என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanged himself"

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை,

    நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 40) கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி கனகா என்கின்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கொத்தூர் அருகே சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கனகா புகார் அளித்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பழனி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பிரசாத் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    நம்பியூர்:

    நம்பியூர் பேரூராட்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). இவர் நம்பியூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவியும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வெளியே வந்த பிரசாத் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் வெள்ளை வேட்டியால் தனக்குத்தானே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் காலை அக்கம் பக்கத்தினர் ஓலை குடிசை கொட்டகையை பார்த்தபோது அங்கு பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவி நதியா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    • 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 31). ஒடிசாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக வேலை செய்து வந்தார். கவர் 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஜானகிராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதைபார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் திமிரி போலீசார் மற்றும் அவரது மனைவி ராசாத்திக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜானகிராமனின் தற்கொலைக்கான 'காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33) மரபட்டறை தச்சு தொழிலாளி. இவர் கடந்த 18ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. பிரியா என்கின்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் ஓசூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரின் மது பழக்கத்தால் விபரீதம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கழிஞ்சூர் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்.ஆட்டோ டிரைவர் இவருடைய மனைவி லட்சுமி (வயது 26) தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    உறவினர்களான இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் போதையில் வீட்டிற்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    நேற்று இரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவரின் மது போதையால் லட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குழந்தைகள் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.

    • தனியே வசித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்த பாலன் மகன் சக்திவேல் (22) என்பவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு பின்பு தனது உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறினார்.

    இதனால் வீட்டை விட்டு தனியே வசித்து வந்த சக்திவேல் நேற்று இரவு வசித்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32).தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சீனிவாசன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது கீதா (48). இவர் தெரு, தெருவாக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.சமீப நாட்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கீதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் பரிதாபம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சாத்தம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த சுரேந்திரன். இவரது மனைவி சினேகா வயது (19) இவர்கள் இருவரும் ஆம்பூரில் ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்களாகிறது. நேற்று இரவு மர்மமான முறையில் சினேகா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியேறினர்.

    இந்த நிலையில் அஜித் குமாருக்கும், சத்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அஜித் குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் பரிதாபம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவு ன் கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27). இவர் சுங்குவார்சத்திரத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது தாய் மாமன் மகளான கவுசல்யாவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனார்த்தனன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருத்திகா என்ற மகள் உள்ளார். ஜனார்த்தனனுக்கும், கவுசல்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோபித்து கொண்டு கவுசல்யா தனது தாயார் வீட்டிற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டார். பின்னர் ஜனார்த்தனன் கவுசல்யாவை அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. பின்னர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியால் கவுசல்யா தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கவுசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் உதவி கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார்.

    ×