search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai Deepa Festival"

    • தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.

    காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.

    தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


    தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    வேங்கிக்கால்:

    நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.

    வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டை வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் உள்ள வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி காலையில் விக்னேஸ்வரர் பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் பால விநாயகர், வாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மறுநாள் (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் மகா தீபத்திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
    • ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

    அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. 

    • முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
    • 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

     

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

      26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர். 

    • மதுரை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திரு விழா நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறத்தில் மலை மீதுள்ள தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×