என் மலர்
நீங்கள் தேடியது "hostel"
- 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட முடிவு.
- பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.
தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அமராவதியில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
- ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.
ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.
இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- வனவிலங்குகள்-பறவைகளை கண்டு ரசிக்கலாம்
- சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று.
இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முடி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷண நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.
வால்பாறையில் யானைகள் கூட்டம், காட்டெருமை, கடமான், இருவாச்சி பறவை மற்றும், பல்வேறு அறியவகை பறவைகளை கண்டு ரசிக்கலாம். வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் சிறுகுன்றா பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான விடுதி இருந்தது. இதனை புதுப்பித்தால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சிறுகுன்றா அரசு விடுதியை புதுபிக்க முடிவு செய்தனர். ரூ.16 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை புத்தாண்டின் முதல் வாரத்தில் செல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்கு ரூ.16 லட்சம் செலவில் சிறுகுன்றா பகுதியில் இருந்த விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறை டவுனில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்து உள்ளது.
4 அறைகளை கொண்ட இந்த விடுதியின் வாடகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் சின்ன கல்லாறு, நீர் வீழ்ச்சி, செக்கல்முடி, சோலையார் அணை, பு நல்ல முதி பூங்சோலை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.மேலும் இந்த பகுதியில் இருந்து அறியவகை பறவைகள், மயில், இருவாச்சி பறவை, யானைகள், காட்டெறுமை, காடமான் ஆகியவற்றை விடுதியில் இருந்து கண்டு ரசிக்க முடியும். விடுதிக்கான முன்பதிவு ஆன்லை மூலம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-
காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என தெரிவித்தனர்.
- மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்.
- விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.
இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி அமைந்துள்ளது.
இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு தரமான முறையில் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து.
இந்த விடுதியில் திடீரென மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா? எனறு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறி இல்லை.
மோர் மோசமாக இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக தரமாக வழங்க வேண்டும்.
சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதற்கு மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும், மின் விளக்குகள் வரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கூறினர்.
கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
மேலும் உங்களது தேவைகள் எதுவானாலும் தயங்காமல் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறி தனது மொபைல் எண்ணை தெரிவித்தார்.
- பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
- பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.
- பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து வருகிறது.
- 30 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
பூதலூர்:
பூண்டி மாதா பேரால யத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
ஆண்டு பெருவிழாவில் கலந்து கொள்ள நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஆலயநிர்வாகம் செய்து வருகிறது.
ஆலயம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து உள்ளது.
ஆலய வளாகத்தில் கும்பகோணம் முன்னாள் பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் பெயரில் அமைந்த 30அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி புதுப்பிக்கப்பட்ட விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புனிதம் செய்தார்.
இதற்கானகல்வெட்டை மறைமாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பூண்டி பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பேராலயதுணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ்,ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன.
- உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன. அதன்படி உடுமலை அரசு பள்ளி மாணவர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவர் விடுதி, தாயம்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி, குண்டடம் அரசு பள்ளி மாணவர் விடுதி, எலுகாம்வலசு அரசு பள்ளி மாணவர் விடுதி, சின்னக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர் விடுதி, திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி, பல்லடம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர் விடுதி, அவினாசி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகியவை மாணவர்களுக்காக உள்ளன.
இதுபோல் திருப்பூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தாராபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவியர் விடுதி, முத்தூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, சின்னகாம்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவை மாணவிகளுக்காக உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 4 சீருடைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
பள்ளி விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதிச்சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.
- விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அரசு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 4000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதாகவும் மேலும் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் .
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது.
- விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
உடுமலை,
உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்ற ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும் மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி,உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வர சாமி, உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன்,தாசில்தார் கண்ணாமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உடன் இருந்தனர்.
- சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
- தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்த ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை காணொலி காட்சி வழியாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து விடுதியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகா தேவி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
பட்டுக்கோட்டை நகராட்சி க்குப்பட்ட பழனியப்பன் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதனை பராமரிக்க முன்அனுபவமு ள்ள தகுதிவாய்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2023 அன்று மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.
மேலும் இது குறித்து தகவல்கள் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பட்டுக்கோ ட்டை நகராட்சி நகரமைப்பு பிரிவில் 15ம் தேதி வரை அலுவலக நேரத்தில் நேரடி யாக தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.