search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High-level bridge"

    • மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.
    • இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும்

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோயம்பே ட்டில் செயல்பட்டு வந்த பஸ்நிலையமும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இந்த நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்ககட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தது.

    இதற்கிடையே தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு பதிலாக ஜி.எஸ்.டி.சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூ ருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல் மறைமலைநகர், போர்டு தொழி ற்சாலை, சிங்கப்பெ ருமாள்கோவில், மற்றும் மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இது 6 வழிப்பா தையாக அமைய உள்ளன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு விடிவு பிறக்கும்.

    • அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
    • 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்

    வேங்கிக்கால்:

    கலசபாக்கம் ஒன்றியத்தில் செய்யாற்றின் குறுக்கே பூண்டி பழங்கோவில், கீழ்பெத்தாரை பூவாம்பட்டு, கீழ் தாமரைப்பாக்கம், தென் மகா தேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.55 கோடியே 88 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று பூண்டி ஊராட் சியில் நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்ட கலெக்டர் முரு கேஷ் தலைமை தாங்கினார். கலசபாக்கம் எம்.எல்.ஏ., பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்து பேசினார். கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் வரவேற்றார். முதன்மை பொறியாளர் முருகேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, 3 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- கலசபாக்கம் தொகுதியில் தற்போது இந்த 3 உயர் மட்ட மேம்பாலங்களும் தொடர்ந்து என்னிடம் இத்தொகுதி எம். எல்.ஏ. சரவணன் வைத்த கோரிக்கையின் பேரில் கட்டப்படுகின்றன.

    இந்த 3 மேம்பாலங்கள் கட்டப்படுவதால் 27-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு சுமார் 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், சப்- கலெக்டர் தனலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகரன், சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ரமணன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.306 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் நடைபெற்ற முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலை கோரிப்பாளையம் சந்திப் பில் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    அதன்பின்னர் மதுரை மேலமடை சந்திப்பு பகுதியி ல் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண் டார். இதில் கோரிப்பாளை யம் சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம், மேல மடை சந்திப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மதுரையின் மிக முக்கிய கோரிப்பாளையம் சந்திப் பில் பாலம் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    குறிப்பாக மதுரை மாநக ரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்கு வரத்து நெரிசலை கட்டுப்ப டுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வா கமும் மேற்கொண்டு வரு கின்றனர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோரிப்பா ளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோரிப் பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள் ளது. இந்த பாலத்தை 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமி டப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவின் போது அழ கர் எழுந்தருளும் திருக்கண் மண்டபகாரர்கள் எதிர்ப்பை அடுத்து நீளம் 1.3 கி.மீ. ஆக குறைக்கபட்டுள்ளது.

    பாலத்திற்கு அடியில் சென்று பீ.பி.குளம் செல் லும் வகையில் அமைப்பு இருக்கும் என தெரிகிறது. மேலும் 5 பகுதிகளை இணைக்கும் வகையில் பால மானது அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற் கேற்ற வகையில் கோரிப்பா ளையம், அண்ணா சிலை, யானைக்கல், பீ.பி.குளம், தல்லாகுளம் ஆகிய 5 சந் திப்புகள் விரிவாக்கம் செய் யப்பட உள்ளன.

    கோரிப்பாளையம் சந்திப் பில் அமைய உள்ள பாலத் தின் நீளம் குறைக்கப்பட்ட தையடுத்து பாலத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.172 கோடி யில் இருந்து ரூ.156 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி-சிவகங்கை சாலையில் அண்ணா பஸ் நிலையம் முதல் மேலமடை சந்திப்பு வரையிலான 2.5 கி.மீ. தூரத் துக்கு போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக் னல்களில் சந்திக்கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட் டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    இதனால் அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சந்திப் புகளிலும், அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சீரான போக்குவரத்து வச தியை ஏற்படுத்துவதற்கா கவும் ஆவின் முதல் கோமதிபுரம் 6-வது மெயின் ரோடு வரையில் 1.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடி யில் உயர் மட்டப் பாலம் அமைக்கவும், 3 சந்திப்பு பகுதிகளையும் அகலப் படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள் ளனர்.

    இதற்காக நிலம் கைய கப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையி னர் நிறைவு செய்து விட்ட தாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அத்துடன் மேல மடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    • ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் அருகே தருவைக்குளம் - வெள்ள பட்டி சாலையில் மழைக்கா லங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூ றாக இருந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என்று சண்முகையா எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையடுத்து ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், உதவி பொறியா ளர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மாரி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட கவுன்சி லர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆலோ சனை மரியான், ஒட்டப்பிடா ரம் ஊராட்சி தலைவர் இளையராஜா, அவைத் தலைவர் சுப்ரமணியன், இளைஞரணி அணிட்டன், தருவைக்குளம் ஊராட்சி தலைவர் காடோடி, கீழ அரசடி ஊராட்சி தலைவர் ராயப்பன், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானபிரகாசம், தயாளன், கிளை பிரதிநிதி பிரஸ்நேவ், மகளிரணி அன்னசெல்வம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

    • இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
    • இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    • ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் சாலையில், கண்ணமநாயக்கனூர் பிரிவு உள்ளது. இங்கிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் மறுபடி ரோட்டில் ரோட்டை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நீரோடைகளின் குறுக்கே இருந்த தரைமட்ட பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடங்களில் அகலமான உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.

    மலையாண்டி கவுண்டனூருக்கும், மருள்பட்டிக்கும் இடையில் மூன்று இடங்களில் நீரோடைகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளினால் வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களின் பக்கவாட்டில் தற்காலிக மாற்றுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி ,வேன், கார் போன்ற கனரக வாகனங்களும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

    ×