என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kanimozhi mp"
- மெரினா கடற்கரையில் 15 லட்சம் மக்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து.
- கூட்ட நெரிசல், வெப்பம் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ராணுவ விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அதைபோல் கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது.
கடுமையான வெயில் மற்றும் கூட்டம் நெரிசல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. குற்றிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
- இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது.
- இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது.
சென்னையில் இன்று நாடார் சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஐ.ஏ.அஸ் அதிகாரி படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாக தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து உங்கள் பெயர்களை பாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் பெயர்களை பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். உங்கள் பெயருக்கு பின்னால் என்ன சாதி என்று வெளிப்படையாக உள்ளது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
- வந்திதா பாண்டே IPS மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் இருந்து நானும், எனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக X இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே IPSம் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
- அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப்
ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இமானே கெலிஃப்புக்கு திமுக எம்.பி., கனிமொழி ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "எப்போதுமே தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.
- ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.
அதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று விளக்கமளித்தார்.
அதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.
- புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
- மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.
மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 6, 2024
மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில்…
- நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.
இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.
நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.
- பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
- பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.
இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
- திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
- வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.
திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை.
ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.
இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.
விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.
தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
- சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
- காடல்குடி, சின்னூர் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை கனிமொழி எம்.பி. வழங்கி சிறப்புரையாற்றினார்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட காடல்குடி, சின்னூர், என்.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம் மற்றும் மாதலாபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி னார். அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்க ளை பெற்றார்.
மேலும், 13 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் திட்டம் மூலம் 50 பயனாளி களுக்கு ரூ.9.30 லட்சம் குழு கடன், 15 பேருக்கு வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் வேளாண் இடு பொருட்கள், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசுகை யில், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை களை விரைவில் சரி செய்து தரப்படும். சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களது மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராம கிருஷ்ணன், புதூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னகண்ணு, புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், மத்திய ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்தி குளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், புதூர் தி.மு.க. நகர செயலாளர் மருதுபாண்டி, முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், பொதுக்குழு உறுப்பி னர் ராஜாகண்ணு, வெற்றி வேலன், கந்தசாமி உரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி விஜய், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைத்தள அணி ஒருங்கி ணைப்பாளர் கரண் குமார், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தர வின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்க மாகும். மீனவர்களின் கோரி க்கைகளை மீன வர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார்.
ெதாடாந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பய னடைய முடியும் என்றார்.
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை த்தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வள நலவாரிய மாநில உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜய ராகவன், மீன்பிடித்து றைமுக மேம்பாட்டு செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் தயாநிதி, ஆய்வாளர்கள் ஜெகன், சுப்பிரமணியன், ஷிபாணி, கவுன்சிலர்கள் எடின்டா, மரியகீதா, சரவணக்குமார், நாகேஸ்வரி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, ரெக்ஸின், ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராம கிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சண்முகவடிவு, வட்டசெயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரசிங், டோலி, கன்னிமரியாள், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்