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வரவேண்டி இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    புத்தகங்கள்

    பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் ஏற்கனவே 6 மற்றும் 7-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. அவற்றை நாளை முதல் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேநேரத்தில் அரசின் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செல்வதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இன்று முதலே 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

    • புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    • நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

    சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.
    • மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் வரலாறு காணாத கனமழை ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு.
    • மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவு.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுவதாகளும், ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

    இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும்" என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
    • 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.

    10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;

    டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்

    டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்

    டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்

    டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்

    டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்

    டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல் 

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

    அதன்படி, அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.

    இதைதொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    இந்நிலையில், 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
    • வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.

    அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.

    2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

    இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பள்ளிகள் திறப்பு வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

    அதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    • சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.

    அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.

    2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

    இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில், மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதுதொடர்பான தகவல் இணையத்தில் பரவி வந்தது.

    இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #Sengottaiyan #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேட்டில் நம்பியூர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி அரசு உதவி பெறும் வைர விழா பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

    ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது.


    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #HalfYearlyExam #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் ரத்தாக வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.


    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பரிசீலனை செய்தால் அதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும்.


    டெல்டா மாவட்டங்களில் முழுமையான பாதிப்புள்ளாகிய மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    ×