search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Licensing"

    • லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
    • ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் மாடசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப் பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75 இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அந்த இடங்களில் இன்னும் 2 நாட்களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை 183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார்.

    • வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடி நபி.
    • விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி தினம் மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடிநபி தினம் ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
    • 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×