search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel Money"

    • பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுைர பெருங்குடி இந்திரா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது45), கட்டிட தொழிலாளி. இவரது கணவர் கருப்பசாமி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    முத்துமாரி அதிகாலை யில் வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் பிள்ளைகள் வீட்டை பூட்டி சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பிள்ளைகள் வீட்டை பூட்டி விட்டு சாவியை கோலப்பொடி டப்பாவில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்கு வந்த மகள் சாவியை தேடி பார்த்தார். அப்போது சாவி அங்கு இல்லை. கதவை தள்ளி பார்த்தபோது கதவு திறந்திருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 3 ஆயிரம் திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் சாவியை வெளியே வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்டு அதனை எடுத்து வீடு புகுந்து பணம்-நகையை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நாவினிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பிவி ஜான்.இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணம் ஆகி அமெரிக்கா வில் வசித்து வருகிறார். மகன் சென்னையில் வேலை பார்த்து அங்கு குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

    பீவிஜான் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். இதனை நோட்டுமிக்க மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரொக்கம் ரூபாய் 30 ஆயிரம், வீட்டில் இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த பொருட் களை திருடி சென்றனர்.

    இது குறித்து மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேக்கரி உரிமையாளரிடம் நகை-பணம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியை வளர்மதி (வயது51). இவர்க ளது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்ப கோவில் தெருவை சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் 17 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீடு கட்டுவதற்கு உதவி செய்யும்படி மகேந்தி ரனிடம் கேட்டார். அவர் பல தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்தார். மீண்டும் உதவி கேட்டபோது வளர்மதி 24 பவுன் நகை களை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேக்கரிக்கு சரக்கு வாங்க கொடுத்த பணத்திற்கு சரியாக கணக்கு தராமல் முத்து கணேஷ் இருந்துள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் எதனையும் அவர் செய்த தாகவும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து வளர்மதி அவரிடம் பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார். இந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்று விட்டார்.

    அதன் பின்பும் பலமுறை பணம்-நகையை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை. இதையடுத்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிக்கப்பட்டது.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது.

    கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதுபோன்று இங்கு வந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அதைக்கேட்ட அந்த வாலிபர்கள் கோபமாக அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் 2 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் பெரிய வாளுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உதயகுமாரை நோக்கி வந்தார்.

    அவர் உதய குமாரையும், சஞ்சய் பாபுவையும் வாளை திருப்பி வைத்து தாக்கினார். மேலும் இருவரையும் மிரட்டி உதயகுமார் வைத்தி ருந்த வைர மோதிரம், 3½ பவுன் தங்க செயின், வெள்ளி பிரைஸ்லெட், 2 மொபைல்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.

    இது குறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பினர்.
    • போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பணிக்கநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு புல் அறுக்கும் வேலைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 6¼ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்ட வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
    • திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45) விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே எலக்ட்ரிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமா இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ரமேஷ் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு தூங்கச் சென்றார்.

    இன்று அதிகாலை ரமேஷ் மனைவி எழுந்து சமையலறைக்கு சென்றார். அப்போது அருகில் இருந்த பீரோ திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இந்த திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்திருக்கும் வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் சிறிய அளவிலான எக்ஸ்சாட் விசிறிவழியாக எப்படி இந்த திருட்டை நடத்தியுள்ளனர். இந்த திருட்டில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா அல்லது சிறுவர்கள் தான் திருடி சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் சாலா மேடு எம்.ஜி.ஓ சண்முகா நகரை சேர்ந்தவர் பாத்திமா (45) இவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து சண்முக நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாத்திமா வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகை திருடு போயிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஒரே நாளில் 2 வீடுகளில் நூதன முறையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மதுரை அருகே விவசாயி வீட்டில் 45 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    மதுரை

    மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாண்டி கதவு உடை க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ப்பட்டன. இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் கோவில் பூசாரி வீட்டில் நகை -பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள பெத்தனசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

    2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பா றையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பாண்டி குடும்பத்துடன் சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 2 பவுன் 4 கிராம் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய பாண்டி கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது தொடர்பாக அவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளையர்களின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து போலீசார் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்

    • கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.
    • பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்.அவரது மனைவி பூங்கோதை (வயது 37). இவர் தனியார் மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அன்று தனியார் பஸ்சில் சின்னசேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.

    பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சின்னசேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து திருடியவர் யார் என்று போலீசார் தேடி வந்தனர்.

    அப்பொழுது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்பு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் வகிதா ராணி (வயது 57). இவரது தங்கைக்கு சொந்தமான வீடு நேரு நகர் 10-வது தெருவில் உள்ளது. இவரது தங்கை வெளியூர் சென்று விட்டதால் வகிதாராணி பராமரிப்பில் வீடு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வகிதாராணி அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து கேணிக்கரை போலீசில் வகிதாராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆண்டிப்பட்டி அருகே வீட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம்ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 54). இவருடைய தாய் முத்தம்மாள், தந்தை வடிவேலு ஆகியோர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அவர்களது வீட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து வேல்ராஜ் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருகிற 12-ந்தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் கார்த்திகை ஜோதி. பட்டதாரி. இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந் நிலையில் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வடிவேலு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கார்த்திகை ஜோதி மட்டும் இருந்தார். பின்னர் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கார்த்திகை ஜோதியை காணவில்லை.

    மேலும் வீட்டில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் ஆகியவையும் மாயமாகி இருந்தன. அக்கம்பக்கம் உள்ளிட்ட உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை குமந்தாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வம், அவரது மனைவி சிவகாமி, அவர்களது மகன் சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து கடத்தி உள்ளதாக தெரிகிறது என கூறியிருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுப்பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×