என் மலர்
நீங்கள் தேடியது "home"
- வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
- அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி 2 இடங்களில் உள்ள வீடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக பொது மக்கள் குன்னம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் மற்றும் தனி வருவாய் அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி அல்லி நகரம் அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ரேஷன் அரிசியை எவ்வாறு இவ்விடத்தில் கடத்தி வந்தனர் என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது.
- வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும்.
வடக்கு பாகத்தின் பலன்கள் பெண்கள் மற்றும் செல்வத்திற்கு உரியது. வடக்கு பாகம் பொதுவாக பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் இன்பமாக இருப்பார்கள் மேலும் செல்வம் பெருகும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்யம் வழியாக வெளியேறினால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் வடக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும். வாயவியம் மூளை நன்றாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். அது தவறாக இருந்தால் அவர் ஆண்டியாவர். வாயவியத்தில் கழிப்பறைகள் அமைக்கலாம். வாயவியம் பாகத்தில் கிணறு இருந்தால் வழக்குகளாலும் நோயாலும் துன்பம் வரும். கனமான பொருட்கள் இந்த மூலையில் வைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் வாயவியம் மூலை வழியாக வெளியில் செல்லக் கூடாது.
- வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள்.
- சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.
எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.
எனவே வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப்புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என பரிசோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். அறைகளுக்கு அவசியமாக ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கை ஒளிரவிட வேண்டிய தேவை இருக்காது.
குளிர்சாதன வசதியை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்க போதுமான குழாய் வசதி அமைத்திருக்க வேண்டும். மின் சாதனங்களுக்கான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்கு குடிபோகும் முன் கவனிக்க வேண்டியவை..பெரும்பாலும் வீட்டை தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ், மார்பிள், கிரானைட் அகியவற்றில் எது பதிக்கப்பட்டு இருக்கிறது? என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம்.
ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா? என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்த பின்பே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உள்புறம் திருப்திகரமாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
- மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மகாலெட்சுமி. இவரது வீட்டின் மேல் சிமெண்ட் சீட்டால் கூரை அமைத்துள்ளார்.
அதன் மேல் வெய்யிலின் தாக்கத்தை குறைப்பதற்காக தென்னை மட்டைகளை பரப்பியுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கூரை மேல் ஏறி அங்கு மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.
- மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும்.
- ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும்.
வீடு கட்ட வேண்டும் என்று ஒரு குடும்பத்தில் முடிவு செய்தால் முதலில் என்ன செய்வார்கள்? வங்கிக்கடன் எவ்வளவு கிடைக்கும் என்றுதான் கணக்கு போடுவார்கள். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கவில்லை என்றால் எஞ்சிய தொகைக்கு என்ன செய்யலாம் என்று மனதை குழப்பிக்கொள்வார்கள். ஆனால், வீட்டில் கணவன், மனைவி என இரண்டு பேருமே வேலைக்குப் போனால் இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ள தேவையில்லை.
இருவரின் சம்பளத்தையும் கணக்கில் காட்டி அதிகமான தொகையை வீட்டுக்கடனாக வாங்கிவிடலாம். வீட்டுக்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது முதலில் கடன் கேட்பவரின் வருவாயைத்தான் வங்கிகள் பரிசீலிக்கும். ஈட்டும் வருவாய், வயது எனச் சில விஷயங்களை கருத்தில்கொண்டுதான் வீட்டுக் கடனை நிர்ணயிப்பார்கள். கணவன் மட்டுமே ஈட்டும் வருவாயைக் கொண்டு வழங்கப்படும் வீட்டுக்கடன் போதுமானதாக இல்லை என்று கருதினால், மனைவியை இணைத்துக்கொண்டும் கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம்.
ஆனால், அதற்கு மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும். ஒரு வேளை மகன் வேலைக்குச் சென்றால் தந்தை-மகன் வருவாயைக் காட்டி கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம். வங்கிகளில் கேட்ட கடனைக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. கடன் வாங்குபவருக்கு அதைத் திருப்பி செலுத்தும் அளவுக்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும் அல்லவா? கூடுதலாகக் கொடுத்துவிட்டு பிறகு கட்ட முடியாமல் போனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே வங்கிகள், அவ்வாறு செயல்படுகின்றன.
அதே சமயம் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்குக் குடும்பத்தில் வருவாய் இருக்கிறது என ஆதாரம் காட்டினால் கூடுதலாகக் கேட்கப்படும் கடன் கிடைத்துவிடும். கணவன்-மனைவி அல்லது தந்தை-மகன் எனக் கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கினால் விரைவாகத் தவணையைச் செலுத்த வேண்டும் என்றில்லை. கூட்டு வீட்டுக் கடனை தவணையாகச் செலுத்த 5 முதல் 25 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன.
வயது, பொருளாதார நிலைமை, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வருடம் என இதையும் கணக்கில் கொண்டு தவணையைச் செலுத்த கால அவகாசம் வழங்குவார்கள். 25 வயதில் கடன் வாங்கினால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை கூட கால அவகாசம் கிடைக்கும். ஆனால், 50 வயதில் கடன் வாங்கினால், அதை வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே இந்தச் சூழ்நிலையில் செலுத்தும் மாதத் தவணை தொகை அதிகமாகிவிடும்.
ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சாவகாசமாகத் தவணையைச் செலுத்த நினைக்கக் கூடாது. தவணைத் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதில் மொத்தமாகச் செலுத்தும் தவணைத் தொகையைச் சேர்த்துப் பார்த்தால் அதிகத் தொகை கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் தேவையில்லாமல் நீண்ட காலத் தவணையைத் தேர்வு செய்யாமல், பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பது நல்லது.
- சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் உலோகப் பொருட்கள் திருட்டு.
- கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய நெய் டின்கள், அரிசி மூட்டைகள் , உலோகப்பொருட்கள் மற்றும் ஆகியவைகள் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அளித்ததற்கு உடனடியாக அவைகளை கைப்பற்றி ரசீது போடுவதற்கு சக பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உடனடியாக காவல் துறையில் விரிவான புகாரினை அளித்து, துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கோவிலில் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும்.
- கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள்.
* கிழக்கு பாகத்தின் பலன்கள் ஆண்களுக்குரியது . கிழக்கு பாகம் பொதுவாக தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும். இதனால் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் வம்ச விருத்தி உண்டாகும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் கிழக்கிலிருந்து வெளியேறினால் அந்த வீட்டு ஆண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். கிழக்கில் கிணறு, செப்டிக்டங்க் இருந்தால் நன்மைகள் உண்டாகும்.
* கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள். எல்லா திசைகளிலும் சிறந்தது ஈசான்ய மூலை. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஈசான்ய மூலை தூய்மையாக இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இருக்கக் கூடாது மற்றும் தடுப்புகள் இருக்கக் கூடாது. வீட்டின் ஈசான்ய மூலையில் உயரமான மரங்கள் இருக்கக் கூடாது. ஈசான்யத்தில் கிணறுகள் இருக்கலாம். பூஜை அறை ஈசான்ய திசையில் அமைக்கலாம். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்ய மூலை வழியாக வெளியேறினால் செல்வ வளம் மற்றும் வாரிசு வளர்ச்சி உண்டாகும்.
- சிக்கனமாய் வீடு கட்ட பல வழிகள் உண்டு.
- கட்டுமானத்திற்கான பொருட்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
சொந்தமாய் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. நிதி நிலைமை இடம் கொடுக்காத பட்சத்தில் அதை தள்ளி போடுவோரும் நிறைய. ஆனால் சிக்கனமாய் வீடு கட்ட பல வழிகள் உண்டு. மனை வாங்குவதிலிருந்து வீடு கட்டி முடிக்கும் வரை பல்வேறு விஷயங்களை சரியான முறையில் பின்பற்றும்பொழுது குறைவான செலவில் அழகான வீட்டை நாம் கட்ட முடியும்.
மனை தேர்ந்தெடுப்பது:
நம் வீட்டை கட்டுவதற்கான மனையை சரியாக தேர்ந்தெடுத்து விட்டாலே பெருமளவில் செலவை குறைக்க முடியும். சாலையில் இருந்து மிகவும் பள்ளமாகவோ மிகவும் மேடாகவோ இல்லாத வகையில் உள்ள மனையை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஏனென்றால் வீட்டின் உயரத்தை தூக்குவதற்கும் குறைப்பதற்கும் நாம் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். கணிசமான ஒரு தொகையை நாம் பயன்படுத்தினால் மட்டுமே நம் வீட்டின் உயரம் சாலையின் மட்டத்திற்கு வர முடியும். எனவே மனையை சரியான அளவில் பார்த்து வாங்குவது அவசியம்.
வீட்டின் அளவுகளை எளிமையாக திட்டமிடுதல்:
வீட்டிற்க்கான பிளான் அல்லது வரைபடத்தை அமைக்கும் பொழுது அதை மிகவும் எளிமையானதாக அமைக்க வேண்டும். வீட்டின் உட்புறத்தில் உள்ள அறைகள் வளைவானதாகவோ பன்முனை கொண்டதாகவோ நாம் அமைக்க விரும்பினால் அது கட்டுமான செலவை உயர்த்தி விடும். எனவே அறைகளை சதுர அல்லது செவ்வக வடிவில் கச்சிதமாக திட்டமிட்டு கொள்ளும் பொழுது கட்டுமான செலவு பெருமளவில் குறையும்.
கட்டுமான பொருட்களை தேர்ந்தெடுத்தல்:
கட்டுமானத்திற்கான பொருட்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். பல விற்பனையாளர்களின் விலை பட்டியலை வாங்கி அதில் குறைவான விலை, தரமான பொருள் போன்றவற்றை விசாரித்து ஒரே இடமாக கட்டுமான பொருட்களை வாங்குவது நல்லது. பொருட்கள் விலை குறைவாக இருந்தாலும் தரமானதாக இருக்கிறதா என்பதும் மிகவும் முக்கியம்.
பளு தாங்கும் கட்டுமானம் சிறந்தது:
லோட் பேரிங் என்ற பளு தாங்கும் கட்டுமானம் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் நாம் கட்டப் போகும் வீடு அதிக உயரம் அதிக அடுக்குகள் கொண்டதாக இல்லாத பட்சத்தில் இது சிக்கனத்திற்கு வழிவகுக்கும். குறைந்த அளவு இரும்பு கம்பிகளும் கான்கிரீட்டும் இதற்கு தேவைப்படும். மேலும் லோட் பேரிங் கட்டுமானத்திற்கு குறைவான நேரமும் குறைவான மனித உழைப்பும் தேவைப்படும் என்பதால் சிக்கனமும் கிட்டும்.
கட்டிடத்தின் அஸ்திவாரம்:
ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் என்பது மிகவும் முக்கியம் இது மொத்த வீட்டின் கட்டுமான செலவில் 10 முதல் 15 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளும். பொதுவாக தரையில் இருந்து மூன்று முதல் நான்கு அடி ஆழத்திற்கு கடகால் தோண்டப்படும். ஆனால் சில வகை மண் தன்மைக்கேற்ப இரண்டு அடி ஆழம் எடுத்தாலே போதுமானது. அதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப தோண்டப்படும் கடைக்கால் ஆழம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அஸ்திவாரம் அமைப்பதற்கான செலவும் பெருமளவில் குறைந்து விடும்.
ஆயத்த கட்டுமான பொருட்கள்:
தற்போதைய காலங்களில் ஆயத்த கட்டுமான பொருட்கள் பெருமளவில் செலவை குறைக்க உதவுகிறது. தரை அமைக்கும் ஸ்லாப்புகள் ஜன்னல்கள் கதவுகள் போன்றவை ஆயத்த தயாரிப்பாக பார்த்து வாங்கும் பொழுது வீடு கட்டும் இடத்தில் வந்து செய்வதைவிட இது பெருமளவில் சிக்கனத்திற்கு வழி வகுக்கிறது. எனவே முடிந்த வரையில் இந்த ஆயத்த கட்டுமான பொருட்களை வீட்டில் பயன்படுத்தும் பொழுது செலவு குறையும்.
படிக்கட்டுகள் அமைத்தல்:
படிக்கட்டுகள் கட்டுவது என்பது அதிக நேரமும் செலவும் பிடிக்கக்கூடிய ஒரு கட்டுமான பணி. ஆனால் தற்போதைய காலங்களில் 'பிரீ காஸ்ட் ஸ்டேர்கேஸ்' முறையில் வீட்டிற்கான படிக்கட்டுகளை ஏற்கனவே கட்டி விற்கப்படுகிறது. இதை அப்படியே கொண்டு வந்து நம் வீட்டில் நிறுவி விட வேண்டியது தான் இதற்கு ஒரு கேண்டி லீவர் கொடுத்து பொருத்திவிட வேண்டும். இதன் மூலம் ஆல் கூலி பெருமளவில் குறைக்கப்படுகிறது. அத்துடன் கட்டுமான செலவும் குறைவதுடன் நேரமும் மிச்சப்படுகிறது.
மின் சாதன பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்:
மின் அமைப்பு நிறுவும் பொழுதும் சுவிட்சுகள் சாக்கெட்டுகள் அமைக்கும் போதும் அவை நல்ல தரமான பிராண்டாக இருப்பது அவசியம். இதனால் கட்டுமானத்திற்கு பின்பான பழுதுகள் குறைக்கப்படும். மேலும் இதனால் செலவுகளும் குறையும். எனவே ஒரு கடைக்கு பல கடைகள் சென்று விசாரித்து நல்ல பிராண்ட் ஆகவும் நியாயமான விலை கொண்டதாகவும் பார்த்து வாங்கி உபயோகிப்பது சிறந்தது.
மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றி வீடு கட்டும் பொழுது வீட்டின் செலவு பெருமளவு குறைவதுடன் குறிப்பிட்ட காலத்தில் நாம் வீட்டை கட்டி முடிக்கவும் கட்டுமானத்திற்கு பின்பான பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்கும் உபயோகமாக இருக்கும்.
- வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
- நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்:-
கட்டிடம் கட்டப் போகும் நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
கட்டிடம் கட்டப் போகும் நிலத்திற்கு தெற்கு அல்லது வடக்கு பகுதியிலோ குலம் குட்டை ஏறி போன்ற நீர் நிலைகள் இல்லாமல் இருப்பது நன்று.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தெற்கு மேற்கு, தென்மேற்கு வாசற்படியை தவிர்க்கலாம் சிலர் ஜாதகத்திற்கு இது சிறப்பாக இருக்கிறது என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.
அடுக்குமாடி கட்டிடம் மையப் பகுதியில் திறந்த வெளி இருப்பது சிறப்பு சூரிய ஒளி பாய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சிகப்பு கருப்பு மற்றும் வெளிர் நீளம் வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.
கட்டிடத்தின் வாசற்படி மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது நல்லது.
குடியிருப்பின் பால்கனி கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைந்திருப்பது நல்லது.
வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
குபேர வாசல்
பொதுவாகவே வடக்கு பார்த்த வீடு எல்லோரும் விரும்புகின்ற வீடு. வடக்கு பார்த்த வாசலும் சிறப்புடையது. வடக்கை பார்த்த வாசலில் வாசல் வடக்கு பக்கம் நடு பகுதியில் அமைந்து உள்ளதா என்பது மிக முக்கியம். இந்த வாசலை தான் குபேர வாசல் என்றும் அழைப்பர். வடக்கு பார்த்த வாசல் வடகிழக்கில் இருந்தால் அது ஈசானிய மூலை ஓரளவுக்கு பரவாயில்லை. வடமேற்கு மூலையில் வடக்கு பார்த்த வாசப்படி அமைப்பதை தவிர்க்கலாம்.
வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாசல் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியது. அதில் குறிப்பாக குரு லக்னாதிபதி குரு நட்சத்திர அதிபதி உள்ளவர்கள் குரு திசை நடக்கும்போது சிறப்பான பலனை பெறுவார்கள். குரு உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஜாதகத்தில் மற்ற விதங்களில் குரு பலமாக இருந்து பலன் கொடுத்து வருபவர்களுக்கும் இந்த வடக்கு வாசல் நிஜமாகவே குபேரவாசல் தான்.
- நிலையான வட்டி விகிதங்களில் இந்த வசதிகள் இருக்காது.
- மாறும் வட்டி விகித கடனில் இந்த நடைமுறை இல்லை.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் பல ஆண்டுகள் வீட்டுக் கடன்களைக் கட்டும் போது நிலையான வட்டி விகிதத்தால் அதிக வட்டியுடன் நாம் பணம் கட்ட நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இன்றைக்கு வீடு கட்ட வேண்டும் என்று யோசித்தால் எந்த இடத்தில் என்று பெரும்பாலும் யோசிப்பதை விட நமக்கு எந்த வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியுடன் கடன் கிடைக்கும் என்று தான் நினைப்போம். சிறிய வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வங்கிகளில் வீட்டுக்கடன்களைப் பெற்றுத் தான் வேலையை ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களுக்காகவே நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபட்ட விகிதம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதிதாகக் கடன் வாங்குபவராக இருந்தால் நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது, எதிர்காலத்தில் வட்டி விகிதங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். கார் அல்லது தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
எது சிறந்தது?
நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன்களை வாங்கினால் போதும் என்று நினைப்போம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து யோசிக்க மாட்டோம். எனவே முதலில் நீங்கள் வட்டி விகிதம் என்ன? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் போது, மாறும் வட்டி விகித கடனில் கடன் வாங்கியவர்களுக்கு தவணைக்காலம் (இ.எம்.ஐ.) குறையக்கூடும். ஆனால் நிலையான வட்டி விகிதங்களில் இந்த வசதிகள் இருக்காது.
ஒருவேளை சில வங்கிகள் உங்களுக்கு ஆரம்பத்திலேயே வட்டி விகிதங்களைக் குறைத்து கடன் வழங்கும் பட்சத்தில், எவ்வித தயக்கமும் இன்றி நிலையான வட்டிக்கடனை வாங்கலாம். இல்லையென்றால் சற்று யோசித்து வாங்குவது நல்லது.
கடன் வழங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கக்கூடும். ஆனால் நிலையான விகிதக் கடன் வாங்கும் போது நம்மிடம் முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிப்பார்கள்.
ஆனால் மாறும் வட்டி விகித கடனில் இந்த நடைமுறை இல்லை. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியவர்களாக இருந்தால், கூடுதல் கட்டணங்கள் ஏதுவுமின்றி குறைந்த வட்டியுடன் உங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே நிலையான வட்டி விகித கடனை மாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே உங்களுடைய மாதாந்திர வருமானம், உங்களது பொருளாதார நிலை குறித்து யோசித்து எந்த வழியில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
- யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது.
- பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள்.
நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீதத்தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள்.
உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும். வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம்.
வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம். இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொருளாதாரா நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும்.
குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது. இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.
டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். பொதுவாக ஒருவரது மாத வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது.
திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும். ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம். வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாகும்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
- மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது,
நாங்கள் வாழப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். நான், என்னுடன் தங்கை மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் கல்லூரியில் படித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம்.
இந்த நிலையில் மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு, மின் இணைப்பு வழங்க விடாமல் மிரட்டி வரும் தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.