search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hazard"

    • பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது.
    • மக்கள் குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நெல்லிக்குப்பத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-வது வார்டில் கந்தசாமி தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து குடிநீரை பிடித்த போது கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சத்யா மற்றும் பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக கூறி புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகார் அளித்த சிறிது நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் 5 இடங்களில் பள்ளங்கள் தோண்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்யும் பணியினை ஆய்வு செய்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் சரி செய்து சில நாட்களான நிலையில் மீண்டும் விஜயலட்சுமி நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து குடிநீர் வந்தால் எப்படி மக்கள் குடிப்பது? இதனை குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரியிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொது மக்கள் தெரி வித்துள்ளனர்.

    ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் புதிய அதிகாரிகள் நிய மிக்கப்படாததால் இது போன்ற அத்தியாவசிய பணி களை யார் மேற்கொள்வது? என தெரி யாமல் நகரா ட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் போதுமான பணியாளர்களும் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்து வருகின்றது. இது போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய குடிநீர் சரி செய்யாமல் தொடர்ந்து வருவதால் மிகப் பரிய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா? 

    • புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.
    • இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வங்கியின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு யாரும் நுழையவில்லை. இதனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அபாய மணி ஒலித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களும் நிம்மதி அடைந்தனர். 

    • கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது.
    • சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் கண்டமங்கலம் ஊராட்சி மூலம் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கி வருகின்றனர். ‌‌ கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது. கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்ததால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குடிநீர் கலங்களாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தக் குடிநீரை பருகினால் காய்ச்சல், காலரா போன்ற கொடிய நோய்கள் வரக்கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த  பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இயங்கி வரு கிறது. இதில் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். கட்டிட த்தின் பின்புறம் செப்டிக் டேங்க் ஒன்று உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவு நீர் அந்த செப்டிக் டேங்குக்கு செல்கிறது. இந்த கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கழிவறையில் இருந்து வரும் கழிவு நீர் செப்டிக் டேங்கில் வந்து சேர்கிறது. இந்நிலையில் செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் சுகாதார கேடு ஏற்படவும் அதிக அளவு வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமில்லாமல் இந்த செப்டிக் டேங்க் அருகில் தீயணைப்பு துறை உள்ளது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சின்னசேலம் பகுதியில் ஏற்படும் விபத்து களை தடுக்க செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வருகிறது அந்த மனித கழிவுநீர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.

    • வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் சாகுபடி வயல்கள் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும்.

    திருத்துறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால் என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு வடிகால் உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது.

    அதேபோல் இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என நான்கு வடிகாலும் குன்னலூர் எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.

    இந்நிலையில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் ஆறுகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. மேலும், கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் கிராமங்கள் மற்றும் சாகுபடி வயலும் மூழ்க வாய்ப்புள்ளது.

    எனவே, வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஊராட்சி செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்தனர்.

    இதில் ஊராட்சி செலவில் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் முதற்கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது.

    இது விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ×