என் மலர்
நீங்கள் தேடியது "kills"
- விபத்தில் தாய் மகள் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த செல்லம்பகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(34). இவர் மொடக்குறிச்சி பூந்துறை ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு 4 வயதில் சுகுதி என்ற மகள் உள்ளார். நேற்று கோமதி தனது மகளுடன் நரிகாட்டுவலசு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் இரவு தாய் வீட்டில் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வேலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் கருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்திச் செல்வதற்காக கோமதி முயன்றார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் ஏறி அவர்கள் 2 பேரு ம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து மொட க்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோமதி, சுகுதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
இலங்கையில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மிஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலிக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். #srilankablast #narayanasamy
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே சேவல் விடுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோபால் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப்போட்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம விலங்குகள் 6 ஆடுகளின் கழுத்தில் கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு தப்பி சென்று விட்டன.
இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கோபால் , தனது 6 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் திருவோணம் போலீசிலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆடுகளை கொன்று ரத்தத்தை குடித்தது சிறுத்தையா? அல்லது நரிகளா? என்று தெரிய வில்லை.
ஏற்கனவே திருவோணம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.
அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.
இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனங்கள் மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #suicideattack #Kabulsuicideattack
சென்னை:
சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி-பத்மா தம்பதிகளின் மகள் ஸ்ரீமதி. என்ஜினீயரிங் படித்திருந்த இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முத்து சுப்பிரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டேரியில் இருந்து மணலிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் லாரி உரிமையாளர் மோகன், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருமான முத்து சுப்பிரமணி தந்தை ஜெய சங்கர் ஆகியோர் ஸ்ரீமதி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பதிலளித்த ஐ.சி.ஐ. சி.ஐ. லாம்பார்ட், இன்சூரன்ஸ் நிறுவனம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது. லாரி சாலை ஓரமாக தான் நிறுத்தப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் கூறும்போது, “முத்து சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி லாரி மீது மோதி இருக்கிறார். அவர் கவனமாக வாகனத்தை ஓட்டி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம். அதே போல் லாரியை ஒழுங்காக சாலையில் நிறுத்தி இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், லாரி டிரைவர் இருவர் மீதும் தவறு உள்ளது.
எனவே லாரி உரிமையாளர் மோகன், ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஜெயசங்கர், மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு என ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையை ஸ்ரீமதி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
டெல்லி செக்கான் விகர்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் ரமேஷ் அவஸ்தி. முன்னாள் விமானப்படை அதிகாரி. இவரது மகன் அன்சூல் அஸ்வத். (வயது 20). உத்தரபிரதேசம் பைரேலி இசாட் நகரை சேர்ந்தவர். எனாத்சி வாலியா (20). காதல் ஜோடியான இவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்தனர்.
புதுவையில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று முன்தினம் புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன முதலியார் சாவடி கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் தங்களது உடமைகளை கடற்கரையில் வைத்து விட்டு இருவரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது.
இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து இதுபற்றி கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், பலன் கிட்டவில்லை.
இந்த நிலையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு பலியான இருவர் உடலும் நேற்று இரவு முத்தியால் பேட்டை சோலை நகர் கடற்கரையில் ஒதுங்கியது.
போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மூழ்கி பலியான காதல் ஜோடியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். #tamilnews
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.
கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #dengue #swineflu

இலங்கையின் வல்லாளவிட்டா, புலத்சின்ஹலா, அகலவட்டா, மதுகாமா, படுராலியா, இன்கிரியா, படுல்லா, கலுட்டாரா, கல்லே, கெகல்லே ஆகிய மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது.
இதைதொடர்ந்து, கடந்த இருநாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கல்லே மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கின்கங்கா ஆற்றில் கரை புரண்டு பாய்கிறது. இதனால், நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதால் கின்கங்கா, காலு, அத்தனகாலு ஓயா ஆகிய ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கலுட்டரா மாவட்டத்தில் மூன்றாம் எண் அபாய எச்சரிக்கையும், ஹல்டுமுல்லா பகுதியில் இரண்டாம் எண் எச்சரிக்கையும், படுல்லா, பஸ்ஸாரா பகுதிகளில் ஒன்றாம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழைசார்ந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #eightdeadinSriLanka #SriLankarains
விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு 30 அடி ஆழத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பழுதாகி இருந்தது.
அதனை சரி செய்ய ராஜாராமன் எண்ணினார். அதன்படி இன்று மதியம் ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர் (35) என்பவருடன் சேர்ந்து ராஜாராமன் தனது நிலத்துக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் மோட்டாரை சரி செய்ய முயன்றனர். பழைய கிணறு என்பதால் கிணற்றில் விஷவாயு பரவி இருந்தது. அப்போது அவர்களை விஷவாயு தாக்கியது.
இதனால் அவர்கள் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் ளேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தனர். பின்னர் அந்த தண்ணீரை மேலே இருந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ராஜாராமன், பன்னீர் ஆகியோர் மீது ஊற்றினர்.
ஆனால், அவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கினர். 2 பேரையும் மீட்டு கிணற்றை விட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜாராமன், பன்னீர் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் 2 பேரின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
