என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "leave"
- துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இமாச்சலபிரதேம் மாநிலம் மண்டியில் விடுமுறை கிடைக்காததால் வீடியோ கால் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு ஒப்புக்கொண்டனர்.
இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தால் வீடியோ கால் மூலம் மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது.
- பெண்ணின் உயிரிழப்புக்கு நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் உழன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது. கடந்த வாரம் புனேவின் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பணிச்சுமை மற்றும் பணியிட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் உ.பியில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் [Samut Prakan] மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே [May] என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 5 முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.
வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேலும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
- சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.
சென்னை:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.
31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.
ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.
எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது
- அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது
திருச்சி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இருப்பினும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய் கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ெ தற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த சுற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்தய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகிறது.
இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது
- மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு.
- வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!
பாடசாலைச் சிறுவர்களுக்கு விடுமுறை என்றால் மகிழ்ச்சி. "டேய்! நாளைக்குப் பள்ளிக்கூடம் லீவுடா" என்று மகிழ்ச்சி பொங்க நண்பனிடம் கூறுகிறான் இக்காலத்துப் பள்ளிச் சிறுவன்.
லீவ் என்பது ஆங்கிலச் சொல். இந்தச் சொல் ஆங்கிலேயரின் சார்பினாலே தமிழ் மொழியில் புதிதாகப் புகுந்தது. லீவ் என்னும் சொல்லுக்குத் தமிழில் விடுமுறை நாள் என்று ஒரு சொல்லை வழங்குகிறார்கள்.
ஆங்கிலேயரின் தொடர்பு இல்லாத பண்டைக் காலத்திலே, தமிழ் சிறுவன் பள்ளிக்கூட விடுமுறை நாளை வாவு என்று சொன்னான்.
"அடே! நாளைக்கு வாவுடா. பள்ளிக்கூடம் இல்லை" என்று அக்காலத்துச் சிறுவன் கூறினான்.
வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு. வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!
உவா என்னும் சொல்லுக்கு நேரான பொருள் விடுமுறைநாள் என்பது அன்று; பௌர்ணமி, அமாவாசை என்பவை தான் அதற்கு நேரான பொருள்.
அதாவது முழுநிலா நாளுக்கும், நிலா முழுதும் மறைந்த நாளுக்கும் உவா என்பது பொதுவான பெயர். பண்டைக் காலத்தில் பௌர்ணமி, அமாவாசை என்னும் சொற்கள் வழக்கத்தில் இல்லை.
முழு நிலா நாளை வெள்ளுவா அல்லது வெளுத்த உவா என்றும், நிலா முழுவதும் மறைந்த நாளைக் காருவா அல்லது கறுத்த உவா என்றும் அக்காலத்தில் பெயர் வழங்கினார்கள்.
பண்டைக் காலத்தில், ஆங்கில ஆட்சிக்கு முன்னே, உவா நாட்களில் அதாவது கறுத்த உவாவாகிய அமாவாசை, வெளுத்த உவாவாகிய பௌர்ணமி நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. ஆகவே, அக்காலத்துப் பள்ளிச் சிறுவர் விடுமுறை நாட்களை உவா நாள் என்று கூறினார்கள். பேச்சு வழக்கில் உவா என்னும் சொல் வாவு என்று திரிந்து வழங்கப்பட்டது.
-அறம் இளம்பரிதி
- கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
- மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆலங்குளம்:
நெல்லை திருமண்டலம் நல்லூர் சேகரம் கரும்புளியூத்து திருச்சபையில் 2023 ஆண்டின் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெற்றது. விடுமுறை காலங்களில் 15 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றன. இந்த வருடத்தின் தலைப்பு "காலம் இதுவே" இதன் அடிப்படையில் 15 நாட்களும், வசனம், வேதாகம கதைகள், உண்மை சம்பவம், பாடல்கள், நடனம் கற்று கொடுக்கப்பட்டன.
மேலும் விதவிதமான குளிர்பானங்கள், உணவு கொடுக்கப்பட்டது. இதை முன்னின்று வக்கீல்கள் ரமேஷ், சதீஷ்குமார் மற்றும் பிரபா, ஷர்மிளா, பால்டுவின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 8-வது நாள் தியான சுற்றுலாவாக தோட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உணவு மற்றும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு மகிழ்ச்சியாக விளையாடினர்.
10-வது நாள் இன்ப சுற்றுப்பயணமாக அழைத்து செல்லப்பட்டது. கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சேகர தலைவர் பிரே ஜேம்ஸ் மற்றும் கரும்புளியூத்து திருமண்டல சபை ஊழியர் ஜாண் பிரேம் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கரும்புளியூத்து சபைமக்கள், தொழிலதிபர்கள் திருவெங்கடேஷ் ஜாஸ்வா மற்றும் செல்வராணி உரிமையாளர் பிரின்ஸ் தங்கம் நன்கொடை வழங்கினார்கள்.
- நார்த்தாமலை முத்துமாரியம்மன் ேகாவில் தேர்த்திருவிழா: நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
- 29ம்தேதி வேலை நாளாக அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும் அதற்கு பதிலாக 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணிநாள் ஆகும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலகள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
- சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொழில் உள்பட முக்கிய நகரங்கள் இடையிலும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவும் முடிந்துள்ளது.
சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து துைற அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு நாளில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விடுமுறையில் சென்றவர்களில், மருத்துவ விடுமுறை தவிர மற்ற விடு முறைகள் ரத்து செய்யப்பட்டு, இன்று பணியில் இணைய போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை வைத்துள்ளார்.
- வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனிமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை கூறியிருப்பதாவது:-
வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். அன்று பெரும்பாலானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று பண்டிகையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர்.
வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-ந் தேதி அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்தால் பெற்றோர்களும், மாணவர்களும் ஊர் திரும்புவதற்கு வசதியாக அமையும். பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்