என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hotel employee"
- மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
- ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. இன்று காலை சிலை முன்பு திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி முட்டி போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய போது மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் பணி புரிவதும் தெரியவந்துள்ளது.
மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
- தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
சேலம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),
இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
- கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் சரஸ்வதி வேலை பார்த்து வந்தார்.
- சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் பாளை முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வேலைக்கு வந்த சரஸ்வதி ஓட்டலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சரஸ்வதி உயிரிழந்ததை அறிந்து அவரது உறவினர்கள், தமிழர் விடுதலைகளம் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, பாளை ஓட்டலில் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபட்டதாலேயே சரஸ்வதி உயிரிழந்துள்ளார். எனவே இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
- நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தோட்டக்குடி நடுத்தெருவில் சென்ற போது, அங்கு அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவர் கையில் கம்பை எடுத்து வைத்துக் கொண்டு, போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த செல்லசாமி, அவரிடம் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், செல்ல சாமியை கம்பால் குத்தினார்.மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த செல்ல சாமியை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப் பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மேலூரை அடுத்த முசுண்டகிரிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிசாமி (வயது 27). இவர் விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஆண்டிசாமி அதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி திருமணத்துக்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஆண்டிசாமி திருமணத்துக்கு மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த ஆண்டிசாமி, தந்தை பாண்டி, தாய் மீனா, சகோதரர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரும் மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்த சக்திவேல் மனைவி முத்துசெல்வி (வயது 34) இவர் சம்பவத்தன்று மதியம் அங்குள்ள வாழைத் தோட்டத்துக்கு புல் அறுக்க சென்று உள்ளார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் அழகுமலை (49) என்பவர் அவரை கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். முத்துச்செல்வி மறுக்கவே, நடந்ததை ‘வெளியே சொன்னால் நடப்பதே வேறு’ என்று மிரட்டிவிட்டு சென்றார். இது தொடர்பாக முத்துசெல்வி புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்