என் மலர்
நீங்கள் தேடியது "hraja"
பீளமேடு:
கோவை பீளமேடு மசக்காளி பாளையத்தில் பாரதீய ஜனதா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பேசியதாவது-
கும்பாபிஷேகம் நடத்துவது ஆன்மீகம். அதனை இந்து சமய அறநிலைய அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்து கோவில் சொத்து பல இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கருணாநிதிக்காக பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்திய தலைவர் மோடி. கருணாநிதி சிலையை திறக்க சோனியாவை அழைத்தது ஏன். இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் தமிழின துரோகிகள்.
சர்ச்சை பேச்சு இருந்தால்தான் அறிவு வளரும். உண்மையை சொன்னால் என்னை தேச விரோதிகள் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். 1 கோடியே 89 லட்சம் பயனாளிகள் முத்ரா திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் 4.5 லட்சம் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன.
வீடு தோறும் கழிப்பறை வசதி நாடு முழுவதும் 7 கோடியே 69 லட்சத்தில் கட்டித்தரப்பட்டுள்ளது. மின் வெட்டு இல்லை என்ற நிலை உருவாக்கியது மத்திய மின் திட்டத்தின் மூலமே தான். பயிர் காப்பீட்டு மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். 300 ரூபாய்க்கு 30 ஆயிரம் வரை பசு மாட்டுக்கு இன்சூரன்ஸ் வழங்கி உள்ளனர். ஆர்.கே. நகர் போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வி அடையும். பாஜக வில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். கோவில்களில் முறைப்படி பூஜை பரிகாரங்கள் செய்ய வில்லை எனில் கோவிலை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும்.
சிலை மீட்பு விவகாரத்தில் பொன்.மானிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது புகார் கூற சில அதிகாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். இறுதியில் தர்மமே வெல்லும். தி.மு.க. கூட்டணி தானாகவே உடைந்து போகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை கவுண்டம் பாளையம் தொகுதிக்குட் பட்ட பாரதீய ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஆர்.தாமு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலிவரதன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் வினோ வரவேற்று பேசினார்.
இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, தினமும் 2 மணி நேரம் பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தால் பயன் அடைந்தவர்களை முதலில் சந்தித்து அவர்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 435 பூத் கமிட்டி உறுப்பினர்களும் 3 முதல் 4 பேராக சென்று தகவல்களை பரிமாற வேண்டும்.
உங்கள் பூத் கமிட்டியில் உள்ள பொதுமக்கள் எண்ணங்களை புரிந்து செயல்பட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் செங்கை வாசு, மாவட்ட பொதுசெயலாளர்கள் செல்வராஜ், ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். #hraja #ponmanickavel
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இழிவாக பேசி வரும் எச்.ராஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செய லாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.
மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மேலிட பொறுப்பாளர் சிவசெல்லபாண்டியன், தொகுதிச் செயலாளர் தம்பிராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி னார்கள்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருந்தார்.
இதை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை - விழுப்புரம் சாலையில் மூலகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன், ஆற்றல் அரசு, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
15 நிமிடத்திற்கும் மேலாக மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 45 பேரை கைது செய்தனர்.
இதுபோல் தவளகுப்பம், புதுவை- கடலூர் சாலை 4 முனை சந்திப்பில் வி.சி.க. வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் வெண்மணி தலைமை தாங்கினார். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன், உள்ளிட்ட 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த வர்களுக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தவளகுப்பம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த திடீர் மறியலால் கடலூர்- புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டக்குப்பம் பைபாஸ் ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தமிழ்மொழி தலைமை தாங்கினார்.
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் பாவலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறும் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அந்த மாநிலத்தில் இரு கிறிஸ்தவ சபைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை குறித்து வந்த தீர்ப்பை நிறைவேற்ற வில்லை. கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராமகிருஷ்ணன் கொலையில் முதல் குற்றவாளி பினராய் விஜயன்தான்.
பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மற்ற கோவில்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. அவரது பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் இல்லை எனில் விரைவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #hraja #parliamentaryelections
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக இருப்பவர் எஸ்.துரைசாமி. இவர், ஜனாதிபதிக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, ஐகோர்ட்டு குறித்து இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக போலீசார் எல்லாம் ஊழல்வாதிகள் என்றார். தடையை மீறி விநாயகர் ஊர்வலத்தை செல்ல அனுமதிக்கவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசாரை மிரட்டினார்.
இதையடுத்து திருமயம் போலீசார், எச்.ராஜா மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து எச்.ராஜா, தலைமறைவானார். அதாவது போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 25-ந்தேதி தலைமறைவு குற்றவாளியான எச்.ராஜாவை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜ்பவனுக்கு அழைத்து, வழக்கு தன்னுடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
ஒரு மணிநேரத்துக்கு மேலாக போலீசார் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கு உள்பட பல விஷயங்களை அவர்கள் விவாதித்துள்ளனர். இதன் மூலம் போலீசாரால் தேடப்பட்டு வந்த எச்.ராஜாவை பாதுகாத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 212ன் கீழ் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் இழைத்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 155ன் கீழ் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுள்ளார். இவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 156(1) கீழ், ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியும்.
கவர்னர் என்பவர் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஒருவேளை சட்டத்தை மீறி அவர் செயல்படும்போது, ஜனாதிபதியின் அந்த விருப்பத்தை அவர் இழந்து விடுகிறார். எனவே, ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்தை திரும்ப பெறவேண்டும். கவர்னர் பதவியில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை நீக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு ஆகும்.
தமிழக கவர்னரை பொருத்தவரை, அவர் தலைமறைவு குற்றவாளி எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர் குறித்த விவரங்களை போலீசுக்கு தெரிவிக்கவில்லை. குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 37ன்படி, குற்றவாளியை போலீசாரிடம் பிடித்து கொடுக்கவேண்டும். இதற்காக போலீசாருக்கு ஒவ்வொரு நபரும் உதவியாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.
அதன்படி ஒவ்வொரு நபர் என்பதில், கவர்னரும் உள்ளடங்கிவர் தான். ஆனால், கவர்னர் தன் கடமையை செய்ய தவறியதுடன், தன் வீட்டில் எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். எச்.ராஜா குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் மறைத்துள்ளார்.
எனவே, அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். கவர்னர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தேன்.
ஆனால், போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றார். இதனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது குற்றவியல் கோர்ட்டில் குற்றவழக்கு தொடர உள்ளேன். இந்த சூழ்நிலையில், தமிழக கவர்னரை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றங்களை செய்துள்ளதால், அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #hraja #governorbanwarilalpurohit #president
பீளமேடு:
அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டு அழைப்பு கொடுத்தும் நீங்கள் ஏன் புறக்கணித்திருக்கிறீர்கள்?
பதில் : புரோடாகால் படி எம்.எல்.ஏ.க்கள் பெயரை போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். உண்மையிலேயே நாங்கள் வர வேண்டும் என்று நினைத்தால் எங்களுடைய அவைல பிலிட்டியை தெரிந்து கொண்டு தான் யாரும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வைப்பார்கள்.
புரோடாகால்படி சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை போட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று அருந்ததியர் சமுதாயம் சார்பாக நடக்கிற மாநாட்டில் நான் பங்கேற்க இருப்பது 2, 3 மாதங்களுக்கு முன்பு திட்ட மிடப்பட்டது. எங்கள் கட்சி நிகழ்ச்சி என்றால் கூட தள்ளி வைத்துக் கொள்ளலாம்.
அ.தி.மு.க.வில் உயிரோட்டமான தொண்டர்கள் இப்போது இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து 2 நாளைக்கு 1000 ரூபாய் கொடுத்து சுற்றுலா செல்லலாம் என கூறி இலவச வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்கின்றனர். தொண்டர்கள் அவர்களிடம் இருப்பதாக காட்டுவதற்காகவே இது போன்று மக்களை தேடி, தேடி அழைக்கிறார்கள்.
கேள்வி : உங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டதா?
பதில்: அரசு நிகழ்ச்சிகளில் வழக்கப்படி அழைப்பிதழில் அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களை சேர்ப்பது வழக்கம். ஆனால் நான் ஏற்கனவே திட்டமிட்டடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வில்லை.
கேள்வி : நூற்றாண்டு விழாவுக்காக விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை இவர்கள் கேட்பார்களா? அதேநேரம் அ.ம.மு.க.வின் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையை வைத்து அகற்றுவது என்பது கேவலமான செயல். உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா இவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை?
கேள்வி : எச்.ராஜா விவகாரம் குறித்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : அமைச்சர் பதவியில் இருப்பதால் ஆர்.பி. உதயகுமார் மேதாவிகள் போல பேசுகிறார்? பொறுப்பு இல்லை எனில் யாரும் இவரை சீண்ட மாட்டார்கள்.
கேள்வி : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என தம்பிதுரை கூறி உள்ளாரே?
பதில் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரனுக்கு கோவை மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், உடுமலை சண்முகவேல், புறநகர் மாவட்ட செயலாளர் சுகுமார், தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அகஸ்டஸ், பொற்காலம் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.என்.ஆர். ராமலிங்கம், வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயசுதா, மாணவரணி மாவட்ட செயலாளர் சஞ்சீவிநாதன், பகுதி செயலாளர்கள் தங்கவேலு, நாகராஜ், ஜெயராஜ், மற்றும் கோபிநாத், மா.பா. ரோகிணி, அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #admk
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மன்னித்து விட்ட நிலையில், மத்திய அரசு உள்நோக்கத்துடன் கவர்னர் மூலமாக தடுத்து வருவதாக கருதுகிறோம். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை மறுத்துள்ள 7 தமிழர்களை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல் படவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக, எடுபிடி அரசாக உள்ளது. வருமான வரி சோதனை என்ற அடிப்படையில் பா.ஜ.க. அரசு, இவர்களை தொடர்ந்து தங்களது அடிமைகளாக வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறோம்.
நீதிமன்றத்தையும் காவல் துறையையும் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு மறுத்து வருவதில் இருந்தே மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது என்றார். #mutharasan #tngovernor #centralgovernment #rajivgandhicase #hraja
கோபி:
கோபியில் த.மு.மு.க. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் நாடாளுமன்ற மாண்புகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை.
அதேபோல் மனைவி புகார் அளித்தால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதினால் குடும்பங்கள் சீர் குலைந்து விடும். இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள்.
சிவில் சட்டத்தில் இருந்த திருமண பந்தத்தை கிரிமினல் சட்டத்தில் கொண்டு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது. உடனடியாக எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.
அதற்கு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடையும். அதற்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக அமையும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாததால் தமிழகத்தில் நடைபெறுவது பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சி என்பதை காட்டுகிறது.
இலங்கை போர் குற்றம் என தி.மு.க. மீது அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. வை குற்றம் சொல்ல அ.தி.மு.க. விற்கு எந்த அருகதையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #hraja #bjp
