என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "husband attack"
- நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
- நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர்.
ஆலந்தூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(46). இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
இதை அடுத்து போலீசார், நூர் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது விசாரணைக்கு செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் நூர் முகமது விமானத்தில் பயணம் செய்து வந்திருப்பதும், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர். இதுபற்றி திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.
மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.
தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.
வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதேஸ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் இரும்பாலை தளவாய்ப்பட்டியை சேர்ந்த வடிவேல்- பச்சியம்மாள் தம்பதியின் மகள் சசிகலா(23) என்பவருடன் திருமணம் நடந்தது.
கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா 7-வது மாதத்தில் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதேஸ் தனது மனைவி சசிகலாவை ஏன்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-
மாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் இறைச்சி எடுத்து சமைத்து வைத்தனர்.
நேற்று மாலையில் மாதேஸ் தளவாய்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் அவரது தாயார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.
இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காழியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.
இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.
இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த பச்சியம்மாள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவர், எனது மகளை விட்டு விடு என கெஞ்சினார். ஆனாலும் மாதேஸ் கேட்கவில்லை. மிருக தனமாக காலால் மிதித்து, கழுத்தை இறுக்கினார்.
உடனே பச்சியம்மாள் எனது மகளை கொலை செய்கிறான். யாராவது ஓடி வாருங்கன் என கூச்சல் போட்டார். ஆனால், அதற்குள் மாதேஸ், சசிகலாவை கொலை செய்து விட்டார்.
உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நாகர்கோவில்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 19). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மஞ்சுளாவுக்கும், அவரது எதிர் வீட்டில் வசித்த ஜோதி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் மணிகண்டனும், உறவினர்களும் கள்ளக் காதலர்களை கண்டித்தனர்.
இதனால் கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி குமரி மாவட்டம் வந்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து கணவன்-மனைவி போல் வாழ்ந்தனர்.
மஞ்சுளா மாயமானதால் மணிகண்டன் அவரை தேடி அலைந்தார். அவர் மாயமானது பற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். பின்னர் மஞ்சுளா கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்து மணிகண்டன் இங்கு தேடி வந்தார். உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சுளாவை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறிது காலம் மணிகண்டனுடன் வாழ்ந்த மஞ்சுளா கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலன் ஜோதியுடன் கன்னியாகுமரிக்கு ஓடி வந்தார். குழந்தைகள் நலன் கருதி மணிகண்டன், மஞ்சுளாவை தேடி கன்னியாகுமரிக்கு வந்தார். மஞ்சுளாவிடம் பேசி அவரை ஊருக்கு அழைத்து செல்ல தயாரானார்.
ஊருக்கு செல்வதற்காக மஞ்சுளாவும், மணிகண்டனும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுடன் கள்ளக் காதலன் ஜோதியும் சென்றார். ரெயில் நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மஞ்சுளாவுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கல்லை எடுத்து மஞ்சுளா தலையில் ஓங்கி அடித்தார். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார்.
அந்த பகுதியில் நின்றவர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா இன்று காலை இறந்தார்.
மஞ்சுளா தாக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே அவரது கள்ளக்காதலன் ஜோதி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்திருந்தனர். தற்போது மஞ்சுளா இறந்து விட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா (வயது 21).
இவருக்கும், போளூர் பொத்தரை பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பச்சையப்பன் கட்டுமான சாரம் கட்டும் தொழிலாளி. இந்த நிலையில், இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர். பச்சையப்பனின் கள்ளக்காதல் விவகாரம், மனைவி பூஜாவிற்கு தெரிய வந்தது. தகாத உறவை விடும்படி கணவனை வற்புறுத்தினார். எனினும் கள்ளக்காதலியுடன் பச்சையப்பன் தொடர்பில் இருந்தார். மனைவி மீது வெறுப்படைந்தார்.
இதனால் பச்சைப்பன், பூஜாவின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.
நள்ளிரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்காக வெறிப்பிடித்ததை போல் மாறிய பச்சையப்பன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதில், படுகாயமடைந்த பூஜா வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள், பச்சையப்பன் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டார். பூஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று காலை பூஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பச்சையப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் கலையரங்க தெருவை சேர்ந்தவர் நம்பி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 37). நம்பிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மதுகுடித்தபடி வீட்டுக்கு வருவார். வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் போதையில் தகராறு செய்துவந்தார்.
மேலும் வேலை செய்து கிடைக்கும் சம்பள பணத்தை வீட்டிற்கு சரிவர கொடுப்பதில்லையாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நம்பி மது குடித்துவிட்டு வரும்போதெல்லாம் பேச்சியம்மாள் கண்டித்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு நம்பி வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கி விட்டனர்.
நள்ளிரவு திடீரென விழித்த நம்பி ஆத்திரத்தில் அங்கு கிடந்த கம்பை எடுத்து மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் பேச்சியம்மாளின் முகம் சிதைந்தது.
பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே நம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வள்ளியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி நம்பியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). இவர் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்த சவீதா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
வெங்கடேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அதனை மறைத்து, சவீதாவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த வெங்கடேசின் முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வெங்கடேஷ் தனது 2-வது மனைவி சவீதாவுடன் பூத்துறை காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
வெங்கடேஷ் தனது மனைவி சவீதாவிடம் உன் வீட்டில் இருந்து எனக்கு வரதட்சணையாக பணம், நகை வாங்கிகொடு. இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என கூறிவந்தார். இதற்கு சவீதா எங்கள் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கிதர முடியாது என்றார். இதனால் கணவன்-மனை விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமியார் வீடான புதுவை கூடப்பாக்கத்துக்கு சென்றார். அங்கு வைத்து மாமியார் செல்லம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூத்துறைக்கு வந்தார்.
அப்போது கணவன்- மனைவிக் கிடையே வரதட்சணை பணம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேஷ் ஆத்திரமடைந்து சவீதாவை கட்டையால் தாக்கினார். பின்னர் சிலிண்டர் பைப்பை எடுத்து சவீதாவின் கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி சவீதா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தடயங்களை மறைப்பதற்காக வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறைகளை வெங்கடேஷ் சுத்தப்படுத்தினார். சவீதா அணிந்திருந்த புடவையை அப்புறப்படுத்தி வேறு புடவையை சவீதாவுக்கு கட்டினார்.
சவீதாவின் தாய் செல்லம்மாளுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார். என கூறி போனை துண்டித்தார். பின்னர் வீட்டில் இருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் கேட்டு செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு பூத்துறைக்கு வந்தனர். அங்கு சவீதா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சவீதாவின் உடலை பார்வையிட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சவீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து சவீதாவின் தாய் செல்லம்மாள் வானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை செல்லம்மாள் தனது உறவினர்களுடன் வானூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். சவீதாவை கொலை செய்த வெங்கடேசை உடனே கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் எழிலரசி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளச்சேரி:
பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் வசித்து வருபவர் ஐய்யப்பன். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (10), வர்ஷினி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளன.
நேற்று இரவு குழந்தைகள் ஜெயஸ்ரீ, வர்ஷினி ஆகியோர் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு போட்டு இருந்தது. இதுபற்றி அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது சுகந்தி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சுகந்தி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுகந்தியின் கணவர் ஐய்யப்பன் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சுகந்தியை அவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு வீட்டை பூட்டி தப்பியது தெரியவந்தது.
சுகந்திக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ஐய்யப்பன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் சுகந்தி கள்ளக் காதலை கைவிட வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐய்யப்பன் மனைவியை கொன்றுள்ளார்.
தப்பி ஓடிய ஐய்யப்பனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சேலையூரில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஐய்யப்பன் சிக்கினார். அவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவியை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 23). இவருக்கும் அம்மைய நாயக்கனூரைச் சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ராமையா சரக்கு வேன் ஓட்டி வருகிறார். ரேணுகாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் ராமையா சிறுமலைக்கு வந்து கொண்டு இருந்தார்.
சிறுமலை பழையூர் பகுதியில் வேனை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்குள் கணவன், மனைவி சென்றுள்ளனர்.
அப்போது ரேணுகாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரது சேலையை மரத்தில் கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புறநகர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்திரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய கணவர் ராமையாவை தேடி வருகின்றனர். ராமையாவிடம் விசாரணை நடத்திய பிறகுதான் கொலைக்கான உண்மை நிலவரம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் செண்பக ராமன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). ஆசாரி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (47).
இவர்களுக்கு மகாலட்சுமி, தமிழ்செல்வி என்ற மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனி இடங்களில் வசித்து வருகிறார்கள்.
ஆறுமுகம்- சரஸ்வதி மட்டும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். சமீப காலமாக ஆறுமுகம் வேலைக்கு செல்வதில்லை. சரஸ்வதி லாஸ்பேட்டையில் உள்ள கல்வித்துறை சமையல் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டு வேலைகளுக்கும் சென்று வருவார்.
ஆறுமுகம் வேலைக்கு செல்லாத அதே நேரத்தில் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
நேற்று இரவு கணவன் - மனைவி இருவரும் வீட்டில் தூங்கினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் உருட்டுக்கட்டையால் மனைவி சரஸ்வதியை கடுமையாக தாக்கினார்.
தலையின் பின்பக்கம் சரமாரியாக அடி விழுந்தது. இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.
மனைவி இறந்து விட்டதை அறிந்த ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இந்த கொலை நடந்தது யாருக்கும் தெரியாது.
இன்று காலை சரஸ்வதியின் மகள் தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சரஸ்வதி பிணமாக கிடந்தார்.
இதுபற்றி லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் ஆகியோர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தலைமறைவாகி விட்ட ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பாரதியார் தெருவில் 39 வயது இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை இளம்பெண் வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
இவர்களது வீட்டின் அருகே பாழடைந்த ஒரு வீடு உள்ளது. அங்கு 6 வாலிபர்கள் இருந்தனர். குளியலறையில் சத்தம் கேட்டு 6 வாலிபர்களும் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தனர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர் வாலிபர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இளம்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த நரேஷ், ஷியாம், முரளி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள். தாக்குதலில் காயம் அடைந்த இளம்பெண்ணின் கணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்