என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewelery snatched"
- ஆரோக்கியமேரி பூச்செடிகளை நடவு செய்தார்.
- வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.
கோவை,
கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 58). இவர் அவரது வீட்டின் முன்பு பூச்செடிகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி விவரங்களைக் கேட்டார்.
இதையடுத்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொ ண்டிருந்த அந்த வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். உடனே ஆரோக்கியமேரியும் வீட்டுக்கு ள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.
இதையடுத்து அந்த வாலிபர் தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னர், ஆரோக்கியமேரி வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொ டர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பீளமேடு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்து சென்ற வாலிபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்று ள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- மதுரை அருகே பேரையூரில் ராணுவ வீரர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- வீடு புகுந்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரை சேர்ந்தவர் ராஜா, ராணுவ வீரர். இவரது மனைவி நந்தினி(வயது30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு காற்றுக்காக நந்தினி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் நைசாக புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த நகையை பறித்தான்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த நந்தினி, நகையை இறுகப்பிடித்துக்கொண்டார். ஆனாலும் திருடன் கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து நந்தினி பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பேரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகை, பணம் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார்.
- தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார்.
கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசித்தனர். அதன்படி செங்கல்பட்டு மேட்டுத் ெதருவைச் சேர்ந்த ஹேமாவதி (வயது 81) தனது உறவினர்களுடன் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்டார். அங்கு கூட்ட நெரிசலில் ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஹேமாவதியின் கழுத்தில் இருந்த செயினை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர். அப்போது அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் நின்று கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த 6 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டி ஹேமாவதியிடம் வழங்கினர். விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர் தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார். இது போல ஒரு முகவரி இருக்குமா என்று சந்தேகமடைந்த போலீசார் பூமிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
- வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர்.
கோவை,
கோவை சரவணம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 72).
இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமியிடம் முகவரி கேட்பது போல் நடித்தனர்.
லட்சுமி அசந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 2½ தங்க நகையை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து சென்றனர். இதுகுறித்து லட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
- சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். விவசாயி. இவரது மனைவி எஸ்தர் (வயது45). இவர் டோனாவூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
ஹெல்மெட் அணிந்த நபர்
சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். டெய்சி மொபட்டை ஓட்டினார். எஸ்தர் பின்னால் அமர்ந்திருந்தார்.
களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் பிளவக்கல் இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் எஸ்தரின் கைப்பையை பிடித்து இழுத்தார். ஆனால் எஸ்தர் கைப்பையை கெட்டியாக பிடித்து கொண்டார்.
நகை பறிப்பு
இதனால் கைப்பையை பறிக்க முடியாத மர்ம நபர் எஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறிப்பதற்காக பிடித்து இழுத்தார். எஸ்தர் சுதாரித்துக் கொண்டு செயினை வலுவாக பிடித்து கொண்டார். இதில் செயின் ஒரு பகுதியும், கொக்கியும் மர்ம நபர் கையில் சிக்கியது. அதனுடன் அவர் தப்பி சென்று விட்டார்.
பறிக்கப்பட்ட செயினின் எடை 1 பவுன் ஆகும். இதுபற்றி எஸ்தர் களக்காடு போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- 2 வட மாநில வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர்.
- இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை சூலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு பூரணம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவும் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். பின்னர் காதலர்கள்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இளம்பெண்ணுக்கு மீண்டும் முன்னாள் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கணவரை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
ஆத்திகுளம் ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (வயது 58).
நேற்று மதியம் இவர் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். நரிமேடு பள்ளி அருகே பானுமதி நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் கும்பல் வழிமறித்து செயின் பறிப்பில் ஈடுபட்டது.
மூதாட்டி நகைகளை காப்பாற்றுவதற்காக போராடினார். ஆனாலும் பலனில்லை. எனினும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது.
இதுகுறித்து பானுமதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் பதிவெண் மற்றும் குற்றவாளிகள் 2 பேர் பற்றிய அடையாளம் தெரியவில்லை. எனவே தல்லாகுளம் போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வ ஹேமாவதி காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார்.
- காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் காரைக்காலில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வ ஹேமாவதி. இவர் காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர். இதுகுறித்து ஹேமாவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 28) மற்றும் மன்னார்குடி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (27) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் ஹேமாவதியிடம் செயிைன பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்