search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaivizha"

    • முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடியழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • தொடர்ந்து புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரம் யாதவர் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடி யழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும். செவ்வாய் காலையில் அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல். மாலை 4 மணிக்கு அம்மன் வீதி உலா வருதல், இரவு 11 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு படைப்பு தீபாராதனையும், புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது.

    திசையன்விளை:

    பிரசித்தி பெற்ற திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் கலர் கோலப்போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று அன்னபூஜையுடன் விழா தொடங்கியது. காலை 11 மணிக்கு மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க குதிரைகள் முன் செல்லமுத்து குடைபவனி வர மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு கரகாட்டம், மகுட ஆட்டம், வில்லிசை, பரிசளிப்பு விழா, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் பேஷன் ஷோ, முன்னாள் அரசு வக்கில் பழனி சங்கர் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை திறன் போட்டி, நள்ளிரவு சுவாமிக்கு விசேச அலங்கார பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சுவாமி முட்டை விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    விழாவில் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ். குமார், கே.ஆர்.பி. டிரேடர்ஸ் என்ஜினீயர் கனகராஜ், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி, டி.கே. ராஜா அண்ணாமலை, தங்கையா சுவிட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம். குமார், ஆகாஷ், முன்னாள் அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கர், ரோட்டரி அட்வகேட் கில்டா பழனிசங்கர், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், தொழில் அதிபர் சரவணக்குமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி தலைவர் கமலா சுயம்புராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.

    • ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று மாலை தொடங்குகிறது.
    • விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது.

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, நள்ளிரவு 2 மணிக்கு சாஸ்தா பிறப்பு நடக்கிறது.

    தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு பெருமாளுக்கு பால் வைத்தல், 6 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பின்னர் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.

    • கொடை விழாவில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளை கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் அலங்கார பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் செய்து இருந்தார்.

    • இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
    • கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழா இன்று இரவு நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    தீர்த்தம் எடுத்து வருதல்

    நேற்று மாலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றி குடி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் கொடை விழா, மதியம் 11 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணி நதியில் நீராடி வருதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அதை தொடர்ந்து மதிய கொடை விழா நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு சுவாமி மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடைவிழா

    இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீபாரா தனையுடன் சாமகொடை விழா நடைபெறு கிறது. கொடைவிழாவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவும் அன்னதானம் வழங்கப்படு கிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியில் திரிகடுகை முன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.

    நகை மாயம்

    கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வானியர் மேட்டு தெருவை சேர்ந்த செண்டு(வயது 57) என்ற மூதாட்டி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த 65 கிராம் தங்கநகையை காணவில்லை. இதேபோல் கோவிலுக்கு வந்திருந்த முத்துலெட்சுமி என்பவரிடம் 40 கிராம் நகையும், சந்தானலெட்சுமி என்பவரிடம் 32 கிராம் நகையும் மாயமானது. கூட்ட ெநரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
    • 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது.

    உடன்குடி:

    பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதன் முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு மங்கையர்கரசி மாதர் மன்றத்தின் சார்பில் திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு கொலுமேளம், நாதஸ்வர இன்னிசை, இரவு 8 மணிக்கு அம்மன் திருப்பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு கற்பூர தீபாராதனை பூஜைகள் நடந்தது. 2-ம் நாள்காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், காலை 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்தி புஷ்ப அலங்காரத்துடன் விசேஷ கற்பூர தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிவனுக்கு பொங்கலிட்டு அம்மனுக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்துடன், கற்பூர தீபாராதனை, அம்மனுக்கு படைக்கஞ்சி வார்த்தல், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பட்டு மற்றும் நேர்ச்சை பொருட்களை கொண்டு வருதல் தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்கார காட்சி தீபாராதனையும் நடந்தது.

    இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொருளாளர் ராமநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ராஜாபிரபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் நெசவாளர்அணி செந்தில் அதிபன், வர்த்தகர்அணி மாடசாமி, மாணவரணி செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது. பின்பு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் அப்பு (என்ற) நல்லகுட்டி, பொருளாளர் கண்ணன், செயலாளர் தினகரன், இந்து வாலிபர் சங்கத்தினர், மங்கையர்க்கரசி மாதர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனபேச்சியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனபேச்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றதாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கொடை விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    அதனைதொடர்ந்து சிவபுரம் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் வனபேச்சியம்மன், சாஸ்தா, சங்கிலி பூதத்தார், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விஷேச அலங்கார தீபாராதனைகள் இடம்பெற்றது.

    வனபேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்தனர். அம்மனுக்கு பொங்கலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். நள்ளிரவில் அம்மனுக்கு ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது.

    அதன் பின் படைப்பு தீபாராதனை நடந்தது. கொம்பு தப்பு, மேளம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
    • நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளகாட்டில் உள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா இன்று நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நாதஸ்வரம் நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

    9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும், கோபுரகலசத்திற்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்பம் ஏற்றுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல்,மாவிளக்கு எடுத்து வருதல்,புஷ்பஅலங்கார பூஜை , வாணவேடிக்கை யுடன் சாம பூஜை நடைபெறுகிறது. பின்னர் நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரகுபதி என்ற சின்னராஜ் நாயக்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கொடை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • கும்பம் வீதி உலாவும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும், திங்கட்கிழமை இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

    செவ்வாய்கிழமையன்று கொடை விழாவை முன்னிட்டு, கோவில் அதிகாலை நடைதிறக்கப் பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையாகியது. தொடர்ந்து கும்பம் வீதி உலாவும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் லெட்சுமணன் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • 8 ம் நாள் கொடை விழாவில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 28-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. ஜூலை 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடைவிழா அன்று பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    8-ம் நாள் நிகழ்ச்சி

    நேற்று செவ்வாய் கிழமை 8 ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும் அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல்12 மணி அளவில் கண்ணதாசனும் ஆன்மீகமும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    மதியம் 1மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், குணசேகரன், ராகவன், ஜெயசங்கர், பாலகிருஷ்ணன், கேசவ மூர்த்தி, ஜெய பிரகாஷ், ரவி, ஜெயமுருகன், பெரியசாமி, ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
    • தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா நடைபெறுவது வழக்கம்.

    கோவிலில் இந்த ஆண்டு ஆனி பெருங்கொடை விழா கடந்த 17ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் சுவாமிக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது.

    பால்குடம் ஊர்வலம்

    விழாவின் சிகர நாளான நேற்று ஆனி பெருங்கொடை விழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    இரவில் சுவாமிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    விழாவையொட்டி வாணவேடிக்கை, வில்லிசை, கரகாட்டம், கொம்புதப்பு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் வடக்கு விஜயநாராயணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், கோவில் ஆய்வாளர் கார்த்திகேஷ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரி, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவகுமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×