என் மலர்
நீங்கள் தேடியது "Kanmai"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயி கள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளி களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரி செய்தல், ஊரணி தூர்வாரு தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்த னர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலமாக பல்வேறு திட்டங் களை அறிவித்து அதன் மூலம் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கை களையும் கேட்டறியும் வகை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு விவசாயி களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.
மேலும் வறட்சி நிவாரண மாக நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்திட வும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற தென்னை மற்றும் கரும்பு விவசாயிக ளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 457-ஐ மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் கோபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, கூட்டு றவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
- விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.
இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வாழைக்குளம் கண்மாய் மறுகால் பாய்கிறது.
- கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மலையடி வாரத்தில் உள்ள கண் மாய்கள், நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின. வாழை குளம், ரெங்கப்ப நாயக்கன் குளம், வேப்பங்குளம் ஆகிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.
இதனால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து வாழைக்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும்அந்த நீரானது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய்க்கு சென்று சேருவதால் மாவட்டத்தின் பெரிய கண்மாய்களில் ஒன்றான பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மதுரையில் இன்று கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
- மீன்பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
மதுரை
மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிசேசன் (வயது 14). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (வயது 8). 3ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த 2 பேரும் இன்று மதியம் சக்கிமங்கலம் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.
கண்மாயில் ஹேமன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிசேசன், ஹோமனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது.
2 பேரும் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கியதால் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் கண்மாய் மதகு நதியில் செங்கல் சூளை தொழிலாளர்கள், வேட்டி-சேலையை போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.
- இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.
ராமநாதபுரம்
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியதால் அதன் உபரி நீருடன் மழை நீரும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் வழியாக கார்குடியில் உள்ள பெரியகண்மாய் தலைமதகு வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் வருகிறது. அதிகளவு நீர்வரத்தால் பெரிய கண்மாய் நிரம்பி காவனுார், புல்லங்குடி வாய்க்கால்களுக்கு தலைமதகு பகுதியில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.
ராமநாதபுரம் அருகே கார்குடியில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் வைகை ஆற்று நீரில் துள்ளி குதித்த மீன்களை அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள், பொதுமக்கள் வலை போட்டும், வேட்டி, சேலையை பயன்படுத்தியும் போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.
- கீழக்கரை கண்மாயில் மணல் எடுத்துச்செல்ல 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
- அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள (நீர் நிலை) கண்மாய்களிலிருந்து விவசாயப் பணிக்கு வண்டல் களிமண், கிராவல் மண் எடுத்துச் செல்வதை எளிமையாக்கும் விதமாக வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கனிம வளத்துறை உதவி இயக்குநர் விஜயகுமார் முகாமை பார்வையிட்டார்.
கீழக்கரை தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 8 கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள 24 சிறிய கண்மாய்களில் விவசாயப் பணிக்கு மணல் எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
இது குறித்து தாசில்தார் சரவணன் கூறும்போது, இங்கு பெறப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் ராமநாதபுரம் கனிம வளத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நிலத்தை அளவீடு செய்து அதற்கேற்ப மணல் அள்ள அனுமதி வழங்கப்படும். முறையாக மணல் தோண்டப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.
ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வந்தது. கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் இதில் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விடுபட்டுப்போனது. ஆனால் தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சில தினங்களாக பெய்த மழையினால் வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு நீர்வரத் தொடங்கியது. இந்த தாலுகாவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 51 கண்மாய் உள்பட 116 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 14 கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது.
மருங்கூர், புதுக்குளம், பிரண்டங்குளம், ஆதியூர், புளியங்குளம், கொண்டனேரி, கடம்பங்குளம், பெரியாதிகுளம், கருங்குளம், மேல இலுப்பைகுளம், ஆப்பனேரி, முதுகுடி, வாகைக்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற கண்மாய்களுக்கும் கணிசமான நீர்வரத்து இருக்கிறது.
ராஜபாளையம் நகரின் குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த் தேக்கத்துக்கு அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 22 அடியாகும். இதில் 18 அடி வரை தண்ணீர் சேமிக்கலாம். தற்போது 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபாளையம் பகுதியை வளம் கொழிக்கச்செய்யும் சாஸ்தா கோவில் அணைஏற்கனவே நிரம்பி விட்டது. அதன் உபரி நீர் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருகிறது. அந்த அணையை உடனடியாக பாசனத்துக்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் கண்மாய்களை தொடர்ந்து கண்காணிக்க வருவாய்த்துறையினருக்கு தாசில்தார் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.
இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. பிளவக்கல் அணை நிரம்பிய நிலையில் வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொன்டு இருக்கிறது. இதில் 400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அந்த பகுதிகளில் உள்ள ஓடை வழியாக கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்த தாலுகாவில் மொத்தம் 153 கண்மாய்கள் உள்ளன. இதில் வாழைக்குளம் கண்மாய் ஏற்கனவே நிரம்பி விட்டது. பெரிய குளம் கண்மாய், அழுத நீராற்று குளம், மறவன்குளம், கமலாகுளம், வராகசமுத்திரம் கண்மாய், மொட்டவத்தான் கண்மாய் உள்பட 66 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. ஆண்டாள் நீராடியதாக கூறப்படும் திருமுக்குளத்துக்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் ஆணையாளர் வெள்ளைச்சாமி கூறுகையில், நீர்வரத்து பகுதிகளையும் கண்மாய்களையும் மராமத்து செய்திருந்ததால் தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. கண்மாய்களை வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளன. அலுவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும். சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன இவ்வாறு கூறினார்.
தொடர்மழையால் கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.