என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handicapped"

    • பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
    • ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

    அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.

    போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
    • இதற்கான சிறப்பு முகாம்கள் 2-ந் தேதி தொடங்குகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவி த்திறனற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை ஆலிம்கோ என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த சிறப்பு முகாமானது கீழ்கண்டவாறு, வட்டாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 2-ந் தேதி திருப்பத்தூரிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும், 4-ந் தேதி மானாமதுரை யிலும், 5-ந் தேதி திருப்புவ னத்திலும், 6-ந் தேதி இளையான்குடியிலும், 10-ந் தேதி தேவகோட்டையிலும், 11-ந் தேதி கண்ணங்கு டியிலும், 12-ந் தேதி சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கையிலும் நடைபெற உள்ளது.

    இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2, ஆதார் அட்டை அல்லது வயதினை உறுதி செய்யும் ஏதாவது அங்கிகரிக்கப்பட்ட அடையாள சான்று மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச்சான்று அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேசன் கார்டு அல்லது மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை அல்லது இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூகநல உதவித்திட்ட அடையாள அட்டை அல்லது வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை அல்லது மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மிகாமல் வருவாய்த்துறை அலுவலர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட வருமானச்சான்று மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாம் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜதுரை, செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை செயலாளர்கள் லட்சுமணன், கார்த்திகேயன், பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மாதாந்திர உதவித்தொகையை பிரதிமாதம் 7-ந் தேதி வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். 4 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேம்பாட்டுக்கழகத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குடியிருப்பில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மருத்துவ சான்றிதழை சமூகநலத்துறை அலுவலகத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சையெடுத்தனர்.

    • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர்.
    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கடத்தூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர். சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் ஊதியத்தில், கட்டாய வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மாலினி, நிர்வாகிகள் குருசாமி, அழகிரிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் கல்வியினை தடையில்லாமல் தொடர்வதையும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

    திருப்பூர்,

    நடப்பு கல்வியாண்டில், பள்ளி செல்லா மாற்றுத்திறன் மாணவர்களை குடியிருப்பு வாரியாக சென்று கண்டறிந்து, அவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் 3 மாதங்களுக்கு பயிற்சி அளித்து பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் திருப்பூர் உள்பட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தொடர்ந்து30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள், பள்ளியே செல்லாதவர்கள், 8-ம் வகுப்பு முடித்து இடை நிற்பவர்கள் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகளாக கருதப்படுவர்.இம்மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் முறையாக பள்ளியில் சேர்க்கப்படுவதையும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கல்வியினை தடையில்லாமல் தொடர்வதையும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி இறந்தார்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜவேல் (வயது39). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு வேம்பு (30) என்ற மனைவியும், அனுஸ்கா (7) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜவேல் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜவேல் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேம்பு, கழிவறை அருகே சென்று பார்த்தபோது ராஜவேல், அங்கு உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது தெரியவந்தது. இதனால் பதறி போன வேம்பு மற்றும் உறவினர்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ராஜவேலை மீட்டனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கி ராஜவேல் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி லூசியாநகரில் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் அருகே அதேபகுதியை சேர்ந்த முருகன்(35) என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது.

    இரு கைகளும் இல்லாத நிலையில் முருகன் பெட்டிக்கடை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முருகன் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் கடன் நிலுவை தொகை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முருகன் கடையில் பணம் வைத்திருப்பதை அறிந்தே மர்ம நபர் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை 27-ந்தேதி காலை 10.15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். 

    இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    திருமணமான 2 மாதத்தில் மாற்றுத்திறனாளி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் விஷ்ணுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் 2 வருடத்துக்கு முன்பு மயிலம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    சமீப நாட்களாக கந்தசாமி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் செல்வி சுயஉதவி குழுவில் பணம் கடன் பெற்று செலவு செய்துள்ளார். இதனால் கடனும் அதிகமானது. இதுகுறித்து செல்வி கந்தசாமியிடம் கேட்கும் போது, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று கந்தசாமி வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த செல்வி ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஜன்னல் கம்பியில் செல்வி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் இதை அறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்விக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.
    மூன்று சக்கர சைக்கிள் கேட்டு தனக்கு கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி செய்யும்படி உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து நேற்று தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு பொருளுதவி செய்ய கடிதம் எழுதியிருந்த அருள் சகாய ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு அருள் சகாயராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    மாற்றுத்திறனாளியான நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் கடைக்கு சென்று வரமுடியாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தேன்.

    இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினால் அவர் உதவி செய்வார் என்று நினைத்தேன். அதன்படி அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பினேன்.

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் செய்த உதவியால் 3 சக்கர சைக்கிளில் இனிமேல் கடைக்கு செல்ல எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×