என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ila ganesan"
- உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
- கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா. கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
கோவிலுக்கு வந்த இலா.கணேசனுக்கு அழிஞ்சிவாக்கம் பாஸ்கர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- இருதயத்துறை மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளஆளுநர் இல.கணேசன் தமிழகம் வந்துள்ளார். இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவர் குழுவினர் இல.கணேசனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர்:
பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.
பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..
கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
பா.ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. சிறைக்கு சென்றவர்கள், செல்லப்போகிறவர்கள் என இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை கைது செய்ய முடியாது. தேர்தல் வரை அவர்கள் வெளியில் இருக்கலாம். எந்த மாகாணத்திலும் எதிர் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்படியே சேர்ந்தாலும் ராகுல்தான் பிரதமர் என யாரும் கூற வில்லை.
ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறுகிறார். விழிப்பாக இருந்து தப்பு செய்கிறவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செல்லும் இடமெல்லால் மோடி, மோடி என்கின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #ilaganesan
வாலாஜா:
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 15ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக விழா, 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண மஹோத்சவ விழா மற்றும் முரளிதர ஸ்வாமிகள் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நேற்று 108சுமங்கலி பூஜை, கோ மாதா திருக்கல்யாணம், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் காலை கணபதி ஹோமம், கோ பூஜை செய்து 108சுமங்கலிக்கு பூஜையும் கோமாதா திருகல்யாணம் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ரத்தனகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வதித்து சிறப்பித்தனர்.இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ராகுல் வருகையால் எந்த ஒரு பெரிய மாற்றம் உருவாகாது. ராகுல் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகிறார்கள். மக்களிடத்தில் அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். இவர்களுடைய சரக்கு இவ்வளவுதான் என மக்கள் நினைப்பார்கள்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பா.ம.க. ஒன்று, பா.ஜ.க. ஒன்று, மற்ற அனைத்தும் அதிமுக கைப்பற்றியது. அப்போது யாருயெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் கூட்டணி வைத்திருக்கிறோம் மீண்டும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #rahulgandhi #parliamentelection
மதுரை:
பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.
இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.
இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.
நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் முஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi
இதற்கு பாஜக மூத்த தலைவர் இல கணேசன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பிரதமர் மோடிக்கு உரிமை உண்டு, தமிழகத்திற்கும் வருவார், பிரச்சாரம் செய்வார் என இல கணேசன் தெரிவித்தார்.
மோடி தமிழகத்திற்கு வர முடியாது என கூறும் ஸ்டாலின் போன்றோர் சற்று நிதானமாக பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். #BJP #IlaGanesan #DMK #MKStalin
மதுரை:
பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தமிழ் பற்றாளராக இருந்தால் அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், தமிழ் பற்றாளர்கள் அல்ல என்றும் தவறான கருத்து நிலவி வந்தது.
அதனை மாற்றத்தக்க வகையில் செயல்பட்டவர் வ.உ.சி. அவரது நினைவு நாளை அனுசரிப்பதன் வாயிலாக தேச நலனுக்காக பாடுபடும் இளைய தலை முறையினரிடம் ஊக்கம், உற்சாகத்தை ஏற்படுத்த முடியும்.
தமிழக அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதுபோல் எதிர்க்கட்சிகள், கட்சி பேதங்களை மறந்து முதல் முறையாக தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளன. அவர்களுக்கும் என் பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு கஜா புயல் விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும்.
நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்பதையும் மறந்து ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். காந்தி, காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை. நெருக்கடி நிலையின்போது அது கலைக்கப்பட்டு விட்டது.
தற்போதுள்ளது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதில் இருக்கும் ‘ஐ’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகங்காரம் என்று பொருள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் தேவசம் போர்டு, சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியிருப்பது ஆறுதல் தருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இனிமேலாவது இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு அய்யப்பன் அவர்களுக்கு நல்ல புத்திய தர வேண்டும்.
தமிழகத்தில் 20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தயாராக உள்ளது. இதற்காக ஆங்காங்கே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை யார் வேட்பாளர், எந்த கூட்டணி என்பது முக்கியமல்ல.
பிரதமர் மோடி 4½ ஆண்டு காலம் ஊழலற்ற ஆட்சி தந்துள்ளார். அடுத்த தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை மோடி நிறைவேற்றி விட்டார். இன்னும் ஒரு சில நிலுவையில் உள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதனை நிறைவேற்றுவோம். 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #ilaganesan
புதுவை முதலியார் பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் புதுவை அரசின் வேதனைகள் குறித்த பொதுக்கூட்டம் வானொலி திடல் அருகே நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரவி அண்ணாமலை, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி வரவேற்றார்.
கூட்டத்தில் மேல்சபை எம்.பி. இல.கணேசன் பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்களும் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலிய சென்று குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்தது. அங்கு சிறிது முயற்சி செய்திருந்தால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கும். அதனால் தான் புதுவைக்கு வந்த பிரதமர் மோடி, நாராயணசாமி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்-அமைச்சராக இருப்பார் என கூறினார்.
பிரதமர் மோடி நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். வாஜ்பாய், மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துத்தான் திட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.
தங்க நாற்கர சாலை, இலவச கியாஸ் இணைப்பு என பா.ஜனதா செய்த சாதனைகளை மக்களிடம் கூறி ஓட்டுக் கேட்கப்போகிறோம். 2022ல் இந்தியாவில் வீடில்லாதவர்களே இருக்கக் கூடாது என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அண்டை நாடான இலங்கையிலும் தமிழர்களுக்கு பா.ஜனதா ஆட்சியில் தான் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மானியம், மக்கள் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதால் கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாவது தடுக்கப்பட்டுள்ளது. 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஆளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பயனடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச் செயலாளர்கள் தங்கவிக்ரமன், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #IlaGanesan #BJP
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அரசு. முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கட்சி எந்த மதத்திற்கும் ஆதரவானவர்களும் அல்ல எதிரானவர்களும் அல்ல.
பா.ஜ.கவிற்கு நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் அப்துல் கலாமையே குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்தோம். அதே சமயம் துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம்.
2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார். #ilaGanesan #petroldiesel
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முகநூல், டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், அவர் தலைவராகப் பதவி ஏற்றவுடன் பேசிய பேச்சு மிகவும் தவறான ஒன்று.
இந்த தேசத்தில் காவி மயம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை. தமிழகத்தில் எந்த கிராமத்துக்குப் போனாலும் காவி அணிந்து வந்தால் வணங்குகிறார்கள். காவி புனிதமானது. பா.ஜ.க. ஒரு காவிக்கட்சி என்று சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் பா.ஜ.க.வைக் கேவலப்படுத்துவதற்காகக் காவியைக் கேவலப்படுத்தினால் அதைப்பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைய கற்க வேண்டும். அப்படி இல்லையெனில் பா.ஜ.க. பாடம் கற்றுக் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #IlaGanesan #MKStalin
சேலம்:
சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.
இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.
சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்