என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Local Elections"
- நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
- ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளுக்கு இடையூறு இன்றி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.
இலங்கையில் நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் இலங்கையை ஆளும் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.
எதிர்கட்சிகள், சமூக குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. விசாரணையை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதற்காக இலங்கை அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது.
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது, தாமதப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது.
எனினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதையை ஒதுக்க இலங்கை அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மற்ற தேர்தல் ஏற்பாடுகளை பாதிக்காத அளவுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
- உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.
அதேபோல் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மேலும் இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
- இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கொழும்பு:
இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.
இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர்.
- வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு– 4, நம்பியூர் யூனியன் கெட்டி செவியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்– 4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்– 11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 1, புஞ்சைளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்– 3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண் –2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதுதவிர அம்மா பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 2 பேர், கோபிசெட்டி பாளையம் யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண் –1-ல் 2 பேர்,
மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்– 1-ல் 4 பேர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்– 2-ல் 3 பேர் என 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.
இந்த பகுதியில் வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குளம் பழனிச்சாமி, சந்திரசேகர், வட்டார தலைவர்கள் நடராஜ், ஆண்ட முத்துசாமி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரவி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஆர்.எம்.பழனிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் வினோத், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கலா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் லோகேஸ்வரன், விஜய், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-
அக்டோபர் 2-ம் தேதி அன்று காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியைக் ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது அன்று நடைபெறக்கூடிய கிராமசபை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட செய்வது கிராமசபை கூட்டத்தில் உள்ளூரில் நிலவும் பிரச்சினைகளை மையப்படுத்தி அதை சரிசெய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற செய்ய வேண்டும்.
அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெறக்கூடிய திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பூத் கமிட்டி அமைக்காத பகுதிகளில் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
தியாகி குமரனுக்கு சென்னிமலையில் அவர் பிறந்த வீட்டை மணிமண்டபம் கட்டி அரசு விழா தொடர்ந்து நடக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜா சத்தியமூர்த்தி நன்றி கூறினார். #Congress
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 70 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் 69 நபராக ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார்.
அப்போது திடீரென வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை கைது செய்தனர். 68 பேர் வாக்களித்த நிலையில் திடீரென மை வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாள் நடைபெறும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #CooperativeElection
சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 9.24 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களின் நலன் கருதி மண்டல கமிஷன் பல பரிந்துரைகளை செய்துள்ளன. அதில், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சாயத்தை, தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால், பஞ்சாயத்து வார்டு வரையறை கமிஷன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நெய்தல் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு 1980-ம் ஆண்டு முதல், அனைத்து மீனவர் கிராமங்களை உள்ளடங்கிய தனி கிராம பஞ்சாயத்து வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
வார்டு வரையறை கமிஷன் தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்துக்கொண்டே வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில், கூட்டாம்புளி கிராமத்தில் 6 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இந்த ஊரை லெவஞ்சிபுரம் பஞ்சாயத்தோடு இணைத்துவிட்டனர். இதனால் மீனவ கிராம மக்களுக்கு ஜனநாயக ரீதியாக உள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஏற்கனவே, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
அதேநேரம், அவர்களது சொந்த கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்காதது, மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்கும்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர், இயக்குனர், வார்டு வரையறை கமிஷனின் தலைவர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்