என் மலர்
நீங்கள் தேடியது "Internet service"
- கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய சேவைகள் முடங்கியுள்ளது.
- உலக அளவில் இணைய சேவை நிறுத்தங்களில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருந்துள்ளது.
உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய சேவைகள் முடங்கியுள்ளது.
தொடர்ந்து, ராஜஸ்தானில் 96 முறையும், உத்தரப் பிரதேசத்தில் 30 முறையும், மகாராஷ்டிராவில் 12 முறையும், தெலுங்கானாவில் 3 முறையும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கடந்த 2022ம் ஆண்டில் அதிகபட்சமாக இந்தியாவில் 84 முறையும், உக்ரைனில் 22 முறையும், ஈரானில் 18 முறையும், மியான்மரில் 7 முறையும் இணைய சேவை முடங்கியுள்ளது.
அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக இணைய சேவைகள் முடக்கத்தில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் 106 முறையும், 2020ல் 109 முறையும், 2019ல் 121 முறையும் இந்தியாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உலக அளவில் இணைய சேவை நிறுத்தங்களில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருந்துள்ளது.
- இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
- தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தடையில் கைபேசி இணையச் சேவை மற்றும் அகண்ட அலைவரிசை இணையச் சேவை உள்ளடங்கியதாகும். அரசு பயன்பாட்டுக்கான இணையச் சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
- மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
- பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பழனி முருகன் கோவிலுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சரவணப்பொய்கை மற்றும் மலையடிவாரத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மொட்டை அடிக்கக்கூடிய பக்தர்களுக்கு இணைய வழியில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுவதால் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இணைய சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் மொட்டை அடிக்க டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் வழங்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய இணைய சேவை பாதிப்பின் காரணமாக இது போன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணைய சேவை சரி செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் மொட்டை அடித்துச் சென்றனர்.
- மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- கலவரம் எதிரொலியால், மணிப்பூரில் இணைய சேவை தடை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மணிப்பூர்:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் இணைய சேவை தடை ஜூன் 30-ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
- 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சென்னையில் நாளை மாலைக்குள் தொலைத்தொடர்பு சேவைகள் முழுமையாக சீரடைந்துவிடும் என்றும் வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேலும் கூறியதாவது:-
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தோனேசியாவில் டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க உள்ளார்.
- இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். பாலியின் மாகாணத் தலைநகரான டென்பசாரில் உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.
மேலும் இந்தோனேசியாவின் சுகாதாரம், கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.
- 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.
- சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் இனக்குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறது. சில பழங்குடிகள் மட்டுமே வெளியுலகத்தின் வசதிகளை பெற்று தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளனர்.
உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவின் அருகில் உள்ளதால் அமேசானில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சமீப காலங்களில் நிகழலாமல் இல்லை. அந்த வகையில் 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு உலக பணக்காரனாரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.


அப்போதிலிருந்து தொலைத்தொடர்பில் அந்த பழங்குடி மக்கள் மேம்பட்டிருந்தாலும் அந்த இனக்குழுவின் மூத்தவர்களால் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை. அதாவது இந்த பழகுடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக மாறிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இணையதளத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவர்களால் புறக்கணித்து விட முடியாததால் செய்வதறியாது அப்பழங்குடியின மூத்தவர்கள் விழிக்கின்றனர்.
- அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தினான்
- இரு தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டனர். கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ளவாகனங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.
தாக்கப்பட்ட சிறுவன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதய்ப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் இருக்க இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் என்ற இணைய சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் நேரடியாகவே ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் டேட்டா இந்தியாவிற்குள் இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது எனவும் இதனால் இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் ஸ்டார்லிங்ககின் விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயம் ஸ்டார்லிங்க் இந்த ஒப்பந்தத்தை முறையாக இந்திய தொலைத்தொடர்பு துறையிடம் தற்போது வரை சமர்ப்பிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, எலான் மஸ்க்கின் கோரிக்கையை இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் நேரடியாகவே ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்
- எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த வருடம் முதல் கலவரமான சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி- மெய்தேய் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
2023 மே மாதம் பெண் ஒருவர் வன்முறை கும்பலால் சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
240க்கும் அதிகமான மக்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். 60,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தனர். முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்கள் களவாடப்பட்டன. இடையில் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சமீபமாக மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்து.

பதுங்கியிருந்து தாக்கும் கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை திணறி வருகிறது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சின்னம் உள்ளதாக எக்ஸ் தள பயனர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதனைதொடர்ந்தகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்று தெரிவித்து உள்ளார்.
செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற நவீன சாதனங்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்து வருகிறது.

- 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
- வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி உள்நாட்டு விமானத்தில் இன்பிளைட் இன்டர்நெட் வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.
இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.

ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பயணிகள் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களில் உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம்.
பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

இந்த சாதனங்களை 'ஏர் இந்தியா வைஃபை' நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட்டுள்ளது.