என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LIC"
- எல்.ஐ.சி. இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப் பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், அஞ்சல்துறை, தகவல் தொடர்புத்துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளிலும் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
இந்தி பேசாத மக்களுக்கு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கும், அதனைத் தொடர்ந்து பிறகு பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சிமொழிச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமாகவும் இந்தி பேசாத மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதையெல்லாம் மீறுகிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
எனவே, பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்தி திணிப்பை தடுக்கின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!"
"இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் ஏமாற்ற எவ்வளவு தைரியம்? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
- பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
- இதையடுத்து வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாலும், சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்விக்னேஷ் சிவன்.
- அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது.
பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். இப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்.
கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூலை 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
- சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எல்ஐசியின் சொத்து மதிப்புரூ.51,21,887 கோடியை எட்டியுள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசியின் சொத்துமதிப்பு ரூ.43,97,205 கோடியாக இருந்தது.
எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எல்ஐசியின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு (ஒய்ஒய்) 16.48% அதிகரித்து மார்ச் இறுதிக்குள் ரூ.51,21,887 கோடியை (616 மில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.43,97,205 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
2024 நிதியாண்டில் எல்ஐசி ரூ.40,676 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்ஐசியின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.4,75,070 கோடியாகும். இந்த நிதியாண்டில் பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955.87 கோடியை போனஸாக எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- டெல்லி கணேஷ் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பா லாக் என்ற குறும்படம் யுடியூபில் வைரலானது
- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்
டெல்லி கணேஷ் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பா லாக் என்ற குறும்படம் யூ டியூபில் வைரலானது . பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
கோமாளி படம் ஜெயம் ரவிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. கோமாளி படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பும், ரசிகர் பட்டாளமும் உருவாகியது.
பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி மற்றும் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மக்களிடம் இந்த திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் மிக பெரிய அளவில் குவித்தது.
தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிருதி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கவுரி ஜி கிஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸிடம் சம்பளம் 10 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
- பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
சென்ஷேசன், குட்டி ஸ்டார் ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலமானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பீ-ரெடி மியூசிக் நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், முதல் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.
முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
- அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது. படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவர்களின் ஜோடி மிக அழகாக திரையில் பிரதிபலித்து இருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.
கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அனீருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக விக்னேஷ் சிவன், அவரின் மகனான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
- அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.
நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.
மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த அன்புக்கு மிக்க நன்றிகள் விக்னேஷ் சிவர் சார், லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் எனது முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன். எனது பெர்ஃபார்மன்சில் நீங்கள் எதிர்பார்த்தவைகளை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆவலாக எதிர்நோக்குகிறேன். காட்சிக்கு நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கொடுத்திருக்கும் தோற்றம் வாவ் சொல்ல வைக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
Thank you so much for this love Director @VigneshShivN sir ????? #LoveInsurenceCompany 1st day shoot (of mine in LIC) I enjoyed like anything ?????the nuances U demanded in my performance while shooting I really loved it ??? looking forward for further shooting… pic.twitter.com/r0cEWCi8HK
— S J Suryah (@iam_SJSuryah) February 11, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்