என் மலர்
நீங்கள் தேடியது "kolkata knight riders"
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போல் தோல்வியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் போராடி பணிந்தது.
கொல்கத்தா அணியின் முதல் ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரின் தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. குயின்டான் டி காக், வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஒற்றை படையை தாண்டவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ராஜஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், ஐதராபாத்துக்கு எதிராக 286 ரன்களை வாரி வழங்கி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை சிதறவிட்டு வள்ளலாக மாறினார். இமாலய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியினர் 246 ரன்கள் வரை நெருங்கினர். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார். இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் கேப்டன் பணியை கவனிப்பார்.
மொத்தத்தில் இரு அணிகளும் தங்களது பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்து முதல் வெற்றிக்கு தீவிரம் காட்டும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன. மற்றொரு போட்டியில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிராவோ, "கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.
இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.
- மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
- கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரு அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 6-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்று ராமநவமி என் தால் தங்களால் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் அளித்துவிட்டனர்.
இதனால் கொல்கத்தா-லக்னோ மோதும் போட்டிக்கான தேதி மாற்றப்படுகிறது. கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த சீசனில் கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சாம் கர்ரன்
- இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
கொச்சி:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. முன்னணி வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் உள்ளார். இவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.
- தனது தனிப்பட்ட காரணங்களுக்காக லிட்டன் தாஸ் இந்த சீசனிலிருந்து விலகினார்.
- லிட்டன் தாஸ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை.
ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு மாற்று வீரரை கேகேஆர் அணி அறிவித்துள்ளது.
ரூ.50 லட்சத்திற்கு வங்கதேச விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை அணியில் எடுத்தது கேகேஆர் அணி. தனது தேசிய அணிக்கான பங்களிப்பை செய்துவிட்டு பாதி சீசனில் வந்து கேகேஆர் அணியுடன் இணைந்த லிட்டன் தாஸ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் ஆடும் லெவனில் இடம்கிடைக்காத லிட்டன் தாஸ், தனது குடும்பத்தில் மருத்துவ அவசர காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகினார்.
இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஜான்சன் சார்லஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 41 போட்டிகளில் ஆடி 971 ரன்கள் அடித்துள்ளார்.
- சுமார் 6 வருட காலம் ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் பங்கேற்கவில்லை
- உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட இது ஒரு வாய்ப்பு என்றார் ஸ்டார்க்
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிக தொகையாக ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2018 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார் ஸ்டார்க்.
இடையில் பல வருடங்கள் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், பிற போட்டி தொடர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது என இருந்த ஸ்டார்க், திடீரென மனதை மாற்றி கொண்டு தற்போதைய ஏலத்தில் பங்கேற்க சம்மதித்தார்.
சுமார் 6 வருட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு என் அதிக பங்களிப்பை உறுதி செய்ய நினைத்தேன். இவ்வருட கடைசியும் அடுத்த வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு சர்வதேச அரங்கில் ஒரு அமைதியான காலகட்டம். என் திறனை மேம்படுத்தி கொள்ள தலைசிறந்த உலக தரம் பெற்ற முன்னணி வீரர்களுடன் விளையாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க சம்மதித்தேன்" என தெரிவித்தார்.
ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியின் சார்பில் பங்கேற்ற அந்த அணியின் ஆலோசகர், முன்னாள் இந்திய கிரிக்கெட் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட ஸ்டார்க்கின் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக, "புது பந்தை வீசுவதிலும், கடைசி ஓவர்களில் பந்து வீசுவதிலும், தாக்குதலை முன்னெடுத்து செல்வதிலும் ஸ்டார்க் மிக சிறந்த நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை" என தெரிவித்தார்.
- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன் இலக்கை பெங்களூரு அணி எட்டுவதற்கு விராட் கோலியின் அசத்தலான அரைசதம் அடித்தளமாக அமைந்தது என்றால், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரின் அதிரடி வெற்றிக்கு வித்திட்டது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பேட்டிங்கில் பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் , ரிங்கு சிங், பந்து வீச்சில் சுனில் நரின், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் 2-வது வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
- டெல்லி தரப்பில் பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.
- கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது.
- கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழாவே சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த போட்டியில் டெல்லியிடம் 20 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கொல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும். சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் கோலாகலத்துக்காக காத்திருக்கிறார்கள்.
உள்ளூர் ரசிகர்கள் ஆதரவால் சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன.
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன.
- இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.