search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive"

    • முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    தக்காளி

    சாலையில் சென்ற போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த வர், தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாக னத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    இது குறித்து நல்லிபாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பெண்ணி டம் பணம் கொள்ளை யடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
    • நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். நாற்றங்கால் நடவு முறை, நெல் விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான கோ 51 விதை நெல் 11 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதே போல் நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.   

    • வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
    • வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, ஆனங்கூர், அண்ணா நகர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்ற னர். இவர்கள் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடு கின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறி கொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர்.

    இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் அவ்வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.

    எனவே, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபு ரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், வட மாநில தொழி லாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வந்தது.

    இதையடுத்து, ஜேடர்பா ளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, வி.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் தூங்கிய வட மாநில தொழிலா ளர்கள் 4 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், நேற்று முன்தினம் இரவு ஜேடர்பா ளையம் பகுதியைச் சேர்ந்த முரு கேசன் என்ப வர் தோப்பில் இருந்த 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் சில பாக்கு கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். வாழை தோப்பின் உரிமையாள ரான முருகேசன், முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை யிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மொளசி மற்றும் ஜேடர்பா ளையம் பகுதிகளை சேர்ந்த, படுகொலை செய்யப்பட்டு இளம்பெண்ணின் சமூகத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தன்று, நள்ளிரவு 2.30 மணி அளவில் கரப்பாளையம் பகுதியில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த வர்களை தட்டி எழுப்பி, அவர்களது கைகள், துணி, உடலை நுகர்ந்து பார்த்து சோதனை செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர்கள், ஏன் எங்கள் சமூகத்தை மட்டும் குறி வைத்து இது போன்ற தேவையற்ற முறையில் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீ சார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இப்பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சமூ கத்தை சேரந்தவர்களை மட்டும் குறிவைத்து சம்பந்தப்பட்ட வழக்கு களில் கைது செய்து சிறை யில் அடைத்து வருவதாக கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் போலீசார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது போன்ற தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் போலீசார் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடு கின்றனர். இதனால் தேவை யற்ற போராட்டங்களை போலீ சார் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

    • சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது.
    • இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 52). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நெத்திமேடு அருகே உள்ள பருப்பு மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது. இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை உடன் பணிபுரிவோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
    • 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அன்னதானப்பட்டி:

    கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி தலைமையில், 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்து, 3 பிரிவாக பிரிந்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில், நள்ளிரவு நேரங்களில், 18 வயதுள்ள சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய உள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால், அந்த வாகனங்களின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 18 வயது முடிவடையாத தங்கள் மகன்களுக்கு எக்காரணம் கொண்டும், மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

    அதேபோல், செல்போன்கள் மூலம் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதால், தங்களது குழந்தைகளை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டுகள், புத்தகங்கள் படிப்பது உள்ளிட்ட பயனுள்ள செயல்களில் குழந்தைகள் ஈடுபட பெற்றோர் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    புதுவை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல தடவை தடைபட்டு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் வரும் 6-ம் தேதி திருவண்ணாமலை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகஆளுநர் ரவி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இதில் நீதிபதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திண்டிவனம் , செஞ்சி வழியாகத்தான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். இதனால் இப்போது தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சாலையின் வழியாக திருவண்ணாமலை தீபத்தன்று சென்னை புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

    • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகிய இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.

    இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது .

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற 25 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரின் உடலிலும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரச ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் 50 சதவீதம் அவரது உடல் கருகியது.

    தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×