search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investors"

    • ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
    • நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.

    ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.

    இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கத்திய நாடுகளில் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
    • 2024 மார்ச் மாதம், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாதாபி தெரிவித்தார்

    இந்தியர்களின் வாழ்க்கை முறையில், பொருளாதார சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குடும்ப நன்மை (family interest) மற்றும் தங்களின் வருங்கால சந்ததியினரின் நன்மையை (dynastic approach) உள்ளடக்கியது. எனவே, அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, வங்கி வைப்பு தொகை, ஆயுள் காப்பீடு போன்றவற்றிலேயே தங்கள் சேமிப்புகளை முதலீடாக செய்து வருகிறார்கள்.

    இதற்கு நேர்மாறாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக இந்தியர்களின் பங்கு சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது வருவாய் ஈட்டும் வழியாக பங்கு சந்தை வர்த்தகத்தில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

    தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இணையவழி பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்திய இளைஞர்களுக்கு பங்கு சந்தை ஆர்வத்தை மேலும் பெருக்கி வருகிறது.

    இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities Exchange Bureau of India) முதலீட்டாளர்களுக்கு வழிமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கை விற்கிறார்; வேறொருவர் அதை வாங்குகிறார். விற்பவருக்கு பணமும், வாங்குபவருக்கு பங்கும் அவரவர் கணக்குகளில் சேர்வதற்கான நாள் கணக்கு "செட்டில்மென்ட் காலம்" என அழைக்கப்படும்.

    வர்த்தகம் (Trading) நடைபெற்ற 2 நாட்கள் கழித்து செட்டில்மென்ட் நடப்பது T+2 என்றும் 1 நாளில் நடப்பது T+1 என்றும் அழைக்கப்படும்.

    முன்பு 2 நாட்கள் என இருந்த செட்டில்மென்ட் காலம், 1 நாள் என குறைக்கப்பட்ட பிறகு ரூ.700 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைத்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

    இந்நிலையில், செபி, செட்டில்மென்ட் நாட்களை மேலும் குறைக்க இருக்கிறது.

    இது குறித்து செபி தலைமை அதிகாரி மாதாபி புரி புக் (Madhabi Puri Buch) கூறியதாவது:

    முதலில் ஒரு-மணி நேர செட்டில்மென்ட், பிறகு சில நாட்களில் உடனடி செட்டில்மென்ட் என கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சந்தை தரகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதன்படி ஒரு முதலீட்டாளர் பங்கை விற்கும் அன்றே அவருக்கு பணம் கிடைக்கவும், வாங்குபவருக்கு பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் அதே நாள் செட்டில்மென்ட் (same-day settlement) முயற்சியை முதலில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த வருட மார்ச் மாதத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு இது செயல்பாட்டில் வரும்.

    இதனையடுத்து ஒரு-மணி நேர செட்டில்மென்ட் (one-hour settlement) அமல்படுத்தப்பட்டு, பிறகு படிப்படியாக உடனடி செட்டில்மென்ட் (instantaneous settlement) அமலுக்கு வரும். இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சிறு முதலீட்டாளர்களை காட்டிலும் பெரும் தொகை மற்றும் மிக பெரும் தொகை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும் திட்டம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
    • 200-க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

    நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி.

    தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

    இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

    இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

    தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.

    அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.

    மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,

    ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×