என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax"

    • 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
    • தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.

    ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.

    • வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.
    • வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.

    பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

    புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.

    வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.

    • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
    • சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    சென்னை :

    வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

    சிவா டெக்ஸ்டைல்ஸ்

    இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.

    செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.

    வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

    அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சோதனை நடத்தினர்.

    நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 13 மணிநேரம் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்தது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி இன்று நடைபெற்றது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.

    லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
    • திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.

    இதில் திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

    • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
    • மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது

    புதுடெல்லி:

    வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

    மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை
    • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
    • ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி
    • ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி
    • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி
    • ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.
    • கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
    • 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இப்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருமானவரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது.

    தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. சேமிப்பின் காரணமாக அவர்கள் போடக்கூடிய விலக்குகளில் அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

    வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.

    இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    • வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
    • வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

    புதுடெல்லி :

    ஆன்லைனில் 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

    இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.

    ×