என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollam"

    • தாயும், மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
    • தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவரது மனைவி தாரா கிருஷ்ணன் (வயது36). இவர்களது மகள்கள் அனாமிகா(6), ஆத்மிகா(1 ).

    கிரிஷ்குமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தாரா தனது 2 மகள்களுடன் குலசேகரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.

    இந்தநிலையில் நேற்று மாலை தாராவின் தந்தை கோபாலகிருஷ்ணன் டீ குடிப்பதற்காக டீக்கடைக்கு சென்றிருந்தார். தாரா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களது வீட்டின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை உடைத்து தாராவின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு தாரா மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைத்தனர். பின்பு வீட்டுக்குள் உயிருக்கு போராடியபடி கிடந்த தாரா மற்றும் அவரது மகள்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் தாரா தனது 2 குழந்தைகளின் உடலில் தீவைத்துவிட்டு தானும் தீவைத்துக்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரா மற்றும் அவரது 2 மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    தாரா தனது 2 குழந்தை களை எரித்துக் கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. தாராவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தின ருக்கும் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. இதனால் தாரா தனது கணவரின் வீட்டில் வசிக்காமல், தனியாக வந்து தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

    இந்தநிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தாராவின் கணவர் கிரிஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார். அவர் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு வர இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் சொத்து தொடர்பாக தாரா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே நேற்று பிரச்சினையும் நடந்துள்ளது. அப்போது தாரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    இந்தநிலையில் தான் தாரா தனது குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்தி ருக்கிறார்.

    கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
    • மங்களூரில் இருந்து இன்று 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

    கொல்லம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்த

    னூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.

    போத்தனூா்

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும்.

    தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி

    புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.

    மங்களூரு - திருவனந்தபுரம்

    மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது.
    • கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்குள்ள குழாயை சீர் செய்யும் பணிக்கு இன்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது.

    அதனை பார்த்த தொழிலாளர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட மனித எலும்புக் கூடு பெட்டியில் இருப்பது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியவில்லை.

    அதேநேரம் அது 2 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதனை தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பிய போலீசார், அப்பகுதியில் மாயமானவர்கள் குறித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.
    • நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபு நவாஷ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சேகர் வரவேற்றார். பொதுச்செயலாளர் நயினா முகம்மது அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் துணைத்தலைவர்கள் காதர் மைதீன், லாசர், பசீர் அகம்மது, குலாம் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் நலன் கருதி கொல்லம், கன்னியாகுமரி மெமு ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மார்க்கமாக மும்பைக்கு தினசரி ரெயில் விட வேண்டும், நாகர்கோவில்- நெல்லை பயணிகள் ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பொருளாளர் முகைதீன் என்ற முத்து வாப்பா நன்றி கூறினார்.

    சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    * சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06047), வரும் டிசம்பர் மாதம் 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 2, 7, 9, 14 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    * சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06049), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06027) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 4, 7, 9, 16, 18, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    * கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06050), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06048), வரும் டிசம்பர் மாதம் 4, 11, 13, 18, 20, 27 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 8, 10 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * கொல்லம்-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06028), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 5, 8, 10, 12, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    காலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    ரெயில் வழித்தடத்தில் சரிந்த மணல், ராட்சத பாறாங்கல்லை சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு ஓரிரு நாளில் ரெயில் சேவை இயக்கப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் இடையே அகல ரெயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த பாதையில் தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கனமழை பெய்ததால் கடந்த 15-ந் தேதி இந்த தடத்திலுள்ள நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, எம்செல் தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான ராட்சத பாறைகள் ரெயில் தடத்தில் சரிந்து விழுந்தன. தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கல் விழுந்தது.

    இதையடுத்து தென்னக ரெயில்வே சார்பில் இந்த பாதையில் ரெயில் சேவையை நிறுத்திவைத்தனர். தொடர்ந்து மண்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரெயில் என்ஜினை இயக்கி ரெயில்வே அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். நேற்று 2-ம் கட்டமாக தென்னக ரெயில்வே மதுரைகோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையில் இருப்பு பாதையில் ட்ராலி மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் இன்னும் ஓரிரு நாளில் இந்த தடத்தில் ரெயில் சேவை இயக்கப்படும் என தெரியவருகிறது.

    இந்த ரெயில் சேவையால் பெரும்பாலான வர்த்தக சேவை முற்றிலும் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ரெயில் சேவை தொடங்க உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி விரைவு ரெயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால், மாற்று எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுள்ளது.
    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை கொல்லத்தில் இருந்து ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    மாற்று டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு ரெயில் 2 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் 2 மணிநேரம் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம், ஜூன். 6-

    கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங் கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந் தனர்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்தபோது, அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

    இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங் களை ஆங்காங்கே நடுவழி யில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

    மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத் தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்று விட்டனர்.

    வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்க லாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநிலம் கொல்லம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால மனைவியை விட்டத்தில் தொங்க விட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மாவேலிக்கரை நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (38). இவரது மனைவி அம்புலி (36).

    அனில் குமாருக்கும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அம்புலிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு உருவானது.

    சம்பவத்தன்று வீட்டு வாசலில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அம்புலி தனது கணவரிடம் இளம் பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி உள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அனில் குமார் மனைவியை அடித்து உதைத்தார். இதில் அம்புலி மயக்கம் அடைந்தார்.

    இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து விட்டு வழக்கமாக நடக்கும் சண்டை தான் என அமைதியாக இருந்து விட்டனர். இந்த நிலையில் அனில் குமார் மயங்கி கிடந்த மனைவியை வீட்டிற்குள் தரதரவென்று இழுத்து சென்றார்.

    படுக்கை அறைக்கு இழுத்து சென்ற அவர் மனைவியின் கழுத்தில் கயிற்றால் கட்டி விட்டத்தில் தொங்க விட்டார். இதில் அம்புலி கழுத்து இறுகியது.

    அம்புலியை கணவர் இழுத்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என நினைத்து அங்கு வந்தனர். அவர்கள் அம்புலி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அம்புலி இறந்தார். இது குறித்து நூரநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. செங்கனூர் டி.எஸ்.பி. பினு, மாவேலிக்கரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மனைவியை கொன்ற அனில் குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×