என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holi Celebration"

    • குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
    • தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பக்கத்து வீட்டில் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் 64 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.

    மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள மான்கிசர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது வீட்டில் தீபு கேவத் என்பவர் அதிக ஒலியில் பாட்டு போட்டுள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்துக்கு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சங்கர் கேவத் தனது குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரதமடைந்த தீபுவும் அவரது ஐந்து உறவினர்களும் சங்கர், அவரது தந்தை முன்னா கேவத் (64 வயது) மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் தந்தை முன்னா கேவத் படுகாயமடைந்தார்.

    தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முன்னா கேவத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைறைவாகினர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்

    கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மசூதிகளில் ஜும்மா தொழுகையைத் தடுக்க முயன்றதாகக் பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீமன் ஓவைசி கடுமையாக சாடினார்.

    ஒரு கூட்டத்தில் பேசியிருந்த ஓவைசி, "சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால், நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    எங்கள் மசூதிகளை மூடியதைப் போல, எங்களை நாங்களும் மூடிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல. ஒரு முதலமைச்சர் (யோகி ஆதித்யநாத்) ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்? என்று பேசியிருந்தார்.

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியதை ஓவைசி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஒவைசி கருத்துக்கள் குறித்து பேசிய தெலுங்கானா பாஜகவை சேர்ந்த கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங், அசாதுதீன் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, தெலுங்கானாவில் தனது கட்சி(பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். ஓவைசிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறிய ராஜா சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாடுகடத்தப்படுவர் என பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    • பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
    • 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது

    நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.

    அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.

    இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

    7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  

    • நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.

    நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ்.
    • அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். கடந்த புதன்கிழமை மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

    ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர்.

    இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வாரணாசி, சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின.
    • நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும்

    வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று(மார்ச் 14) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு முதல் டெல்லி வரை பலவேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா வண்ணங்களைப் பூசி கட்சியினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் டெல்லியில் தத்தமது வீடுகளில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்வர்களும் ஆதரவாளர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ், சம்பல் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் கலைக்கட்டின. திரளான மக்கள் வீதிகளில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், தமிழ்நாட்டில் திருச்சி ஆகிய பகுதிகளிலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா எல்லைகளிலும் எல்லைப்பாதுகாப்பு படையினர் வண்ணங்களை பூசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சிப் பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது.

    இந்த விழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தையும் குறிக்கிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பாரதத் தாயின் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த இந்தப் புனிதப் பண்டிகை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் சக்தியையும் ஊட்டுவதோடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் நிறத்தை ஆழப்படுத்தட்டும் என்பது எங்கள் நம்பிக்கை என்று அதில் பதிவிட்டுள்ளார் 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
    • நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்

    பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.

    பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.

    "பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.

    மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.

    நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    • இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • தரையில் இருந்து மண், தூசியை தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் பல விதமான வண்ண பொடிகளை வீசி மகிழ்ச்சியாக ஓடி, ஆடி கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த குட்டி யானை மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் உள்ளது. குறிப்பாக தரையில் இருந்து மண், தூசியை தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. 'அவரது பாணியில் ஹோலி கொண்டாட்டம்' என்ற தலைப்பில் சுஷந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரசனையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
    • பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹீரோஷி சுசுகி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஷாப்பிங் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. மேலும் நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அப்போது அழகழகாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் தனது மனைவி எய்கோ சுசுகியுடன் இணைந்து வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கொண்டாடிய காட்சிகளை 'ஹேப்பி ஹோலி' என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது மனைவியுடன் ஹோலி கொண்டாடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    வேப்பேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். #holicelebration

    சென்னை:

    சென்னை எழும்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக அங்கு ‌ஷவரில் தண்ணீர் விழுவதுபோல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த தண்ணீர் ஒரு தொட்டியில் நிரம்பியதும். அதில் இறங்கி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளித்து மகிழ்ந்தனர். கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

    சிறுவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி இருந்தனர்.

    அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் மின்சாரம் தாக்கியது. ஒரு சிறுவன் உள்பட 4 பேர் தூக்கிவீசப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை பார்த்து அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.


    உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு தண்ணீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக வேப்பேரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹோலி கொண்டாட்டத்தில் கவனக்குறைவாக செயல் பட்டதே மின்கசிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #holicelebration

    ×