என் மலர்
நீங்கள் தேடியது "honour killing"
- தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது.
- சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். தம்பதிக்கு 2 மகள்கள் மகன் உள்ளனர்.
தேவதாசின் இளைய மகள் ராஜேஸ்வரி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
ராஜேஸ்வரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலிப்பதற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
அப்போது ராஜேஸ்வரி காதலருடன் சென்றது தெரியவந்தது.
இதனால் அவமானம் அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் நார்நுர் போலீசில் புகார் செய்தனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் காணாமல் போன ராஜேஸ்வரி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜேஸ்வரியை அழைத்து சென்ற அவரது காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை ராஜேஸ்வரியின் பெற்றோர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
தனது மகள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஸ்வரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நார்நுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறினர்.
- கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எட்டயபுரம் :
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி.தெரு சேவியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துகுட்டி (வயது 50), விவசாயி. இவர் சொந்தமாக வேன், மினி லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.
இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26). கூலி தொழிலாளி.
ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் உறவினர்கள். எதிரெதிர் வீட்டில் வசித்து வந்த அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு முத்துகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறினர். மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர்கள், அங்கு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கேயே தங்கியிருந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதி இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று காலை மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி, தேசிய ஊரக வேலைக்கு சென்று விட்டார். இதனால் புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது வீட்டில் அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அதை பார்த்து மகாலட்சுமி கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து புதுமண தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துகுட்டி ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
முத்துகுட்டி தலைமறைவாகி விட்டார். அவரது வீடு பூட்டிக் கிடந்தது. அந்த வீட்டில் இருந்து ரத்தக்கறை படித்திருந்த அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.
இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எடடயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். #Honourkilling
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ் (22), சுவாதி (19). காதல்-கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர்களை, சுவாதியின் பெற்றோர் மற்றும் உறவினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் கைதாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த குருவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக கார் வைத்து ஊத்தங்கரையில் ஓட்டி வருகிறார்.
கல்லாவியை அடுத்த வெங்கடதாம் பட்டியில் வசிப்பவர் செட்டிக்குமார். இவரது மகள் சுகன்யா (21) இவர் பி.எஸ்.சி. கணிதம் படித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சிவகுமாருக்கும், சுகன்யாவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த 16-ந் தேதி இருவரும் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், அவர்களை, சுகன்யாவின் உறவினர்கள் தேடிவந்தனர். தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சிவகுமாரும், சுகன்யாவும் போச்சம்பள்ளி துணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
திருமணம் பதிவு செய்வதாக இருந்தது. நேற்று மதியம் மணமக்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பனங்காட்டூரில் இருந்து தங்கள் காரில் போச்சம்பள்ளி துணை பதிவாளர் அலுவலகம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, போச்சம் பள்ளி பிரதான சாலையில் வரும்போது அவர்களை இரண்டு கார்களில் சுகன்யாவின் உறவினர்கள் துரத்த ஆரம்பித்தனர்.
சினிமா படம்போல் மணமக்கள் வந்த காரை முந்த நடந்த நிலையில் பிரதான சாலையில் இருந்த போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காரை உள்ளே விட்டு மணமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஷிடம் தஞ்சமடைந்தனர்.
போலீஸ் நிலையத்தில் மணமக்கள் தஞ்ச மடைந்ததை கண்ட துரத்தி வந்த கும்பல் தங்கள் கார்களை திருப்பிக் கொண்டு பறந்தது.
மணமக்களை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஷ் மணமக்கள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்துகொண்டு, இதுபற்றி விசாரணை நடத்த கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ் வாகனத்திலேயே அவர்களை அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம் செய்த ஜோடி மற்றும் மணமக்களின் உறவினர்கள் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மணப்பெண் சுகன்யா வீட்டாரையும் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆணவக் கொலை ஒன்று நடந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தை போலீஸார் மிகவும் கவனமாக விசாரிக்கின்றனர். #HonourKilling
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சுவாதியின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ், லட்சுமணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான கார் டிரைவர் சாமிநாதன் (வயது 30) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இவர் சூடுகொண்டபள்ளி அருகே உள்ள பலவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை தமிழக போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை வழக்கில் இதுவரை 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கைதான 7 பேரையும் கர்நாடக போலீசார் மண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் மண்டியா கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் உள்பட 3 பேரை போலீசார் ஓசூர் அழைத்து வந்து சம்பவம் நடந்த இடங்களை காட்டி விசாரித்தனர். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், எதிர் தரப்பாளிகளும் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை ஓசூருக்கு மாற்ற கர்நாடக போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கர்நாடக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வழக்கு ஓசூருக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.#HonourKilling
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி சங்கர் (வயது33). இவருக்கு திருமணமாகவில்லை. களக்காட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இசக்கிசங்கர் தினமும் அதிகாலையில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளிப்பது வழக்கம். அதுபோல் நேற்றும் மோட்டார் சைக்கிளில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆற்றுக்கு சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. உயிர் பிழைக்க இசக்கி சங்கர் தப்பியோடினார்.
ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரி வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி சங்கர் பலியானார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட இசக்கி சங்கரும், வெள்ளங்குழியை சேர்ந்த தளவாய் என்பவரது மகள் சத்திய பாமா (21) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். சத்திய பாமா, பாபநாசம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருவரது சமூகத்தை சேர்ந்தவர்களும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதல் ஜோடியான இசக்கி சங்கரும், சத்திய பாமாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.
இருவரும் ‘நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வோம். இல்லையேல் ஒன்றாகவே சாவோம்’ என்று கூறினர். இது தொடர்பாக இரு சமுதாய பெரியவர்களும் ஒன்றாக கூடி சமரசம் பேசினார்கள். இதனால் இசக்கி சங்கர் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார்கள்.
சத்திய பாமாவின் பெற்றோரும், கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்போம் என்றும், அதுவரை இருவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில் நேற்று காலை இசக்கி சங்கர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சமரசம் பேசுவது போல் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது போல் தெரிவித்து அவரை கவுரவ கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அம்பை போலீசார் வெள்ளங்குழி பகுதியை சேர்ந்த சிலரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று மாணவி சத்தியபாமாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த சத்திய பாமா ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்றும் அந்த பகுதியில் சோதனை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிரிவினர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்படாதவாறு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #HonourKilling
நந்தீஸ்-சுவாதி ஆணவ படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் கொலை செய்யப்பட்ட நந்தீஸ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியை திருமாவளவன் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுபோன்ற கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கை கர்நாடகா போலீசார் விசாரிப்பதா? அல்லது தமிழக போலீசார் விசாரிப்பதா? என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
நந்தீஸ்-சுவாதியை ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றதால் இந்த வழக்கை தமிழக போலீசுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கை ஓசூர் போலீசார் விசாரித்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கூலிப்படையினரின் தலையீடும் உள்ளது. தமிழகத்தில் கூலிப்படைகளை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். திட்டம் தீட்டியவர்கள் போலீசில் சிக்குகின்றனர். இதனால் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கூலிப்படை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
இத்தகைய ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஜாமீனில் வெளிவராதவாறு சிறையில் வைத்து வழக்கை விரைவாக முடித்து தண்டனை வழங்க வேண்டும்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் (சி.பி.ஐ.) வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கில் சரணடைந்தவர்களை தவிர, இன்னும் பலர் சம்மந்தப்பட்டு இருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்து தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசுக்குரிய நன்மதிப்பை சீர்குலைப்பதாகவே உள்ளது என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #HonourKilling #Thirumavalavan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடு கொண்ட பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருக்கு 2 மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அடுத்த மகள் சுவாதி பி.காம் படித்தார். தம்பி பிளஸ்-1 படித்து வருகிறார்.
அதே ஊரை சேர்ந்த நந்தீஸ் (25) என்பவர் ஓசூரில் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி சுவாதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சேர்ந்து இருக்கிறார். இருவரும் சூளகிரி திம்மராய சுவாமி கோவிலில் சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.
சுவாதி ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தந்தை சீனிவாசன் மற்றும் உறவினர்கள் அவமானம் அடைந்தனர். இளைய மகள் ஓடிப் போனதால் மூத்த மகள் திருமணம் தடைபடும். சமூகத்தில் தலை குனிவு ஏற்படுமே என்று சீனிவாசன் ஆத்திரத்தில் கொந்தளித்தார்.
இதனால் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று கருதி நந்தீஸ் வேலை பார்த்து வந்த கடையின் மேல் தளத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து தனது காதல் மனைவியை குடியமர்த்தி இருக்கிறார். பெற்றோருக்கு பயந்து காதல் ஜோடியினர் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பெற்றோர் வீடு தேடி வந்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளைக்கு தங்க மோதிரமும் பரிசு வழங்கி இருக்கிறார்கள்.
பெற்றோர் மனம் மாறிவிட்டனர் என்று மகிழ்ந்த சுவாதியும் அவரது கணவர் நந்தீசும் அவர்களுடன் காரில் சென்று இருக்கிறார்கள்.
காரில் உறவினர் வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட்ராஜ் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். டிரைவர் சாமிநாதன் காரை ஓட்டி இருக்கிறார்.
கார் சூடு கொண்டப்பள்ளிக்கு செல்வதற்கு பதில் கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று இருக்கிறது. அதைபார்த்ததும் சுவாதி தந்தையிடம் கேட்டுள்ளார்.
உடனே அவர் அமைதியாக இரு என்று சத்தம் போட்டு இருக்கிறார். ஏதோ நடக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்ட இருவரும் பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.
மாண்டியா மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் காரை விட்டு இருவரையும் இறக்கி பிரிந்து விடும்படி மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. சரிபட்டு வரமாட்டார்கள் என்று ஆவேசம் அடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் இருவரது கை, கால்களையும் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள்.
காரில் தயாராக இருந்த அரிவாள், கத்தியை எடுத்து வந்து மிரட்டி இருக்கிறார்கள். பளபளத்த அரிவாள், கத்தியுடன் நிற்பதை பார்த்ததும் நம்மை பலிகொடுத்து விடுவார்கள் என்று பயத்தில் உறைந்து போன காதல் ஜோடி உயிருடன் விட்டு விடும்படி கெஞ்சி இருக்கிறது.
கை, கால்களில் அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சிறுக சிறுக சித்ரவதை செய்து இருவரையும் கொன்று இருக்கிறார்கள். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. சுவாதியின் அடிவயிற்றையும் அரிவாளால் வெட்டி சிதைத்து இருக்கிறார்கள். தலையை மொட்டை அடித்து முகத்தையும் சிதைத்து இருவரது உடல்களையும் ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்கள். நந்தீசையும் அவரது மனைவியையும் காணவில்லை என்றதும் நந்தீசின் தம்பி சங்கர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.
தமிழகத்தில் போலீசார் தேடிக்கொண்டிருந்த போது மாண்டியா மாவட்டத்தில் ஆற்றில் கிடந்த சடலங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விசாரித்த போது நந்தீஸ்-சுவாதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் பெலகாவாடி போலீசார் நேற்று ஓசூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
ஓசூர் ராம் நகர் பகுதியில் நந்தீஸ்-சுவாதி தங்கி இருந்த வீடு, கடத்தி சென்ற இடம் போன்றவற்றை காட்டினார்கள். அதை கர்நாடக போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் 3 பேரையும் கர்நாடகத்துக்கு அழைத்து சென்றனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கை பெலகாவாடி போலீசார் பதிவு செய்திருந்தனர். இன்று அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள பெண்ணின் பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), கார் டிரைவர் சாமிநாதன் (30) உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ் (ஓசூர் டவுன்), பெரியசாமி (ஓசூர் அட்கோ), முருகேசன் (பாகலூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி கூறினார். தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். ஆணவக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நந்தீஸ்-சுவாதி ஆகியோரின் சொந்த கிராமமான சூடுகொண்ட பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கிராமத்தில் மொத்தம் 90 வீடுகள் உள்ளன. இதில் 55க்கும் மேற்பட்ட வீடுகளை பூட்டி விட்டு கிராம மக்கள் தலைமறைவாகி விட்டனர். மேலும் மீதி உள்ள வீடுகளில் ஆண்கள் யாரும் இல்லை. பெண்கள் மட்டுமே உள்ளனர். #HonourKilling
சென்னை:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓசூரில் நடந்துள்ள ஆணவப்படுகொலைகளைக் கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும்.
ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்- சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நந்தீஸ்- சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின் புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக்கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ் நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்து வரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டி வரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக்கொலைகளை தேதிவாரியாகப்பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.
27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில்,“கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய வழி காட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின் பற்றவில்லை.
இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HonourKilling #Thirumavalavan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ் (வயது 25). இவர் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி (20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.
நந்தீசும், சுவாதியும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் காதல் ஜோடி நந்தீஸ், சுவாதி கடந்த 15.8.2018 அன்று சூளகிரி திம்மராயசாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமணத்தை ஓசூர் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்டர் மாதம் 4-ந் தேதி பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராம் நகரில் ஒரு வங்கியின் மேல் மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
நந்தீஸ் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு புனுகன்தொட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக வெளியே சென்ற நந்தீசும், அவரது மனைவி சுவாதியும் வீடு திரும்பவில்லை. அவர்களை நந்தீசின் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் நந்தீசின் தம்பி சங்கர் (20) கடந்த 14-ந் தேதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன நந்தீஸ், சுவாதி ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் அடித்து கொல்லப்பட்டு வயரால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் பெலகவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் ஓசூரை சேர்ந்த நந்தீஸ், அவரது மனைவி சுவாதி என தெரியவந்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
நந்தீஸ், சுவாதி காதலித்து திருமணம் செய்ததை பிடிக்காத பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை கடத்தி சென்று கொடூரமாக அடித்து ஆணவ கொலை செய்து உடல்களை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆணவ கொலை செய்ததாக பெண்ணின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (40), பெண்ணின் பெரியப்பா வெங்கடேஷ் (43), உறவினர் புனுகன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து கர்நாடக பேரீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் பெலகவாடி போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக பெண்ணின் மற்றொரு பெரியப்பா சூடுகொண்டப்பள்ளி அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியை சேர்ந்த கார் டிரைவர் சாமிநாதன் (30) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட நந்தீஸ், சுவாதி உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு நந்தீசின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களையும் மாண்டியா அருகே உதயகிரியில் உள்ள சுடுகாட்டில் எரித்தனர்.
பின்னர் பெற்றோரும், உறவினர்களும் ஓசூர் திரும்பிவிட்டனர்.
காதல் திருமணத்தால் நடந்த இந்த ஆணவ கொலைகளால் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் நந்தீஸ் ஒரு டி-சர்ட் அணிந்து இருந்தார். அதில் அம்பேத்கார் உருவம் பொறித்து தமிழில் அம்பேத்கார் பெயர் எழுதப்பட்டு இருந்தது. இதை வைத்து தமிழக போலீசுக்கு கர்நாடக போலீசார் தகவல் அனுப்பினார்கள்.
இதை வைத்து இறந்து கிடந்தது நந்தீஸ் மற்றும் அவரது காதல் மனைவி சுவாதி என்பதை ஓசூர் போலீசார் கண்டுபிடித்து கர்நாடக போலீசாருக்கு தகவல் அனுப்பினர்.
மேலும் நந்தீசின் சகோதரர் நேரில் சென்று 2 பேரின் பிணங்களையும் அடையாளம் காட்டினார். அதன்பிறகு நந்தீசின் பெற்றோர் அங்கு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தனது மகன் மற்றும் மருமகள் உடலை வாங்கி அங்கேயே எரித்து விட்டனர். #HonourKilling
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்திஸ்-சுவேதா என்ற புதுமண காதல் தம்பதியினரை சுவேதியின் குடும்பத்தார் ஆணவ படுகொலை செய்தனர்.
அவர்களது உடல்களை கர்நாடக மாநிலம் மாண்டிய அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுவேதாவின் தந்தை, பெரியப்பா மற்றும் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆணவ படுகொலை நெஞ்சை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இதுபோன்ற ஆணவ கொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் சட்டமன்றத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழத்தில் ஆணவ படுகொலை நடக்கவில்லை என்று கூறி உள்ளார்.
இறந்துபோன நந்திஸ் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் ஒரு கூட்டமே சதி செய்து உள்ளது. அவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது செய்யவேண்டும்.
ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HonourKilling