என் மலர்
நீங்கள் தேடியது "INAUGURATION"
- காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் அல்பரிதா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
- ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பிரமாண்டமாக கட்டப்ப ட்டுள்ளது. இந்த இறையில்ல கட்டுமான பணிக்கு பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் ஜமாத் தலை வர்கள், அல்பரிதா குரூப் நிறுவனங்களின் நிறுவனம் ஹாக்கி ஜமால் முகமது, முன்னாள் ஜமாத் தலைவர் துல்கருணை சேட், முன்னாள் பொருளாளர் அபு ஹனிபா வழுதூர், முன்னாள் இமாம் அப்துல் காதர் ஆலி, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் வழுதூர் குலாம் முகமது ஆகியோர் முன்னோர்களின் துவா பரக்கத்தாலும் இறைவனின் நாட்டப்படி இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
வழுதூர் கிராம மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 2 மணி வரை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு உலக நாடுகளில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அல்பரிதா அல்நஜ்மா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம், அவரது சகோதரர்கள் பகுருதீன் ஹாஜா ஜமால் நசுருதீன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினருடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக ஒரு மாதமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.
அதன்படி மாவட்ட த்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருக்கும் அல் நஜ்மா அல்பரிதா குழுமத்தின் சார்பிலும், வழுதூர் கிராம மக்கள் வழுதூர் இளைஞர் சங்கத்தினர் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு பள்ளி வாசல் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவை காண ஏற்பாடுகளை வழுதூர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் கமாலுதீன், தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள ஜமாத் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் இணைந்து இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர்.
திறப்பு விழாவுக்கு வழு தூர் ஜமாத் தலைவர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். வழுதூர் ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் லியாக்கத் அலி, மலேசியா ஜமாத் செயலாளர் சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் சேகு ஜெய்னுலாப்தீன், துபாய் ஜமாத் செயலாளர் தாவுத் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் முஸ்தபா கமால் வரவேற்றார். தலைமை இமாம் ரஹ்மத்துல்லா மிஸ்பாகி கிராஅத் ஓதினார்.
வி.எஸ்.எம். அமானுல்லா, ஓ.எம்.எஸ்.அன்சாரி, அபுஹனி, சீனி அகமது, ஆகியோர் பள்ளிவாசலை திறந்துவைத்தனர்.
முகம்மது ஹாருன், முகம்மது சஜருதீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இறை இல்லத்தைக் கட்டிக் கொடுத்த வசந்தா கன்ஸ்ட்ரக்சன்ஸ் தலைமைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இல்ல வடிவமைப்பாளர் ரத்னா பில்டர்ஸ் தலைமைப் பொறியாளர் பால்பாண்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.
அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், நாசர், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆளூர் ஷா நவாஸ், பரமக்குடி முருகேசன், திருவாடனை கரு.மாணிக்கம், ஐ.யு.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மனித நேய ஜன நாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
- கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமை வகித்தார்.
கரூர்:
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமை வகித்தார். இதில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் வளத்தை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பாக பள்ளிக்கு, தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில், உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக டேபிள், சேர், சீருடை உட்பட பல்வேறு பொருட்கள், வழங்கப்பட்டன. மேலும், பள்ளிக்கு தேவைப்படும் பொருட்களை, தங்கள் பங்களிப்பாக பெற்றோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் சித்ரா, பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
- பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
- ரூ.3.40 கோடியில் கட்டுமானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி 3 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இக்கட்டிடத்திற்கு கடந்த நவ.29-ம்தேதி அரியலூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பழைய கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்கமங்கலத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குரும்பூர்:
அங்கமங்கலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் வரவேற்றார். குரும்பூர் லூசியா ஆலய பங்கு தந்தை பபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள் மிஸ்தார்அலி, நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக தமிழக அர சின் நமக்கு நாமே திட்டமும், இயேசு விடு விக்கிறார் புது வாழ்வு சங்கமும் இணைந்து குரும்பூர் புதுக்கிராமம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை இயேசு விடுக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்.
இதில் துணைத்தலைவர் முத்துசங்கர், ஆழ்வை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், என்ஜினீயர் வெள்ளப் பாண்டி, தட்சணமாற நாடார் சங்க துணை தலைவர் முரு கேசப்பாண்டியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலமுருகன், குரும்பூர் வியாபாரி சங்க தலை வர்கள் கிஷோக் முரு கானந்தம், பரமசிவன், நாலுமாவடி பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, பாதிரியர் ரொபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.
- விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது.
- இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சர்வோதய சங்க கட்டிடம் உள்ளது. இந்த நிலையில் பழைய காதி பவன் கடைகளை புதுப்பித்து விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கே.ஆர்.டி.பி.திட்டத்தில், பல்லடத்தில் உள்ள சர்வோதய சங்க கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் அருகிலேயே பணிமனை ஒன்றும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.புதிய கட்டடங்களை, இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தார். வாரியத்தின் தென் மண்டல தலைவர் பாண்டே, வாரியத்தின் தமிழ்நாடு இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் சர்வோதய சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். கட்டிடங்களைத் திறந்து வைத்த வாரியத் தலைவர் மனோஜ் குமார் கதர்வாரிய பொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் கதர்வாரிய உறுப்பின ர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சர்வோதய சங்க தலைவர் ஆறுச்சாமி, பொருளாளர் பழனிச்சாமி, அலுவலர் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் ரமேஷ், மஞ்சுநாதன்,நெசவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இளையான்குடி யூனியனில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
எஸ்.காரைக்குடி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி தலைமை தாங்கி கட்டிட த்தை திறந்து வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்தையா, தி.மு.க. விவசாய அணி காளிமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி, அய்யாச்சாமி, வடக்கு சந்தனூர் கிளைச் செயலாளர் சடைமுனி, அவைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் முனைவென்றி யில் புதியஊராட்சி மன்றக் கட்டிடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்புவிழா நடந்தது.
- இந்த மையத்தில் 7 நாட்களுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் ரத்த பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் ஏ. ஜே. பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மைய திறப்பு விழாவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரத்த பரிசோதனை ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மோகன் குமார், திருச்சி எம்.எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு வழக்கறி ஞர்கள் கோட்டைச்சாமி, தீபக் மற்றும் முக்கிய பிர முகர்கள் டாக்டர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், அமுதா சாமுண்டீஸ்வரி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
இந்த ரத்த பரிசோதனை மையத்தில் வருகிற 23- தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாறு ரத்த பரிசோதனை நிலைய பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- பாளையபாடி கிராமத்தில் 10ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகம்
- திறப்பு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையப்பாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பாளையபாடி பஸ் நிலையம் அருகில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது .விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.முன்னாள் பால்வளத்துறை தலைவர் பாலை திருநாவுக்கரசு அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி கலந்து கொண்டு இந்த நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், மாரியப்பன், பாளை பழனிச்சாமி, ரவிசங்கர், கோவிந்தராஜ். சுபாஷ், பழனியப்பன் , மணியன், கருப்பையன், வினோத் ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் ஸ்வீட் காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது
- ஸ்ரீரங்கம் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் அங்கம்
- தலைவருக்கு சுத்தியல் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் புதியஅங்கமாக, புதுக்கோட்டை ஆனந்தம் புதிய சங்க துவக்க விழா நேற்று மாலை புதுக்கோட்டையில் எழில் நகரில் உள்ள தாஜ் மினி ஹாலில் நடைப்பெற்றது. ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் சேது சுப்பிரமணியன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். புதிய தலைவரிடம், கூட்டங்களை நடத்த பாரம்பரிய சுத்தியல் வழங்கப்பட்டது.புதிய சங்கத்தின் பேனரும் வழங்கப்பட்டது.மாவட்ட அவை செயலர் செல்வராஜ், மாவட்ட அவை பொருளாளர காமராஜ், கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சசிகுமார், கூடுதல் மாவட்ட அவை பொருளாளர் சிபக்குமார், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டாக்டர் மகேந்திரன், சங்கம் விரிவாக்கம் நெல்சன் ஆரோக்கியம், மண்டல தலைவர்சிவக்குமார், வட்டார தலைவர் டாக்டர் அம்முட்டி பாபா வாழ்த்துரை வழங்குகினார். புதுக்கோட்டை ஆனந்தம் சங்க நிர்வாகிகள் தலைவராக சோலை சுப்பிரமணியன், செய லாளராக இளவரசு சோம சுந்தரம், பொருளாளராக எஸ்.என்.பழனியப்பன், முதல் துணைத் தலைவராக இளஞ்சேரன், இரண்டாம் துணை தலைவராக விஜயலெட்சுமி, துணைச் செயலாளராக ஆண்டோ கலைச்செல்வன், இயக்கு நர்களாக அமுதன், அமல சவரிராஜ், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக சுவாமிநாதன், தலைமை பண்பு பயிற்சி தலைவராக ச.மனோகர், முடுக்குனராக தங்கராஜ், அடுக்குனராக ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலராக சோலைச்சி, உறுப்பினர்களாக பத்பநாபன், அரவிந்த்ராஜா, கீதா, சூரஜ் ஜம்பாஜி ஜாதவ், இளங்கோவன், ருத்ர சங்கர் மாலி, சேகர், செல்வராஜ், பெரியசாமி, பிரேம் ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், அருள்செல்வம், நல்லதம்பி ஆகியோர்ப தவியேற்றனர். விழாவில் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மருத்துவர் ராம்பிரகாஷ், லயன்ஸ் மேனா.குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
- ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
உடுமலை :
உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். இளமுருகு வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு உடுமலை கட்டுநர்வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
- 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால், சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பல்லடம் திமுக. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், அதிமுக., இளைஞரணி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமை ஆசிரியை விஜயராணி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.