என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthika Deepam Festival"

    • கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பட்டாபிஷேகம்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(5-ந் தேதி) மாலை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சந்தனம், பால், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் சுவாமி- அம்பாள் கோவில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுப்பிரமணியசாமிக்கு பட்டா பிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (6-ந் தேதி) காலை 11 மணி அளவில் சிறிய வைர தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும்.இந்த தீபத்தை பார்த்த பின்பு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள்.

    இதையடுத்து இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை எரிக்கப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி அங்கு சுவாமி தரிசனம் செய்து எரிந்த சொக்கப்பனை சாம்பல்களை தங்களது வயல்களில் தூவுவார்கள். இதன் மூலம் பயிர்கள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை.

    கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு கோவில் சார்பில் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்தப் பகுதி மோட்ச தீபம் ஏற்றும் பகுதி எனக் கூறி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு மலைக்குச் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தடையை மீறி யாரும் செல்லாத வகையில் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவான நாளை மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதேபோல மலையைச் சுற்றிலும் மலை மேல் உள்ள நெல்லி தோப்பு, காசி விசுவநாதர் கோவில் பகுதி, மலை உச்சியில் உள்ள தீப தூணில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
    • 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
    • பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

    தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு, நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தனியார், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 156 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
    • மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    ×