search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LABORER DIES"

    • சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் அபிமன்னன் (46), திருமணம் ஆகாத இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    தகராறு-மோதல்

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி குடிபோதையில் இருந்த அபிமன்னன் பறைவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஓமலூரை சேர்ந்த கருணாநிதி (55) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி அங்கிருந்த வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது ஊற்றினார். இதில் அவரது கை வெந்தது. ஆனாலும் குடி போதையில் இருந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் சுற்றி வந்தார்.

    தொடர்ந்து மருந்து போடாத நிலையில் அபிமன்னன் கை அழுகியதால் வலி தாங்க முடியாமல் அபி மன்னன் துடித்தார். பின்னர் அவரது தாய் பழனியம்மாளிடம் கூறினார். பழனியம்மாள் அவரை நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அபிமன்னன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி கருணாநிதியை தேடி வருகிறார்கள். மேலும் வெந்நீர் ஊற்றியதால் அபிமன்னன் இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   

    • 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ரோப்கயிறு வேகமாக சுற்றியதால் அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே வைரம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் (33). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில் சித்தாளந்தூரை சேர்ந்த கார்த்திக் (32), நவீன்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என டிராக்டர் மூலம் ரோப்பை கட்டி அதன் மூலம் கார்த்திக் மேலே வர முயற்சித்த போது திடீரென ரோப்கயிறு வேகமாக சுற்றியதால், அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது
    • கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் தனியார் செயின் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு வடமாநில தொழி லாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    வடமாநில தொழிலா ளர்கள் தங்குவதற்கு தொழிற்சாலையின் எதிர்புறமும் விடும் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் வடமாநில தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங், தன்ஜெய் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா, தரம்வீர், மகாதேவ் சிங் ஆகிய 5 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் கோவில்பாளை யத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் மற்றும், தன்ஜெய் சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கோவில்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    தரம்வீர், மகாதேவ் ஆகியோர் கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்த சோகம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக அறுவடை எந்திரத்தை வரவ ழைத்தருந்தன.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 23) என்பவர் நெல் அறுக்கும் எந்திரந்தை ஓட்டி வந்தார்.

    நெல் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது திடீரென தினேஷ் குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தினேஷ் குமார் 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் இறந்திருக்கலாம் என கூறுகின்றன.

    மேலும் இது சம்பந்தமாக தினேஷ் குமார் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ேமலும் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை அரும்பார்த்தபுரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை. இவரது கணவர் கார்த்திகேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
    • கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரம் புது தெருவை சேர்ந்தவர் மணிமாலா என்ற மணிமேகலை(வயது39). இவரது கணவர் கார்த்தி

    கேயன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகள் கலைவாணிக்கும் திருமணமாகி பெரிய காட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

    மணிமேகலையுடன் மற்ற இரு மகன்களும், ஒரு மகளும் வசித்து வருகின்றனர். இளைய மகன் கலையரசனுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதனால் கலையரசன் இங்கு இருந்தால் மீண்டும் தகராறு ஏற்படும் என நினைத்து மணிமேகலை கலையரசனை நெற்குன்றத் தில் உள்ள அவரது சகோதரி மகாநதி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கலையரசன் மற்றும் அவரது நண்பர்களான ஜெ.ஜெ.நகரை சேர்ந்த மாடசாமி மற்றும் லேம்பர் சரவணன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர்களுடன் தக்ககுட்டை சுடுகாடு அருகே மது குடித்து கொண்டி ருந்தனர். இதையடுத்து கலையரசனுக்கும் மாடசாமி மற்றும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த தகவல் அறிந்து வந்த மணிமேகலை கலை யரசனை அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்க வில்லை.

    பின்னர் விசாரித்த போது தக்ககுட்டையில் உள்ள ஒரு குளத்தில் யாரோ குதித்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிமேகலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் தீயணைப்பு துறையினர் கலையரசனின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர். இதைய டுத்து மணிமேகலை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    பின்னர் போலீசார் மாடசாமி மற்றும் மணிகண்டன் தாக்கியதில் கலையரசன் பயந்து போய் குளத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
    • இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது45) கூலி தொழிலாளி. இவரது உறவினர்கள் வெள்ளியங்கிரி(42), பழனிச்சாமி(43).சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நேற்று மாலை கோத்தகிரியை அடுத்த கட்டபெட்டு பகுதியில் வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் கிருஷ்ணா புதூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.

    இருசக்கர வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஒரசோலை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் வந்த போது எதிரே வந்த லாரி எதிர் பாரத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நாகராஜுடன் வாகனத்தில் பயணம் செய்த வெள்ளியங்கிரி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருவது குறிப்பிடதக்கது.

    • ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.
    • அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள பெ.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாமோதரன் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.

    வேலை செய்து கொண்டிருந்தபோது தாமோதரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தாமோதரனின் தந்தை ராஜன் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செகுடன்தாளியை சேர்ந்தவர் தனபால் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனபாக்கியம் (34).

    தனபால் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று தனபால் மது போதையில் வீட்டிற்கு வந்தார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனையடுத்து அவர் தனது மனைவியை மிரட்டுவதற்காக விஷத்தை குடித்தார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு வயிறு வலி அதிகமானது. இதனையடுத்து தனபால் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உடனடியாக விரைந்து சென்று தனபாலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருமத்தப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு.
    • திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு (38) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார். அப்போது காரைக்குடி யில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சிட்டிபாபு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிட்டிபாபு உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • டி.கல்லுப்பட்டி அருகே கூலி தொழிலாளி வாகனம் மோதி பலியானார்.
    • ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரி உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது52), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கருப்பசாமி டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது சென்னை தாம்பரம் கணபதிபுரத்தைச் சேர்ந்த ராம்சுந்தர் மகன் பரத் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந் து சென்ற கருப்பசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்பசாமி இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இந்த விபத்து குறித்து கருப்பசாமி மனைவி சண்முகத்தாய் கொடுத்த புகாரின்பேரில் பரத் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×