என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.
    • குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன.

    நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும்.

    ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும். அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும்.

    இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும்.

    பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும்.

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
    • 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டா :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று (சனிக்கிழமை) பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

    இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன.

    ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ தயாரித்த

    பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இ.ஓ.எஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
    • சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.

    இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: 


    இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


    தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை கடந்த 26-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
    • வெப்பநிலை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களும் பெறலாம்.

    சென்னை :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை கடந்த 26-ந் தேதி பகல் 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில், இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக 1,117 கிலோ எடைகொண்ட 'ஓசோன் சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாக அனுப்பப்பட்டது.

    அத்துடன், இந்தியாவை சேர்ந்த ஐ.என்.எஸ். 2-பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள் உடன் தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்கள், பூட்டான் நாட்டுக்கான செயற்கைகோள்கள் உள்பட 9 செயற்கைகோள்களும் 2 வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது.

    இதில் இந்தியாவுக்கான 'ஓசோன்சாட்-03' செயற்கைகோள் மூலம் கடலின் நிறம், கடல் மேல்பரப்பின் வெப்பநிலை, காற்று வீசும் திசை, மீன்வளம் தொடர்பான தகவல்கள், கடல் அலை குறித்த கூடுதல் தரவுத் தொகுப்புகளை பெற முடியும். இதுதவிர, வெப்பநிலை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களும் பெறலாம்.

    இந்தநிலையில், செயற்கைகோள் தரவுகளைப் பெறுவதற்காக தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தரை நிலையமான தேசிய தொலைநிலை உணர்தல் மையத்துக்கு (என்.ஆர்.எஸ்.சி.) ஓசோன்சாட்-03 செயற்கைகோள் எடுத்த முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தில், இமயமலை பகுதி, குஜராத் கட்ச் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதிகள் இடம் பெற்று உள்ளன.

    செயற்கைகோள்கள் கடல் வண்ண மானிட்டர் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மானிட்டர் சென்சார்களால் படம் பிடிக்கப்படுகின்றன. இது விஞ்ஞானிகளுக்கு பெருமிதமாக உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை தொடங்கி உள்ளனர். இந்த செயற்கைகோள் மூலம் புகைப்படங்களை பெறும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    • தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    விண்வெளித் துறையில் தொழில்நுட்பப் பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன் அடிப்படையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதன் மூலம் விண்வெளித்துறைக்கு தேவையான புதுமையான நடைமுறை திறன்களை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

    5 நாட்களில் 20 பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    • இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

    இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக வருகிறது.
    • கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பருக்கு தள்ளி போனது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இஸ்ரோ முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான் செயற்கைகோளை அனுப்ப உள்ளது.

    வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அதன் அடிப்படையில் இஸ்ரோவின் வீனஸ்மிஷன், 'சுக்ரயான்-1' திட்டம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பருக்கு தள்ளி போனது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் 2024-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    அதன் பிறகு திட்டத்தை தொடங்க மேலும் 8 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ பேராசிரியரும், விண்வெளி அறிவியல் திட்டத்தின் ஆலோசகருமான ஸ்ரீகுமார் கூறுகையில், வீனஸ்மிஷன் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை. இதன் காரணமாக இந்த திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகளும் வீனஸ் பயணங்களை 2031-ம் ஆண்டுக்கு திட்டமிட்டுள்ளன என்றார்.

    • சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.
    • ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட செயற்கை கோளை விண்ணில் செலுத்த முடியும்.

    சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடை குறைந்த செயற்கை கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடி வமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கி விடும்.

    அதன்படி சிறிய ரக 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தபட்டதால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து எஸ்.எஸ்.எல்.வி. வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட்டை இ.ஓ.எஸ்.-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால் வருகிற 10-ந் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதில் ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது என்றனர்.

    முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்த முறை கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
    • ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

    இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

    இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • கடந்த ஆகஸ்டில் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை ஏவியது.
    • இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது என கூறினர்.

    • இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
    • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் விண்ணில் ஏவியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

    இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி - டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ×