என் மலர்
நீங்கள் தேடியது "Heavy Rain"
- தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
பெங்களூரு:
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகியுள்ள மிதமான சூறாவளி புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கர்நாடகவில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பெங்களூரு, குருமதகல், சாபெட்லா, குஞ்சனூர், கண்டகூர், கொங்கல், மற்றும் எம்.டி.பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.
பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பெய்யத் தொடங்கியபோது, துளிகளும் பெரிதாக இருந்தன. குறிப்பாக பெங்களூருவில் பல இடங்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சாலைகளில் ஓடியது.
இதனால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை.
ஜீவனஹள்ளியில் உள்ள கிழக்கு பூங்கா அருகே மாலையில் பெய்த மழையின் போது, மோட்டார்சைக்கிள் மீது மரம் விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. விபத்து நடந்தபோது இறந்த குழந்தை ரஷா தனது தந்தையுடன் மோட்டா ர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காததால் குழந்தை இறந்தது.
புலிகேசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
யெலகங்காவின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வடிகால்களில் தண்ணீர் செல்லாமல், சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கன மழை காரணமாக பெங்களூவில் இருந்து 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. கன மழை காரணமாக பெங்களூரு உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூருவுக்குச் செல்லும் சுமார் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இண்டிகோ நிறுவனம் கூறுகையில், பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை விமானப் பயணங்களைப் பாதித்து வருகிறது. பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமைகள் மேம்பட்டவுடன் சீரான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
- வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் கடும் அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்தனர்.
கடும் வெயில் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமாக காணப் பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மழை லேசாக தூறத் தொடங்கியது. பின்னர் திடீரென மழை பொழியத் தொடங்கியது.
நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், ஓசூர் பஸ்நிலையம், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில், கனமழை பெய்ததையடுத்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
- வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
சிவகிரி:
சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.
தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.
தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழுப்புரம் கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
- விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் உள்ளது.
விழுப்புரம்:
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி விழுப்புரம் கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. புதுவை மாநிலத்திலும் இந்த மழை நீடித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனை அடுத்து இரவு நேரத்தில் கனமழை பெய்ய வானிலை சாதகமாக இருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 3 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 6.30மணி வரை நீடித்தது. சுமார் 3.30 மணி வரை பெய்த கனமழையால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான அரசூர், இருவேல் பட்டு, திருவெண்ணைநல்லூர், ஏனாதிமங்கலம், கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் ,வடக்குறிச்சி, பாக்கம், அரகண்டநல்லூர், காணை, பெரும்பாக்கம், அய்யூர் அகரம், வீடூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த வண்ணம் இருந்தது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கனமழை பெய்தால் விழுப்புரத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து காணப்படும். இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சேர்மன் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் எவ்வளவு பெரிய கனமழை பெய்தாலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கனமழை எதிரொலியால் தஞ்சையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
- தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
- சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- கனமழையால் ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- கனமழையால் ராணிப்பேட்டை, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கினாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.
ஆனால், உட்புற சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.
சென்னையை பொறுத்தவரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வி, தென்காசி உள்பட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் குதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடை இடையே மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், கலெக்டர் அலுவலகம், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் காட்டு குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 16 செ.மீ., செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தலா 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை சோழிங்க நல்லூர், எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் செய்யூர் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
- கனமழையால் பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பிய நிலையில் வைகை, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி, வராக நதி, உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று இரவு கன மழை பெய்தது. சாரலாக தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பிய நிலையில் வைகை, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி, வராக நதி, உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இரு ந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கா னலில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெ ருக்கு ஏற்ப ட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்ட தாக வனத்துறையினர் அறிவித்தனர். இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 134.20 அடியாக உள்ளது. அணைக்கு 587 கன அடி நீர் வருகின்றது. நேற்று வரை 1500 கன அடி நீர் திறக்க ப்பட்ட நிலையில் இன்று நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 1667 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது.
வைகை அணையின் நீர் மட்டம் 69.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 2308 கன அடியாக அதிகரி த்துள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்து க்காக 1819 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிற நிலையில் 40 கன அடி நீர் பாசனத்துக்கும் 60 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் பெரிய குளம், ஏ.வாடிப்பட்டி, வடுகபட்டி, தேவதான ப்பட்டி, லெட்சுமிபுரம், ஆண்டிபட்டி, உத்தமபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டியது.
கூடலூர் 1.8, உத்தமபாளையம் 6.2, வீரபாண்டி 25.2, வைகை அணை 48.8, ஆண்டிபட்டி 47, அரண்மனைபுதூர் 37, போடி 3.6, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 33 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.