என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Logistics"

    • அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.
    • மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட பழுதடைந்த மரம் மற்றும் இரும்பினால் ஆன அலுவலக தளவாட பொருட்கள் (நாற்காலி, மேஜை, பீரோ போன்றவைகள்) பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பழுதடைந்த அலுவலக தளவாட பொருட்களின் விபர பட்டியல் இதனடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பழுதடைந்துள்ள அலுவலக தளவாட பொருட்களின் விவரப்பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் இன்றிலிருந்து 15 தினங்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு மேற்படி தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீட்டு பட்டியலை தனிக்கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 12.12.2022-க்குள் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், 12.12.2022-ம் தேதிக்கு பின்வரும் இப்பொருள் தொடர்பான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.

    மேற்படி அலுவலக தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு கேட்பு செய்த நபர் உடனடியாக அந்த தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்து க்கொள்ள வேண்டும்.

    மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும். இந்த தளவாடப் பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது.
    • தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த உலகப் பணக்காரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், துறைமுகம்,விமானம், சோலார் உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருவதால் கடந்த 10 ஆண்டுகளாக கவுதம் அதானியின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்துடன் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

    அதாவது இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது.

    முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் EDGE குழுமத்துடன் அதானி குழுமம் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
    • 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணி தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறையினர் 2 லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு சென்றனர்.

    வல்லக்கடவு சோதனைச்சாவடியில் கேரள வனத்துறையினர் லாரிகளை தடுத்து நிறுத்தி அணைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர் கேம்பில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.

    ஆனால் கேரள அரசு இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லாரிகளை அனுமதிக்காததால் 4 நாட்களாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கேரள அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வல்லக்கடவு பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அணை பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அனுமதித்திருக்க வேண்டும்.

    ஆனால் 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே இன்று மாலைக்குள் தளவாட பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழையில் காட்டாற்று வெள்ளத்தில் தளவாடபொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
    • இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது. மேலும் காட்டுமன்னா ர்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அதைசுற்றியுள்ள பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீமுஷ்ணம் புலியூர் அருகே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாலத்தின் வேலை நின்றது. இந்த பாலம் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து விருத்தாச்சலத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. 

    மேலும் இந்த பாலம் வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரெட்டியார்பேட்டை, வெள்ளிக் கரணை, நாச்சியார் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இந்த பாலத்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

    ×