என் மலர்
நீங்கள் தேடியது "holi"
- மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார்.
- முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் காதலனுடன் சேர்ந்து மனைவி தனது கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டம் பிரம்மபுரியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத் (32 வயது). லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். மனைவி, மகள் பிரம்மபுரியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
லண்டனில் பணியாற்றும் சவுரப் ராஜ்புத், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனைவி முஸ்கானின் பிறந்தநாள், பிப்ரவரி 28 ஆம் தேதி மகளின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மாதம் சவுரப் ஊருக்கு திரும்பி வந்தார்.
ஆனால் தனது மனைவி முஸ்கான் சாஹில் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கணவன் சவுரப் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் தனது காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி சவுரபுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன்பின் அவரது இதய பகுதியில் கத்தியால் பலமுறை ககுத்தி இருவரும் கொலை செய்தனர்.
மேலும் திட்டமிட்டபடி சவுரபின் உடலை 15 துண்டுகளாக வெட்டி அதை டிரம் ஒன்றில் போட்டு அதன் மீது சிமெண்டை ஊற்றி உலரவைத்துள்ளனர். இதனை தொடர்ந்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தனது கணவரைக் கொன்று 11 நாட்களுக்கு பிறகு முஸ்கான் அவரது காதலன் சாஹில் சுக்லாவுடன் இணைந்து மணாலியில் ஹோலி கொண்டாடிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
- நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
- வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி கொண்டாடியுள்ளனர். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- கடுமையாக தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு.
- நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.
மத வழிபாட்டு தலங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கு நிரந்தரமாக ஒலி கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
அரசு விருந்தினர் மாளிகையில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹோலி கொண்டாட்டங்களின் போது அதிக ஒலியெழுப்பி டி.ஜே. நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை மிகக் கடுமையாக தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கால்நடைகள் கடத்தப்படுவதை கண்காணிக்கவும், கடத்தல்காரர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை கடத்தலுக்கு மாநிலத்தில் முழுமையான தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக மாவட்ட வாரியாக மதிப்பாய்வுகளை நடத்த வேண்டும் என்றும் மண்டல ஏ.டி.ஜி. பியூஷ் மோர்டியாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஹோலி கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களை தடுக்க கடுமையான விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் முதல் பத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.
- வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.
அலிகார்:
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
அதனால், பிரச்சனைகள் எழக்கூடாது என்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தொழுகை நேரத்தை 1 மணி நேரம் தாமதமாக, அதாவது பகல் 2 மணிக்கு நடத்துமாறு லக்னோவில் உள்ள ஈத்கா மசூதியின் இமாம் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைதூரத்துக்கு செல்லாமல், அருகில் உள்ள மசூதியிலேயே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.
சம்பல் நகரில், இந்துக்கள் பகல் 2.30 மணிவரை ஹோலி கொண்டாடுவது என்றும், அதன்பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அலிகார் தலைமை முப்தி காலித் ஹமீத், ஹோலி பண்டிகை அமைதியாக நடக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வண்ணப்பொடிகள் தூவும் பகுதி வழியாக செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, ஹோலி பண்டிகை தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்த யோசனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உயர் அதிகார ஆலோசனை குழு தலைவர் ரகுராஜ் சிங். இவர், இணை மந்திரிக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்.
ரகுராஜ் சிங் கூறியதாவது:-
ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகை காரணமாக, மாநில அரசு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் சிலர் ஆட்சேபனை எழுப்பி வருகிறார்கள்.
ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. சனாதன தர்ம நம்பிக்கை சார்ந்த விஷயம். வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.
அன்றைய தினம், மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவதுபோல், முஸ்லிம் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட 'ஹிஜாப்' அணியலாம்.
அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். அவர்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாது. எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகுராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டுக்குள் இருங்கள்
இதுபோல், சமீபத்தில் சம்பல் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார்.
''வண்ணப்பொடிகளை பிடிக்காதவர்கள், வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். ஹோலி பண்டிகை, ஆண்டுக்கு ஒருதடவை தான் வருகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை, ஆண்டுக்கு 52 தடவை வருகிறது'' என்று அவர் கூறினார்.
அவரது கருத்துக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார்.
- முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
- வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பெண் பாஜக எம்.எல்.ஏ. கேட்டகீ சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கேட்டகீ சிங், "ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும் தான் வருகிறது. ஆனால் வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் எதாவது தவறுதலாக நடந்தால் அந்த அழுகை கும்பல் (முஸ்லிம்) தெருவில் இறங்குவார்கள். நம் மக்களை (இந்துக்களை) பார்த்து இவ்வளவு பயம் இருந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில், முஸ்லிம்களுக்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்
முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்கள் பழங்களில் காய்கறிகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சம்பல் மாவட்ட சர்க்கிள் அதிகாரி பேசுகையில், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களால் யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அந்த நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது.
- அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது கிரிக்கெட் திறமையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்பவான் தற்போது சமூக வலைதளங்களிலும் பிசியாக இருக்கிறார்.
வெவ்வேறு வண்ணங்களில் மூடப்பட்டிருக்கும் உணவு தட்டை வைத்திருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சின், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்!" "என் தட்டில் என்ன இருக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா?" என்று ரசிகர்களிடம் கேட்டார்.
Happy Holi everyone!
— Sachin Tendulkar (@sachin_rt) March 7, 2023
Can you guess what's on my plate? ?️ pic.twitter.com/dV1UxVcc9M
இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது. அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 8-ம் தேதியும், சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தஹனம் மார்ச் 7-ம் தேதியும் கொண்டாடப்படும்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013-ல் விளையாட்டில் இருந்து விடைபெற்றார்.
- வீரர்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி ஹோலியை உற்சாகமாக வரவேற்றனர்.
- டோனி இளம் வீரர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.
ஹோலி பண்டிகை வட இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாகும். தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்ட நாளே ஹோலி. வண்ணங்களின் திருவிழா என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.
இந்த பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடிகளை தூவி அன்பை வெளிப்படுத்தி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
Ab hua na Holi Start ??
— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2023
Super Holi everyone.!?#HappyHoli #WhistlePodu ? pic.twitter.com/EnmpwWKbHn
ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ள வீடியோவில், வீரர்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி ஹோலியை உற்சாகமாக வரவேற்றனர். டோனி இளம் வீரர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.
- இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர்.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.
அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் முகத்தில் வண்ணம் பூசி இருந்தது. பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் ஜாலி மனநிலையில் இருந்தனர்.
Colours, smiles & more! ? ☺️
— BCCI (@BCCI) March 8, 2023
Do not miss #TeamIndia's Holi celebration in Ahmedabad ? pic.twitter.com/jOAKsxayBA
- சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
- கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.
- இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது
- அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
- மக்கள் இன்று முதலே பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்த தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் இன்று முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.