என் மலர்
நீங்கள் தேடியது "jewelry missing"
- நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
- கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்:
சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.
அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது.
- மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (55), முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது 39-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் மனைவி பரமேஸ்வரி 52 மற்றும் குடும்பத்துடன் கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றார். மாலையில் கோவையில் இருந்து அரசு பஸ்சில் சேலத்திற்கு வந்தனர். அப்போது 3 பைகளை எடுத்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது. அந்த பையில் துணியுடன் 20 பவுன் நகைகளும் இருந்தது. இதையடுத்து மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
அவர்கள் பஸ் டிரைவர் பூபதியை தொடர்பு கொண்டு பை குறித்து விசாரித்தனர். அவர் பஸ்சை சோதனை செய்து விட்டு பை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த பை எங்கு வைத்து மாயமானது என்பது மர்மமாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்
வேலூர்:
திருப்பத்தூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று அலமேலு மங்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
நேற்று இரவு நிகழ்ச்சி முடித்துக்கொண்டு திருப்பத்தூர் செல்வதற்காக அலமேலு மங்காபுரத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனர்.
அந்த ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் சென்றார். கிரீன் சர்க்கிளில் உள்ள ஓட்டல் அருகே 3 பெண்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றனர்.
பின்னர் பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஆட்டோவுக்கு கட்டணம் தருவதற்காக தனது பையை திறந்து பார்த்தார். அப்போது பையில் இருந்த 1½ பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர்.
வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
- தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை இ.வி.கே தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகி றார். இவர் தனது மனைவி, 2 மகன், 2 மருமகள் மற்றும் ஒரு மகளுடன் கூட்டு குடும்ப மாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சீனிவாசன், அம்மாபேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், வீட்டில் இருந்த தங்க நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் வேலையாட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டிலிருந்த 132 தங்க நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.