என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian railways"

    • வாரத்திற்கு ஆறு நாள் சேவை கொண்டதாக நமோ பாரத் ரேபிட் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    • அகமதாபாத்- புஜ் நகரங்கள் இடையே 360 கி.மீட்டர் இடைவெளியில் இந்த ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று மாலை இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

    இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

    இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது.

    110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன.

    வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.

    இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

    இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.

    புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

    • துர்நாற்றம் வீசினால், உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும்.
    • பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறைந்த கட்டணம், படுக்கை வசதிகள் போன்றவற்றால் இந்திய மக்கள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். கொஞ்சம் வசதி படைத்தோர் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 

    ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நிலையில்தான் ஆர்.டி.ஐ. மூலம் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் கேட்டிருந்தது.

    அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த நாளிதழ் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் பல்வேறு தூய்மைப் பணியாளர்களிடம் தகவல் கேட்டது. அப்போது நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும். ஒருவேளை அதிக துர்நாற்றம் அடித்தால் அல்லது உணவு பொருட்கள் கொட்டினால் துவைக்கப்படும். இல்லையெனில் பயணம் முடிந்த பின்னர் போர்வைகள் மடித்து அந்ததெந்த பெட்டிகளில் சுத்தமாக வைக்கப்படும் என பதில் அளித்தனர்.

    மேலும், கம்பளி போர்வைகள் துவைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்படுவது கிடையாது. பயணிகள் புகார் அளித்தால் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    அதேவேளையில் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் ஒவ்வொரு பயணமும் முடிந்த பின்னர் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலம், வாஷிங் மெஷின்கள் ரெயில்வேக்கு சொந்தமானது. அதில் பணியும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பத குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கடிதம்.
    • மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம்.

    பாராளுமன்றத்தில் உள்ள தென்இந்திய எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டு மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்புவது வழக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தென்இந்திய எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினால் அதற்கு இந்தியில் பதில் கடிதம் அனுப்புவது அதிகரித்து வருகிறது.

    கேரள எம்.பி.க்.கு இந்தியில் பதில் கடிதம்

    அந்த வகையில்தான் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ்க்கு நடந்துள்ளது. ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ரவ்நீத் சிங் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    இணை மந்திரி இந்தியில் கடிதம் அனுப்பியதை கண்டிக்கும் வகையில் ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக எம்.பி.-க்கும் இதுபோல் நடந்த சம்பவம்

    கடந்த மாதம் இதேபோல் இந்தியில் கடிதம் எழுதிய ரெயிலவே இணை அமைச்சருக்கு தி.மு.க.எம்.பி. அப்துல்லா தமிழில் பதில் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்படும்.
    • போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும்தான் துவைக்கப்படுமா என காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.

    ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா, "ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?" என மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படும். பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் கம்பளியும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரெயில்வே துறைக்கு ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தது.

    அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

    • (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.
    • உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா?

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையத்தளம் ஒரே மாதத்தில் 3வது முறையாக முடங்கியுள்ளது.

    புத்தாண்டை ஒட்டி அதிக வெப் டிராபிக் காரணமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.

    இதன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல பயனர்கள் இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை, மேலும் உள்நுழைய முடிந்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

    காலை 10 மணிக்கு பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றபோது இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதனைத்தொடந்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    @RailMinIndia ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் செயல்படவில்லை, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

     

    நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா? உங்கள் கஸ்டமர் கேர் குழுவை நீங்கள் மாற்ற வேண்டும் என்று ஒரு பயனர் X இல் (முன்னர் Twitter) பதிவிட்டுள்ளார்.

    தட்கல் முன்பதிவு-கிளாசிக் நேரத்திற்கு சற்று முன் ஐஆர்சிடிசி செயலிழந்தது என்று மற்றொரு பயனர் எக்ஸ் தளத்தில் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்தார். இந்நிலையில் தட்கல் நேரம் கடந்த பின்னர் ஐஆர்சிடிசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பித் தவிக்கின்றனர். 

    • காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ரெயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரெயில்வே தொடங்கியது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் இந்தியாவின் முதல் கேபிள் தங்கு ரெயில் பாலமான அஞ்சி காட் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான ரெயில் பாலமான செனாப் பாலம் வழியாகவும் செல்லும்.

    இதன் முதல் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இந்த புதிய ரெயில் சேவையானது ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான தொடர்பை மேம்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

    • பயன்படுத்த முடியாத இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன.
    • மின்னணுமுறை ஏலம் மூலம் கழிவுப் பொருட்கள் விற்பனை.

    நாடு முழுவதும் ரெயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் இரும்புக் கழிவுகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன.

    இந்த இரும்புக் கழிவுகளை தொடர் நடவடிக்கை மூலம் ரெயில்வே விற்பனை செய்து வருகிறது. மின்னணுமுறை ஏலம் மூலம் இந்த கழிவுப் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இந்த செயல்முறை மண்டல ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 


    இந்நிலையில் 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

    2021-22 நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.2300 கோடி கழிவு பொருள் ஏலம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. அதை ஒப்பிடும்போது நடப்பாண்டு 28.91 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்தது.
    • இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    புதுடெல்லி :

    கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன.

    இந்திய ரெயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த காலக்கட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வருவாய் ரூ.17 ஆயிரத்து 394 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளது.

    முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு 34.56 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42.89 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    முன்பதிவு செய்த வகையில் கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 961 கோடி கிடைத்து இருக்கிறது. இது 65 சதவீதம் அதிகம் ஆகும்.

    முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதைப்போல முன்பதிவு அல்லாத பயணத்தில் வருவாயும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 6 மடங்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    • பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
    • பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடி கிடைத்துள்ளது.

    புதுடெல்லி

    நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.

    பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.

    பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.

    • முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
    • குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.

    இந்நிலையில், ரெயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரெயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ரெயில்வேயிடம் குறை இருப்பதாக கூறி கேள்விகேட்ட பயணி ஒருவருக்கு, மூக்கறுக்கும் விதமாக ரெயில்வேத்துறை பதில் அளித்துள்ளது.
    புது டெல்லி:

    இந்திய ரெயில்வேயில் பயணம் செய்ய வேண்டி ஆன்லைன் மூலம் புக் செய்வதற்காக செல்போனில் ரெயில்வே ஆப் உள்ளே சென்றிருக்கிறார் ஆனந்த்குமார். அப்போது விளம்பரங்கள் வந்துள்ளது. இந்த விளம்பரங்கள் ஆபாசமாக இருந்துள்ளது.

    இதனையடுத்து ஆனந்த், ரெயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியில் செல்போனில் இருந்த படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சுட்டிக்காட்டி, 'பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது  மிகவும் ஆபாசமான, மோசமான விளம்பரங்கள் தொடர்ச்சியாக காட்சியாகிறது. இது அருவருப்பாகவும், எரிச்சல் மூட்டுவதாகவும் இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.



    இதற்கு பதிலளித்த ரெயில்வேத்துறை ஆனந்தின் மூக்கை அறுப்பதுபோல், 'இந்திய ரெயில்வே விளம்பரங்களுக்காக கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்துகிறது. பயனாளர்களை தக்க வைத்துக் கொள்ள குக்கீஸினை பயன்படுத்தும். உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை பொருத்தே இந்த விளம்பரங்கள் காட்சியாகும்.

    இதுபோன்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை தயவுசெய்து அழித்து விடுங்கள்' என அதிரடியாக கூறியுள்ளது. இந்த கேள்வி பதில் அடங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

     
     
    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #IndiaPakistanWar #IndianRailway
    புதுடெல்லி:

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்வே ஜெனரல் மானேஜர்களுக்கும் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா ரெயில்களையும் மிகுந்த பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் இயக்க பகுதிகள் மற்றும் ரெயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    ×