search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leakage"

    • கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாயக்கழிவுகள் உடலில் படுவதால் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
    • கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் சாலையில் நாகராஜபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த பகுதியானது பேரூர் செல்லும் பிரிவில் உள்ளது. இதனால் நாகராஜபுரம் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும், நாகராஜபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏற வருவார்கள். இந்த பகுதியில் கிருஷ்ணா–ம்பதி குளத்திற்கு செல்லும் ஒரு கால்வாய் உள்ளது. சத்யா காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரும் இந்த கால்வாயில் கலந்து வீரகேரளம் வழியாக குளத்தில் சென்று கலக்கிறது. மேலும் சாயக்கழிவு நீரும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் வழியாக சென்று குளத்தில் கலக்கிறது.

    கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நுரையுடன் வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து நாகராஜபுரம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. அப்படி விழும் நுரையினால் தொற்று நோய் பரவுவதுடன், நுரை பட்டவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டு–கின்றனர். இதுகுறித்து அப்ப–குதி பொதுமக்கள் கூறிய–தாவது:-

    இந்த பகுதியில் உள்ள கால்வாயில் பல ஆண்டுகளாகவே சாயக்கழிவுநீர் வெளியேறி வருகிறது. முதலில் குறைவான அளவிலேயே இருந்தது. இருப்பினும் இதனை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது இந்த கால்வாயில், சாயக்கழிவுநீர் வரத்து அதிகமாக உள்ளது. வெள்ளை நுரையுடன் அதிகளவு வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து அருகே உள்ள குடியிருப்பு மற்றும் பஸ் நிறுத்த பகுதிகளில் வந்து விழுகிறது.

    அப்போது வீட்டில் இருக்கும் மக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது படுகிறது. இதனால் அவர்களுக்கு ஒரு சில நாட்களில் ஒரு வித அரிப்பு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் அந்த பகுதியில் உள்ளது. இதுகுறித்து பல முறை நாங்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இங்கிருந்து செல்லும் சாயக்கழிவு குளத்தில் கலக்கிறது. இதனால் குளத்தில் உள்ள உயிரினங்கள் இறந்து விடுகின்றன. குளத்தின் வளமும் பாதிக்கப்படுகிறது.

    மேலும் இங்கு யார் சாயப்பட்டறை நடத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எனவே அதிகாரிகள் இங்கு சாய பட்டறை நடத்துவது யார்? அனுமதியுடன் தான் நடத்துகிறார்களா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் சாயக்கழிவு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி செட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்து றையினர் தீயை அணைத்தனர்.

    விசாரணையில் பனியன் கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதில் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×