என் மலர்
நீங்கள் தேடியது "Killed in accident"
- லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
- இதில் பலத்த அடிபட்ட 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூமணி (வயது 45). இவர் தனது தாய் சரஸ்வதியை (வயது 65) அழைத்துக்கொண்டு காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு மொபட்டில் வந்தனர்.
பின்னர் திருமணம் முடிந்து மதியம் வீட்டுக்கு செல்வதற்காக காஞ்சிக்கோயில்-திங்களூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பூமணி ஓட்டி வர அவரது தாய் சரஸ்வதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
இவர்கள் காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பூசம்பதி அருகே வரும்போது இவர்களுக்கு எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறினர். பலத்த அடிபட்ட பூமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடல்நிலை மோசமாகி விட்டதாக கூறி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பூமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் லாரியை ஓட்டி வந்த பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார்.
- ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் பஞ்சாப் சாலையில் வசித்தவர் அரவிந்த். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது அனல் மின் நிலைய மனித வளத்துறை பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார். நேற்று இரவு 10-வது வட்டம் மெயின் ரோட்டில் இருந்து மெயின் பஜாருக்கு தனது மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது தானாகவே ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரவிந்தை என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக கூறினர். இறந்து போன அரவிந்துக்கு மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகபாண்டி அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
கோவை:
கோவை அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரவீன்குமார் என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - ஆனைகட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியக்கடை வீதி ரோட்டை 50 வயது ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேத்தியாத்தோப்பு அருகே மகள் வீட்டுக்கு வந்த தந்தை விபத்தில் பலியானார்.
- சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலிங்கம். விவசாயி.இவரது மகள் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ளார். இவரது வீட்டுக்கு முத்துலிங்கம் வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் இறந்தார். இது பற்றி சேத்தியாத்ேதாப்பு போலீசார் விசாரிக்கிறார்கள்.
- லாரி டயரில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
ஜமுனாமரத்தூர் தாலுகா மேல்அத்திப்பட்டு கிராமம் வெங்கடேசன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று காலை பைக்கில் அவரது நண்பர் நெல்லிமரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (21) என்பவருடன் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகில் செல்லும் போது எதிரில் சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் மற்றும் ஏழுமலை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏழுமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் காயம் அடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.