என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முள்ளக்காடு உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
- விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
- நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முள்ளகாட்டில் உள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா இன்று நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நாதஸ்வரம் நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும், கோபுரகலசத்திற்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்பம் ஏற்றுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல்,மாவிளக்கு எடுத்து வருதல்,புஷ்பஅலங்கார பூஜை , வாணவேடிக்கை யுடன் சாம பூஜை நடைபெறுகிறது. பின்னர் நாளை காலை 10 மணிக்கு பொங்கலிடுதல் மஞ்சள் நீராடுதலுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரகுபதி என்ற சின்னராஜ் நாயக்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.