என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Herbs"

    • தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம்.
    • சித்தர்களால் கண்டறிந்து அடையாளப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகை வியாசாமிவசுகி. இவர் பெரும் பொருள், புகழ் ஆகியவற்றை நிறைவாகப் பெற்றிருந்த போதிலும் மன நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார்.

    இந்நிலையில் தமிழ் மொழியை கற்று தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களின் பெருமையை அறிந்து அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை ஷன்மாதாஜி என மாற்றி அமைத்துக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணமாக இலங்கை கண்டி கதிர்காம முருகன், தமிழகத்தில் உள்ள முருக கோயில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொண்ட இக்குழுவினரை ஜப்பான் நாட்டில் 35 வருடங்களாக தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வழி நடத்தி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

    தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பொன்னி விதை நெல் ரகங்களை ஜப்பானில் முருகா எனும் பெயரில் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் பயிரிடப்படுவதாகவும், அதுபோல் சித்தர்களால் கண்டறிந்து அடையாள ப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    முருகா எனும் பெயரில் பயிரிட்ட அரிசியை இன்று சுவாமி மலை முருகன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளதாக கூறினர்.

    தமிழக முதல்வரை சந்தித்து அவருக்கும் முருகா எனும் பெயர் கொண்ட அரிசியை வழங்க இருப்பதாக தெரிவி த்தனர்.

    • 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ - மாணவிகள் காட்சிபடுத்தியிருந்தனர்.
    • மூலிகையால் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தமிழ்நாடு, இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.

    மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 300 வகையான பாரம்பரிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    முன்னதாக இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    உணவு திருவிழாவினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் உற்சாகமாக பறை இசைத்ததை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    தொடர்ந்து 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

    குறிப்பாக பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள் சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

    மேலும் தர்பூசணியில் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

    இதனை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு களித்து சென்றனர்.

    மொத்தம் இரண்டு நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.

    இதில் உணவு பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன.

    • மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து பலியானார்.
    • அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஜல்லடியன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது61). இவர் மூலிகை செடிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    சுயம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள தங்கை புஷ்பவள்ளி வீட்டில் தங்கியி ருந்தார். இந்த நிலையில் மூலிகை செடிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வந்தார்.

    இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக திருமங்கலத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சோழவந்தான் சாலையில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு நேற்று சென்ற சுயம்பு, திடீரென மயங்கி விழுந்தார்.சுயநினைவின்றி கிடந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தங்கை புஷ்பவள்ளி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுயம்பு உடல்நலம் பாதித்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மகாசண்டி யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு உகந்த தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், கொண்டு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியா ர்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×